Advertisment

News Highlights: ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு 5 ஆண்டுகள் அதிகரிப்பு

தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
New Update
News Highlights: ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு 5 ஆண்டுகள் அதிகரிப்பு

Tamil Nadu updates : முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான 43 இடங்களில் இன்று காலையில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இந்த சோதனை 6 மாவட்டங்களில் அவருக்கு சொந்தமான அலுவலகங்கள், கட்டிடங்கள், மற்றும் வீடுகளில் நடைபெற்று வருகிறது. அவரது மனைவி ரம்யா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இது தொடர்பான முழுமையான செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள

பெட்ரோல் டீசல் விலை

சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை தொடர்ந்து வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 103.01க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் டீசல் ரூ. 98.92க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

weather updates

கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பத்தூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு. புதுவை, காரைக்காலின் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு. கன்னியாகுமரியில் தொடர் மழை பெய்து வரும் காரணத்தால், வெள்ள நீரால் சூழப்பட்டுள்ள பகுதிகளில் இருக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர்.

கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவுக்கு காரணம் என்ன?

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 22:04 (IST) 18 Oct 2021
    ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை 5 ஆண்டுகளாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு

    ஆசிரிரியர் பணிக்கான வயது வரம்பை 5 ஆண்டுகளாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பொதுப்பிரிவினருக்கு 40லிருந்து 45 ஆண்டுகளாகவும், இதர பிரிவினருக்கு வயது வரம்பு 45லிருந்து 50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு டிசம்பர் வரையிலான ஆசிரியர் பணி நியமனங்களுக்கு இந்த வயது வரம்பு பொருந்தும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


  • 22:01 (IST) 18 Oct 2021
    லஞ்ச ஒழிப்பு சோதனையை சட்டரீதியாக எதிர்கொள்வேன் - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

    முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்: “லஞ்ச ஒழிப்பு சோதனையை சட்டரீதியாக எதிர்கொள்வேன். இதுபோன்ற சோதனைகளை ஏற்கனவே சந்தித்துள்ளோம்; இதையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். பிற ஊர்களிலும் சோதனைகள் நடைபெறுவதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். எனக்கு ஆதரவு தெரிவித்த ஈபிஎஸ், ஓபிஎஸ், அதிமுக தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனது வீட்டில் இருந்து பணமோ,பொருட்களோ பறிமுதல் செய்யப்படவில்லை ” என்று தெரிவித்துள்ளார்.


  • 22:00 (IST) 18 Oct 2021
    லஞ்ச ஒழிப்பு சோதனையை சட்டரீதியாக எதிர்கொள்வேன் - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

    முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்: “லஞ்ச ஒழிப்பு சோதனையை சட்டரீதியாக எதிர்கொள்வேன். இதுபோன்ற சோதனைகளை ஏற்கனவே சந்தித்துள்ளோம்; இதையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். பிற ஊர்களிலும் சோதனைகள் நடைபெறுவதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். எனக்கு ஆதரவு தெரிவித்த ஈபிஎஸ், ஓபிஎஸ், அதிமுக தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனது வீட்டில் இருந்து பணமோ,பொருட்களோ பறிமுதல் செய்யப்படவில்லை ” என்று தெரிவித்துள்ளார்.


  • 21:58 (IST) 18 Oct 2021
    தேர்தல் வாக்குறுதியில் கூறியது போலவே முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை - சேகர் பாபு

    “தேர்தல் வாக்குறுதியில் முதலமைச்சர் கூறியது போலவே, தற்போது முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடைபெறுகிறது; தவறு செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு” என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.


  • 21:54 (IST) 18 Oct 2021
    சிபிஎஸ்இ 10ம் வகுப்பு முதல் பருவ பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

    சிபிஎஸ்இ 10ம் வகுப்பு முதல் பருவ பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.


  • 20:34 (IST) 18 Oct 2021
    கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளைச் சார்பில் 1 கோடி ரூபாய் நிதி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    கேரளாவில் வெள்ளத்தால் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் மக்களுக்கு ஆதரவு அளித்திடும் வகையில் கேரள மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளைச் சார்பில் 1 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


  • 19:28 (IST) 18 Oct 2021
    லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: விஜயபாஸ்கர் வீட்டில் 4,800 கிராம் தங்கம் பறிமுதல் என தகவல்

    விஜயபாஸ்கர் வீட்டில் 12 மணி நேரமாக தொடரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் 4,800 கிராம் தங்கம், 3.75 கிலோ வெள்ளி, ரூ.23.82 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய 48 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.


  • 18:43 (IST) 18 Oct 2021
    இல்லம் தேடி கல்வி புதிய திட்டம் தொடக்கம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

    பள்ளிக்கல்வித்துறை சார்பில் "இல்லம் தேடி கல்வி" என்ற புதிய திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று தன்னார்வலர்கள் மூலம் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திட்டத்திற்கான விழிப்புணர்வு வாகனங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.


  • 17:20 (IST) 18 Oct 2021
    கொலை வழக்கில் தேரா சச்சா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை

    2002 கொலை வழக்கில் தேரா சச்சா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது


  • 17:19 (IST) 18 Oct 2021
    கொலை வழக்கில் தேரா சச்சா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை

    2002 கொலை வழக்கில் தேரா சச்சா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது


  • 17:01 (IST) 18 Oct 2021
    4 பந்துகளில் 4 விக்கெட்டுகள்; அயர்லாந்து பந்துவீச்சாளர் சாதனை

    டி20 உலகக்கோப்பையில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை சாய்த்து அயர்லாந்து பந்துவீச்சாளர் கர்டிஸ் காம்பர் சாதனைப் படைத்துள்ளார்


  • 16:51 (IST) 18 Oct 2021
    கனமழை பாதிப்பு; அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பாதிப்புகளை பார்வையிட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.


  • 16:50 (IST) 18 Oct 2021
    கனமழை பாதிப்பு; அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பாதிப்புகளை பார்வையிட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.


  • 16:19 (IST) 18 Oct 2021
    தமிழநாடு மருத்துவர் சங்க தலைவர் செந்தில்குமாருக்கு சொந்தமான மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் அமைந்துள்ள தமிழநாடு மருத்துவர் சங்க தலைவரும், தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் உறுப்பினருமான செந்தில்குமாருக்கு சொந்தமான தனியார் மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வருகிறது


  • 16:12 (IST) 18 Oct 2021
    முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் நடைபெறும் ரெய்டுக்கு அதிமுக கண்டனம்

    முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் நடைபெறும் ரெய்டுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்ற பெயரில் திமுக அரசு தனது பழிவாங்கும் நடவடிக்கையை தொடர்வது கண்டனத்திற்குரியது என ஒபிஎஸ்-இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்


  • 15:40 (IST) 18 Oct 2021
    தேர்தல் செலவுகளை தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் மீது நடவடிக்கை - மாநில தேர்தல் ஆணையம்

    தேர்தல் செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை என மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது


  • 15:15 (IST) 18 Oct 2021
    விஜயபாஸ்கருக்கு சொந்தமான மேலும் ஐந்து இடங்களில் ரெய்டு

    முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான மேலும் ஐந்து இடங்களில் லஞச் ஒழிப்புத்து துறை சோதனையை தொடங்கியுள்ளது. ஏற்கனவே, 43 இடங்களில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.


  • 15:04 (IST) 18 Oct 2021
    காவல் ஆணையர் சங்கர் ஜிவால் டிஜிபியாக பதவி உயர்வு

    சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. டிஜிபியாக பதவி உயர்வு பெற்றாலும், சங்கர் ஜிவால் காவல் ஆணையராக பணியை தொடருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், வீட்டு வசதி வாரியத்துறை ஏடிஜிபி ஏ.கே. விஸ்வநாதன், ஆபாஷ்குமார், ரவிச்சந்திரன், சீமா அகர்வால் ஆகியோருக்கும் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.


  • 14:59 (IST) 18 Oct 2021
    காவல் ஆணையர் சங்கர் ஜிவால் டிஜிபியாக பதவி உயர்வு

    சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. டிஜிபியாக பதவி உயர்வு பெற்றாலும், சங்கர் ஜிவால் காவல் ஆணையராக பணியை தொடருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


  • 14:54 (IST) 18 Oct 2021
    காவல் ஆணையர் சங்கர் ஜிவால் டிஜிபியாக பதவி உயர்வு

    சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. டிஜிபியாக பதவி உயர்வு பெற்றாலும், சங்கர் ஜிவால் காவல் ஆணையராக பணியை தொடருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


  • 14:54 (IST) 18 Oct 2021
    காவல் ஆணையர் சங்கர் ஜிவால் டிஜிபியாக பதவி உயர்வு

    சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. டிஜிபியாக பதவி உயர்வு பெற்றாலும், சங்கர் ஜிவால் காவல் ஆணையராக பணியை தொடருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், வீட்டு வசதி வாரியத்துறை ஏடிஜிபி ஏ.கே. விஸ்வநாதன், ஆபாஷ்குமார், ரவிச்சந்திரன், சீமா அகர்வால் ஆகியோருக்கும் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.


  • 14:08 (IST) 18 Oct 2021
    தீபாவளி ரேசிலிருந்து பின்வாங்கியது சிம்புவின் மாநாடு

    சில காரணங்களுக்காக ஏன் என் படமும் அதன் வெற்றியும் பலியாக வேண்டும்? அதனால் 'மாநாடு' தீபாவளிக்கு வெளிவராமல் சற்று தள்ளி வெளியாக உள்ளது. நவம்பர் 25ஆம் தேதி படம் வெளியாகும் என அப்தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.


  • 13:46 (IST) 18 Oct 2021
    நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேஸா பி சிங்கிற்கு கொரோனா

    நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.


  • 13:42 (IST) 18 Oct 2021
    'வேலைநிறுத்த காலம் பணிக்காலமாகிறது - தலைமை செயலாளர் உத்தரவு

    2016,17 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்ற அரசு ஊழியர்கள் போராட்ட காலங்கள், தற்காலிக பணி நீக்க காலங்கள் பணிகாலமாக முறைப்படுத்தப்படும். போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் வாபஸ் செய்யப்படும் என தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.


  • 13:28 (IST) 18 Oct 2021
    வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் திட்டம்

    1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் திட்டம் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார்.


  • 13:04 (IST) 18 Oct 2021
    சோதனை இடத்தில் அமைச்சர்கள்

    சென்னை, டெய்லர்ஸ் சாலையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறும் சி.விஜயபாஸ்கர் வீட்டிற்கு முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் வருகை தந்துள்ளனர்.


  • 13:03 (IST) 18 Oct 2021
    போராட்ட காலங்கள் பணிகாலமாக முறைப்படுத்தப்படும்

    2016,17 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்ற அரசு ஊழியர்கள் போராட்ட காலங்கள், தற்காலிக பணி நீக்க காலங்கள் பணிகாலமாக முறைப்படுத்தப்படும் என்று தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.


  • 12:41 (IST) 18 Oct 2021
    அசைவ பிரியர்களுக்காக தடுப்பூசி முகாம்

    தமிழகத்தில் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக 23-ம் தேதி சனிக்கிழமை 6-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், அசைவ பிரியர்கள், மது குடிப்போர் ஞாயிற்றுக்கிழமை முகாம்களில் பங்கேற்காமல் இருக்கிறார்கள் என்றும் அசைவம், மது எடுத்துக்கொண்டால் தடுப்பூசி செலுத்தக் கூடாது என்ற வதந்திகளை நம்புகிறார்கள், இது தவறு என்றும் குறிப்பிட்டார்.


  • 12:03 (IST) 18 Oct 2021
    விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு

    விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கும் திட்டத்தை, சென்னை, தலைமை செயலகத்தில் 10 விவசாயிகளுக்கு காப்பீடு தொகை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


  • 10:53 (IST) 18 Oct 2021
    கேரள நிலச்சரிவு - பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு

    கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. மாநில மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


  • 10:48 (IST) 18 Oct 2021
    பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனை

    ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளியான பேரறிவாளன் தற்போது பரோலில் வெளியே வந்துள்ளார். அவருக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் பேரறிவாளனுக்கு சிடி ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்டது


  • 10:47 (IST) 18 Oct 2021
    நடமாடும் பல் மருத்துவ சேவை தொடக்கம்

    சென்னையில் மக்களை தேடி பல் மருத்துவம் என்ற பெயரில் நடமாடும் பல் மருத்துவ வாகன சேவை துவங்கப்பட்டுள்ளது. நடமாடும் பல் மருத்துவ வாகனம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு பல் பரிசோதனை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 53 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.


  • 10:44 (IST) 18 Oct 2021
    விஜயபாஸ்கரிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை

    சென்னை கீழ்பாக்கத்தில் வருமானத்திற்கு அதிகமாஅ சொத்துக் குவித்த வழக்கில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை


  • 10:02 (IST) 18 Oct 2021
    பாபுல் சுப்ரியோ பதவி விலகல்

    மத்திய வனத்துறை இணை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த பாபுல் சுப்ரியா, அமைச்சரவை விரிவாகத்தின் போது பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தன்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.


  • 09:36 (IST) 18 Oct 2021
    கோவாக்சினுக்கு WHO அங்கீகாரம்

    முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி கோவாக்சினுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்குமா என்பது தொடர்பான முடிவு வருகின்ற 26ம் தேதி அன்று எடுக்கப்படுகிறது.


  • 08:57 (IST) 18 Oct 2021
    1.75 லட்சம் மடிக்கணினிகளை வழங்க ஏற்பாடு

    பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக கணினிகள் வழங்கப்படாத காரணத்தால் அம்மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


  • 08:27 (IST) 18 Oct 2021
    கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது

    ஜூன் 2020ல் இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்றில் யுவராஜ் சிங், ரோஹித் சர்மா சாஹலின் டிக்டாக் வீடியோக்கள் குறித்து பேசினார்கள். அப்போது சாஹல் சாதி குறித்து யுவராஜ் அவதூறாக பேசியது விமர்சனத்துக்கு ஆளானது. ஹரியாணாவில் தலித் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் கீழ் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் யுவராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர். நேற்று இரவு யுவராஜ் கைது செய்யப்பட்டு பிறகு, நீதிமன்ற உத்தரவின் பேரில் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.


Tamil Nadu Chennai High Court Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment