Flash News in Tamilnadu Today Updates : ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான எதிர்க்கட்சித் தலைவர்கள் நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். திமுக டி.ஆர்.பாலு , சிபிஐ(எம்) சீதாராம் யெச்சூரி , திரிணமுல் காங்கிரஸ் டெரெக் ஓ பிரைன், சமாஜ்வாதி ராம் கோபால் யாதவ் போன்றோரும் கலந்து கொண்டனர். பின்பு செய்தியாளர்களை சந்தித்த சோனியா காந்தி , ” இந்த சட்டத்தால் , வடகிழக்கு மாநிலங்களில் நிலவி வந்த பதட்டம் தற்போது தலைநகர் உட்பட நாடு முழுவதும் பரவி வருகிறது. இது, மேலும் பரவக்கூடும் என்று நாங்கள் அஞ்சுகிறோம். அமைதியான ஆர்ப்பாட்டத்தை போலீசார் கையாண்ட விதத்தை நினைத்து நாங்கள் வேதனைப்படுகிறோம்,” என்றார்.
தமிழகத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் இடஒதுக்கீட்டில் உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத தமிழக தேர்தல் ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி தி.மு.க. உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துஉள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
வன்முறை போராட்டங்கள் வருத்தம் அளிக்கின்றன.அமைதி, சகோதரத்துவம், ஒற்றுமையை பின்பற்றுவதற்கு இது சரியான நேரம். வெளியில் இருந்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். சிலர் தங்கள் சுயநலத்துக்காக நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்; அதை யாரும் நம்ப வேண்டாம் என்று பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates : தி.மு.க., கத்தியோடு வந்தால், நாங்கள் துப்பாக்கியோடு வருவோம்,'' என, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். தமிழகத்தில், யார் கட்சி ஆரம்பித்தாலும், அ.தி.மு.க.,வை மிஞ்ச முடியாது. வரும், 2021 சட்டசபை தேர்தலுக்கு பின், தி.மு.க., என்ற கட்சி, தி.க., போலாகிவிடும்.அதனால் தான், தேர்தலை எப்படியாவது நிறுத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் சென்றனர்; அங்கும், தலையில் குட்டு விழுந்தது. எங்களை பற்றி, தனிப்பட்ட முறையில், தி.மு.க.,வினர் பேசுவது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. நீங்கள் கத்தியோடு வந்தால், நாங்கள், துப்பாக்கியோடு வருவோம்; கோழைகள் அல்ல. இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.
'ஜி.எஸ்.டி., அமலாக்கத்தால், மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பு ஈடு செய்யப்படும்' என, அளித்த உறுதிமொழியில் இருந்து, மத்திய அரசு பின்வாங்காது. மாநிலங்களுக்கு, இரு மாதங்களாக, இழப்பீடு வழங்கப்படவில்லை. எதிர்பார்த்ததை விட, ஜி.எஸ்.டி., வருவாய் குறைந்ததால், இது தொடர்பாக, மாநில அரசுகளுடன் பேசி வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Web Title:Tamil nadu news today live updates weather modi chennai margazhi caa delhi protest dmk stalin protest
காவிரி ஒழுங்காற்றுக்குழு இன்று டெல்லியில் நவீன் குமார் தலைமையில் நடைபெறுகிறது
தமிழகத்தில் கோயில்கள், மிருகக்காட்சி சாலைகள், தனியார் வசமுள்ள யானைகளின் நிலை என்ன என்பது பற்றி ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, யானைகள் ஆராய்ச்சி நிபுணர் அஜய் தேசாய் தலைமையிலான குழு உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் எம்.பி-யுமான திருமாவளவன், உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் சுமுகமான முறையில் தொகுதிப்பங்கீடு முடிந்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை அதிமுக ஆதரித்தது ஒரு வரலாற்றுப் பிழை என்று தெரிவித்துள்ளார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் போராட்டத்தால் சென்னை பல்கலைக்கழகத்துக்கு நாளை முதல் ஜனவரி 23ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் போராட்ட எதிரொலியால் சென்னை பல்கலைக்கழகத்திற்கு நாளை முதல் டிசம்பவர் 23ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக அளிக்கப்பட்ட புகாரில் ஜனவரி 7ஆம் தேதி மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து தமாகா-விற்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கியது.
ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த சோனியா காந்தி , " இந்த சட்டத்தால் , வடகிழக்கு மாநிலங்களில் நிலவி வந்த பதட்டம் தற்போது தலைநகர் உட்பட நாடு முழுவதும் பரவி வருகிறது. இது, மேலும் பரவக்கூடும் என்று நாங்கள் அஞ்சுகிறோம். அமைதியான ஆர்ப்பாட்டத்தை போலீசார் கையாண்ட விதத்தை நினைத்து நாங்கள் வேதனைப்படுகிறோம்," என்றார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சற்று முன் தனது ட்விட்டரில் , ' டெல்லி குடிமக்கள் அனைவருக்கும் அமைதியை நிலைநாட்டுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன். நாகரிக சமுதாயத்தில் எந்தவொரு வன்முறையும் ஏற்றுக்கொள்ளப்படாது. வன்முறையால் எதையும் பெற முடியாது. கருத்தை அமைதியாக முன்வைக்க வேண்டும்' என்று பதிவு செய்துள்ளார்.
குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிராக டெல்லி கலிண்டி குஞ்ச் பகுதியில் மக்கள் வீதிகளில் இறங்கினர்,
குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிராக இந்தியாவில் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்திற்குள் போலீசார் நுழைந்தனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இன்று வடகிழக்கு டெல்லியில் உள்ள சீலாம்பூர் பகுதியில் போராட்டம் வெடித்தது. நிலைமையைகே கட்டுக்குள் கொண்டுவர போலீஸார் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். பதற்றத்தையடுத்து சீலாம்பூர் முதல் ஜாஃப்ரா வரை போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
உன்னாவ் பெண் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட குல்தீப் சிங் செங்காரின் தண்டனை 20ம் தேதி ஒத்திவைத்தது டெல்லி தீஸ்ஹசாரி நீதிமன்றம் .
பின்னணி :
உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவில் 2017 ஆம் ஆண்டு முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் செங்கர் ஒரு சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி என்று டெல்லி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. அவருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று நீதிமன்றம் தண்டனை விவரத்தை 20ம தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறது.
ஜார்க்கண்டில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி- குடிமக்கள் திருத்தம் சட்டம் எந்த இந்திய குடிமகனின் உரிமையை பறிக்கவில்லை என்றும், இந்திய குடிமக்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்று தெரிவித்தார். காங்கிஸ் மற்றும் அதன் தோழமை கட்சிகள் அரசியல் நோக்கத்திற்காக முஸ்லிம்களைத் தூண்டுகின்றன என்றும் கூறினார்.
தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் போப்டே தலைமையிலான உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் இன்று நிர்பயா சீராய்வு வழக்கின் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, தலைமை நீதிபதி போப்டே இந்த வழக்கில் இருந்து தாம் விலகுவதாக அறிவித்தார். இதனால், வேறு அமர்வில் இந்த வழக்கு விசாரிக்கப்படவுள்ளது.
ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் போலிஸ் நடத்திய செயல் ஜாலியன்வாலா பாக் நிகரானது . மாணவர்கள் 'யுவ சக்தி ' போன்றவர்கள். எனவே, மத்திய அரசிடம், மானவர்களிடம் தற்போது கடைபிடிக்கும் நடைமுறையை கைவிட வேண்டும் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
நாகர்கோவில் சுசீந்திரம் கோயிலில் நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
தேச துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், ராணுவ தளபதியுமான ஜெனரல் பர்வேஷ் முஷாரப்புபுக்கு, சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டில்லியிலும், அசாமிலும் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துப்பட்டிறுப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் பத்திரிகையாளர்களை சந்தித்த கமல்ஹாசன் கூறியதாவது, நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையற்ற நிலையில் இருக்கும்போது குடியுரிமையில் திருத்தம் மேற்கொள்வது ஏன் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டின் வருங்கால தூண்களான மாணவர்களின் போராட்டத்தை காவல்துறை கொண்டு ஒடுக்க முயல்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள தளத்தில் இருந்து பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்த சோதனையில், கடலில் நிறுத்தப்பட்டிருந்த இலக்கை, பிரமோஸ் ஏவுகணை துல்லியமாக அழித்தது குறிப்பிடத்தக்கது.
மக்களுக்கு பாதகம் செய்யும் ஆட்சியே பாஜக ஆட்சி என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் மாநிலம் எங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அதில் ஸ்டாலின் பேசியதாவது, மக்களுக்கு பாதகம் செய்யும் ஆட்சியே பாஜக ஆட்சி. நாட்டு மக்களுக்காக பாஜக, ஆட்சி நடத்தவில்லை என்பதையே உணர முடிகிறது என்று அவர் கூறினார்.
குடியுரிசை திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கு, நாளை ( 18ம் தேதி) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.
எரிசக்தியை சிறப்பாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்தியதற்காக, தெற்கு ரயில்வேக்கு, மூன்று விருதுகள் கிடைத்துள்ளன. டில்லியில் உள்ள, விஞ்ஞான் பவனில், எரிசக்தி சிக்கன நாள் விழாவில், தேசிய அளவில், எரிசக்தி ஆற்றலை சிறப்பாக பயன்படுத்தியதற்காக, அரசு நிறுவனங்களுக்கு, விருது வழங்கி பாராட்டப்பட்டது. ரயில்வே மண்டல அளவில், சிறப்பாக செயல்பட்டதற்காக, தெற்கு ரயில்வே போக்குவரத்து பிரிவு, ஈரோடு மற்றும் போத்தனுார் ரயில்வே பள்ளிகளுக்கு, விருதுகள் வழங்கப்பட்டன.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் காஞ்சிபுரத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மாநிலமெங்கும் திமுக தலைமையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கடை உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ. சேகர் பாபு மீது சென்னை யானை கவுனி காவல்நிலையத்தில் 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம், மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைலாசாவுக்கு குடியுரிமைக் கேட்டு சுமார் 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், கைலாசா தனிநாடு அமைந்தே தீரும் எனவும் நித்யானந்தா தெரிவித்துள்ளார்
சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.77.58 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து மாற்றமில்லாமல் லிட்டர் ரூ.69.81 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. 9வது நாளாக தொடர்ந்து டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சீன சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 14 பேர் பலியாகினர். மேலும் சுரங்கத்தில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இம்மாதம் 27 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெற உள்ளன. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று ( டிசம்பர் 16) முடிவடைந்த நிலையில், வேட்புமனு பரிசீலனை இன்று ( டிசம்பர் 17ம் தேதி) நடைபெற உள்ளது.