Flash News in Tamilnadu Today Updates : குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, தி.மு.க., கூட்டணி சார்பில், வரும், 23ம் தேதி, சென்னையில் பேரணி நடத்தப்படுகிறது.சென்னை, அறிவாலயத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடந்தது. குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும், ஒருமித்த கருத்துள்ள கட்சிகள், விவசாய அமைப்புகள், தமிழ் அமைப்புகள் அனைத்தையும், அழைத்து பேசி, அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவெடுப்போம்.இவ்வாறு, ஸ்டாலின் பேசியுள்ளார்.
சி.ஏ.ஏ-க்கு எதிராக தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்…
உள்ளாட்சித் தேர்தலில் எப்படியாவது தடை வாங்க முடியுமா என, தி.மு.க., முயற்சிப்பது, இத்தேர்தலில் போட்டியிட, அது பயப்படுவதையே காட்டுகிறது,” என, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். தேர்தலை எப்படியாவது நடத்த விடக்கூடாது என்பதில், தி.மு.க., கண்ணும் கருத்துமாக உள்ளது. திரும்ப திரும்ப கோர்ட்டுகளில் முறையீடு செய்து, தடுக்கப் பார்த்தது.தி.மு.க.,வின் இந்த அணுகுமுறை, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு அக்கட்சிக்கு பயம் ஏற்பட்டுள்ளது என்பதையே காட்டுகிறது. லோக்சபா தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்றதை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. மக்கள், தேர்தலுக்கு தேர்தல், வித்தியாசமாகவே ஓட்டளிக்கின்றனர். அதன்படி, சட்டசபை தேர்தல் வந்தால், மக்கள் எப்போதுமே அ.தி.மு.க.,வைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். இது உறுதி. குடியுரிமை சட்டத்தை ஆதரித்து ஓட்டுப்போடும்படி, தலைமை தான் அறிவுறுத்தியது. அதிகாரி சார்பில், அ.தி.மு.க., – எம்.பி.,க்களுக்கு உத்தரவுபோடப்பட்டதாக கூறப்படுவது தவறு.இவ்வாறு, பன்னீர்செல்வம் கூறினார்.
Live Blog
Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
நித்யானந்தாவை கண்டுபிடித்து தரக்கோரி, சி.பி.ஐ., மற்றும் இன்டர்போல் அதிகாரிகளுக்கு, கர்நாடக சி.ஐ.டி., போலீசார் கடிதம் எழுதினர். மேலும், அவரை சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, இருப்பிடம் அறிந்து தெரிவிக்க கோரி, நித்யானந்தாவுக்கு எதிராக, ‘புளு கார்னர் நோட்டீஸ்’ வழங்கவும் கோரப்பட்டுள்ளது.
Highlights
ரஜினிகாந்த் தனது ட்விட்டரில், “எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
விவசாயக் கடனுக்கான மானியத்தை ரத்து செய்து, வட்டியை 7 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது கண்டனத்திற்குரியது – திமுக தலைவர் ஸ்டாலின்
வேளாண் கடனுக்கான மானியத்தை கட்டாயம் நீடிக்க வேண்டும், வட்டியை உயர்த்தக் கூடாது – ஸ்டாலின்
தமிழகத்தில் ஊரக அமைப்புகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வரும் 27-ம் தேதி மற்றும் 30-ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து, இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.
இந்நிலையில், பொங்கல் பரிசு வழங்க தடை விதிக்கக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கவில்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
‘ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பொங்கல் பரிசு வழங்க அனுமதி அளிக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளோம். இதற்கு தேர்தல் ஆணையம் இன்னும் பதில் அளிக்கவில்லை.’ என தமிழக அரசு கூறியுள்ளது.
தமிழக அரசு விளக்கம் அளித்ததையடுத்து, இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக முதல்வர் ஆலோசனை
சட்டம்-ஒழுங்கு விவகாரம், இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை பற்றி ஆலோசனை எனத் தகவல்
சென்னை வேளச்சேரியில் வங்கி ஏடிஎம்மிற்கு பணம் நிரப்ப வந்தபோது ரூ.52 லட்சத்துடன் ஓட்டுநர் தப்பினார்
* ஊழியர்கள் 3 பேர் பணம் நிரப்பிக் கொண்டிருந்த போது காரில் இருந்த ரூ.52 லட்சத்துடன் ஓட்டுநர் தப்பினார்.
குடியுரிமை சட்டதிருத்த மசோதா எதிர்ப்புப் போராட்டங்களை முன்னிட்டு, டெல்லியில் சில பகுதிகளில் செல்போன் சேவை நிறுத்தம். அரசின் கோரிக்கையின் படி சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக செல்போன் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
குழிபறிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரையில் நமது போராட்டம் தொடர வேண்டும்
பல்வேறு கட்சிகள், விவசாய அமைப்புகள், வணிகர் சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
பிரிவினை இல்லாத இந்தியா, வன்முறை இல்லாத இதயம் தேவை மாணவர்களின் குரல்களை நசுக்க கூடாது – சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் பார்த்திபன் பேச்சு
144 தடை உத்தரவால் அமைதியான போராட்டங்களை ஒடுக்குவது நாட்டின் ஆன்மாவை அவமதிக்கும் செயல்
கல்லூரிகளை மூடுவதற்கும், இணையத்தை முடக்குவதற்கும், மெட்ரோ ரயிலை நிறுத்துவதற்கும் அரசுக்கு உரிமையில்லை
– ராகுல் காந்தி
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக அதிமுக அரசு தன் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்
– திருமாவளவன் எம்.பி.
டெல்லியில் இன்றிரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி
நிலுவையிலுள்ள தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து அமித் ஷாவிடம் முதல்வர் பேச வாய்ப்புள்ளதாக தகவல்
புதுக்கோட்டை மணமேல்குடி ஒன்றிய அலுவலகத்தில் திமுக, அதிமுகவினர் இடையே மோதல் – 8 பேர் காயம்.
உள்ளாட்சி தேர்தல் இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஆயத்தப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேநேரம் பல உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர் பதவிகளுக்கு பலரும் போட்டியின்றி தேர்வாகி வருகின்றனர். குலுக்கல் முறையில் தேர்வானார்களா..? அல்லது மக்கள் ஆதரவா என்பது புரியாத புதிராகவே உள்ளது. இதனிடையே, பல்வேறு பகுதிகளில் குலுக்கல் முறையில் தலைவர்கள் தேர்வாகும் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சித்தார்த், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஜெயலட்சுமி. இந்த மாணவி தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய விண்வெ ளி குறித்த ஆன்லைன் தேர்வில் கலந்து கொண்டார். இதில் அவர் இரண்டாம் இடத்தை பிடித்து தேர்வாகி உள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த தனியார் தொண்டு நிறுவனம் அவரை விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா விற்கு அழைத்துச் செல்ல உள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் அமெரிக்காவுக்கு செல்ல மாணவியிடம் பணம் இல்லை என்று தகவல் வெளியானதை அடுத்து பல்வேறு அமைப்பினர் சார்பில் அவருக்கு நன்கொடைகளை அளித்து வருகின்றனர். குறிப்பாக ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் 67 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி முன்னிலையில் அந்த மாணவியிடம் அந்த நிறுவனம் ஒப்படைத்தது.
கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் தடையை மீறி குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலவரம் வெடித்தது
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியும் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியும் கலைத்தனர்.
தொடர்ந்து பதட்டமான சூழல் காரணமாக மங்களூருவில் மூன்று காவல்நிலையம் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிரபித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
வெள்ளிக்கிழமை இரவு வரை அறிவிக்கபட்டுள்ள பகுதியில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உத்தரவு.
ஜனநாயக நாட்டில் அகிம்சை முறைப்படி போராட்டம் நடத்தினால் பிரச்னை ஏற்படாது. குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் இந்தியாவில் வாழும் இந்தியர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இலங்கை வாழ் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை என்பதே எங்களின் கொள்கை. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தல் உறுதியாக நடைபெறும். குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் உள்ளாட்சி தேர்தலில் எந்த பாதிப்பும் வராது
முதல்வர், துணை முதல்வர் ,தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த புகாரில் பெண் கைது
கைதான பார்வதி, பெரியநாயக்கன்பாளையம் அதிமுக ஒன்றிய மகளிர் அணியின் முன்னாள் தலைவி ஆவார்
முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் இசையமைப்பாளர் பரத்வாஜ்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் உள்துறை அமைச்சகம் டெல்லியில் ஆலோசனை
உள்துறை செயலர், உளவுத்துறை உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்பு
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திமுக சார்பில் வரும் 23ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள பேரணியில் கலந்துகொள்ள வருகை தருமாறு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு, திமுக நேரில் அழைப்பு விடுத்துள்ளது. இந்த பேரணியில், மக்கள் நீதி மய்யம் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2019ம் ஆண்டிற்கான போர்ப்ஸ் இந்தியா பத்திரிகையின் 100 பிரபலங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களது வருவாய் மற்றும் புகழை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பட்டியலின் முதலிடத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், 5வது இடத்தில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் உள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் 13வது இடத்தை பிடித்துள்ளார். இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் 16வது இடத்தையும், நடிகர் விஜய் 47வது இடத்தையும் பிடித்துள்ளார். நடிகர் அஜித் 52வது இடத்தையும், கமல் 56வது இடத்தையும் , தனுஷ் 64வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
அதேபோல், இயக்குநர் ஷங்கர், சிவா, கார்த்திக் சுப்பாராஜ் ஆகியோரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
வாக்காளர்களின் காலில் விழ கூச்சமோ வெட்கமோ பட கூடாது என வேட்பாளர்களுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ வேண்டுகொள் விடுத்துள்ளார். மதுரை மேலூரில் அதிமுக கூட்டத்தில் பேசிய அவர், பெண் வேட்பாளர்கள் வாக்காளர்களின் வீட்டு சமையலறை வரை நுழைந்து ஓட்டு கேட்க வேண்டும் என்றும் அன்பு கட்டளை இட்டுள்ளார்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்கமாட்டோம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களுக்கு மட்டும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. டில்லி செங்கோட்டை பகுதியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியா கேட், சீலாம்பூர் , ஐடிஓ உள்ளிட்ட பலபகுதிகளில் மொபைல் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டுத்தினை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக 4 தேசிய விருதுகள் உள்பட மொத்தம் 12 விருதுகள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டது. இந்த விருதை மத்திய பஞ்சாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் இருந்து தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பெற்றுக் கொண்டார்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியது தொடர்பாக, டில்லியில் யோகேந்திர யாதவ்வும், பெங்களூருவில் ராமச்சந்திர குஹாவும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது சம்பவத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் இந்தியா தங்களுக்கு துணையாக நிற்கும் என்று டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் மீது ஊழல் வழக்கு தொடரப்படுவது கவலையளிக்கிறது ஊழல் வழக்கு நம்முடைய நாகரீகத்தின் மீதுள்ள கறையாகும்; இது ஒருபோதும் நிகழக்கூடாது என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் போராட்டம் நடத்திய வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா உள்ளிட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் வெற்றி பெற கூடாது என்பதற்காக ஜனநாயக கட்சியினர் செய்த சூழ்ச்சி தான் தன் மீதான பதவி நீக்க தீர்மானம் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டு உள்ளனர்.
பேராசிரியர் – பொதுச்செயலாளர் மட்டுமல்ல; எனது பெரியப்பா! நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் முதுபெரும் தந்தை, இனமானம் – தன்மானம் ஊட்டிய தாய்; இயக்கம் நடத்த வழிகாட்டிய அண்ணன்! 98-வது பிறந்தநாளில் பேராசிரியர் பெருந்தகையை, வணங்கி, வாழ்த்தி மகிழ்கிறேன்! என்று திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கேந்திரிய மற்றும் நவோதயா பள்ளிகளில் ஓபிசி இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
கேந்திரிய வித்யாலயா, ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு தீர்மானித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பள்ளிகள் அளவில் OBC இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்படுவது புரட்சிகரமான செயலாகும். வாழ்க சமூகநீதி!
பள்ளிகள் நிலையில்OBC இடஒதுக்கீட்டை அறிமுகம் செய்யவுள்ள மத்திய அரசு, மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு ளிஙிசி இடஒதுக்கீடு இல்லை என்ற குறையை போக்க வேண்டும். அந்த இடங்களுக்கும் OBC இடஒதுக்கீட்டை அறிமுகம் செய்து சமூகநீதியைக் காப்பாற்ற வேண்டும்! என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
டில்லியில் உருளைக் கிழங்கின் விலை 75 சதவிகிதமும், கொல்கத்தாவில் விலை இருமடங்காகவும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் முக்கிய நகரங்களில் வெங்காயத்தைத் தொடர்ந்து உருளைக்கிழங்கின் விலையும் கடுமையாக அதிகரித்து வருகிறது
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் பெண்களை பிடிக்க தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு தனிப்படையில் பெண் உதவி ஆய்வாளர் தலைமையில் ஒரு தலைமை காவலர், இரண்டு காவலர்கள் இருப்பார்கள். முதற்கட்டமாக சென்னையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில்லை என்று உணரும் பட்சத்தில் 75300 01100 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கும், Chennai city police என்ற ஃபேஸ்புக் பக்கத்திற்கும் தகவல் அளிக்கலாம் என்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
விவசாய நகைக்கடனை, 7 சதவீத வட்டியில் வழங்கக்கூடாது என வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய வேளாண்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: 11 சதவீத நகைக்கடன் வட்டியில் வழங்கப்பட்டு வந்த 4 சதவீத மானியம் நிறுத்தப்படுகிறது. அக்., 1 முதல் வழங்கப்பட்ட விவ சாய நகைக்கடன் வட்டியை உயர்த்தி, 2020 ஏப்.,1க்குள் வசூலிக்க வேண்டும். என தெரிவித்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்தது அதிமுகவின் கொள்கை முடிவு எனவும், யாருடைய நிர்பந்தமும் இல்லை என்றும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை அகதிகள் விவகாரத்தில் அவர்கள் சொந்த நாட்டிற்கு செல்வதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாகவும், அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வலியுறுத்தி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்
சென்னையில் பெட்ரோல், 3வது நாளாக விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.77.58 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.69.97 ஆகவும் உள்ளது. தொடர்ந்து 10 நாட்களாக ஒரே விலையில் நீடித்திருந்த டீசல், இன்று அதிகரித்தது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.
மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள, முதல்வர் பழனிசாமி, டில்லிக்கு கிளம்பி சென்றார். காந்தியடிகளின், 150ம் ஆண்டு நிறைவு விழாவை, அனைத்து மாநிலங்களிலும், சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம், இன்று டில்லியில் நடக்க உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, தலைமை வகிக்கிறார்; அனைத்து மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர். இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, முதல்வர் இ.பி.எஸ்., இன்று காலை, டில்லி கிளம்பி சென்றார்