Advertisment

டிச. 17-ல் மாவட்டம் தோறும் திமுக ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates: தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu News Today Live

Tamil Nadu News Today Live

Flash News in Tamilnadu Today Updates: தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தலை நடத்த, உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க கோரி, தி.மு.க., தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், '2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளனர். மேலும், ஒன்பது மாவட்டங்களுக்கு, 2011 -மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், மறுவரையறை, இட ஒதுக்கீடு செய்து, நான்கு மாதங்களில் தேர்தல் நடத்தவேண்டும் என உத்தரவிட்டிருந்தோம். அது, இப்போது, மூன்று மாதங்களாக குறைக்கப்படுகிறது. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisment

மாநிலங்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா – அமித்ஷா தாக்கல்

ராஜ்யசபாவிலும், குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக, 125 ஓட்டுகளும், எதிராக, 105 ஓட்டுகளும் பதிவாகின. மசோதாவை தாக்கல் செய்து, அமித் ஷா பேசியதாவது: திட்டமிட்டு பரப்பப்படும் தவறான தகவல்களால், முஸ்லிம்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்கள் அச்சப்படத் தேவையில்லை. இந்த மசோதாவால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்தியக் குடியுரிமை பெற்றுள்ள அவர்கள், தொடர்ந்து இந்தியர்களாகவே இருப்பர். யாரும் உங்களை துன்புறுத்த மாட்டர். அதே நேரத்தில், சட்ட விரோதமாக வந்துள்ள முஸ்லிம்களுக்கு குடியுரிமை அளிக்க முடியாது. அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, அகதிகளாக வந்துள்ள ஹிந்து, பார்சி, சீக்கியர் உள்ளிட்டோருக்கு குடியுரிமை அளிக்கப்படும். இதன் மூலம், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் என, இதுவரை மறுக்கப்பட்ட வசதிகள் அவர்களுக்கு கிடைக்கும். நாங்கள் ஓட்டு அரசியலுக்காக இதை செய்யவில்லை. தேர்தல் அறிக்கையிலேயே இதை நாங்கள் குறிப்பிட்டுள்ளோம். அதற்கு மக்களிடம் ஆதரவு உள்ளது. அதனால்தான், லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு அமோக ஆதரவு அளித்தனர். இவ்வாறு அவர் பேசினார்.

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:07 (IST)12 Dec 2019

    பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

    ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் வெளிவந்த பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    21:36 (IST)12 Dec 2019

    அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என பிரார்த்திக்கிறேன் - நடிகர் பாக்யராஜ்

    17வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பேசிய நடிகர் பாக்யராஜ்: “அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என பிரார்த்திக்கிறேன். திரைப்படத்துறைக்கு தமிழக அரசு அதிக நிதியுதவி வழங்கி வருகிறது. ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது என சொல்லி சம்மன் வாங்கியதால் இப்போது பழமொழி சொல்லவே பயமாக இருக்கிறது.” என்று கூறினார்.

    21:06 (IST)12 Dec 2019

    பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்த ரஜினி

    என் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக மக்கள், திரையுலக நண்பர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு நன்றி என நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    20:16 (IST)12 Dec 2019

    குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக டிசம்பர் 17-இல் திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

    நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக டிசம்பர்17ஆம் தேதி மாவட்டந்தோறும் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    19:56 (IST)12 Dec 2019

    ரஜினிதான் அடுத்த முதலமைச்சராக வருவார் - கராத்தே தியாகராஜன் பேச்சு

    சென்னையில் நடிகர் ரஜினியின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற கராத்தே தியாகராஜன், ரஜினிதான் அடுத்த முதலமைச்சராக வருவார் என்றும் ரஜினி 2021 இல் கோட்டையில் கொடியேற்றுவார் என்றும் கூறினார்.

    19:11 (IST)12 Dec 2019

    சென்னையில் 17வது சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்!

    சென்னை கலைவாணர் அரங்கில் 17ஆவது சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது. 19 ஆம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் 55 நாடுகளில் இருந்து 130க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

    18:49 (IST)12 Dec 2019

    உள்ளாட்சித் தேர்தல் தொகுதி பங்கீடு பற்றி மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை

    உள்ளாட்சித் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    18:29 (IST)12 Dec 2019

    உள்ளாட்சித் தேர்தல்களால் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் ஒத்திவைப்பு

    உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறுவதையொட்டி டிசம்பர் 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற இருந்த துறை ரீதியான தேர்வுகளை டி.என்.பி.எஸ்.சி ஒத்தி வைத்துள்ளது.

    இந்த தேர்வுகள் ஜனவரி 5 முதல் 12 வரை நடைபெறும். இருப்பினும், தொகுதி - 1 இல் அடங்கியுள்ள பதவிகளுக்கான நேர்காணல் திட்டமிட்டபடி ஜனவரி 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.

    திட்ட அலுவலர், உளவியலாளர், சிறை அலுவலர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுகளும் திட்டமிட்டபடி ஜனவரி 21 மற்றும் 22 தேதிகளில் நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி செயலாளர் அறிவித்துள்ளார்.

    17:29 (IST)12 Dec 2019

    நிர்பயா கொலை குற்றவாளி மறுசீராய்வு மனு

    நிர்பயா வழக்கின் குற்றவாளி அக்சய் குமார் சிங், அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் தூக்கு தண்டனையை எதிர்த்து  தாக்கல் செய்த மறு சீராய்வு மனு மீதான விசாரணை வருகின்ற 17ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

    16:43 (IST)12 Dec 2019

    நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு டிசம்பர் 16ம் தேதி தூக்கு

    டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு நிர்பயா என்ற பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த குற்றத்தில் ஈடுபட்ட 6 நபர்களில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். ஒருவர் வயதின் அடிப்படையில் 2015ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். மீதம் இருக்கும் 4 பேருக்கும் வருகின்ற 16ம் தேதி தூக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு காவலர்கள் வரவழைக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    16:43 (IST)12 Dec 2019

    நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு டிசம்பர் 16ம் தேதி தூக்கு

    டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு நிர்பயா என்ற பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த குற்றத்தில் ஈடுபட்ட 6 நபர்களில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். ஒருவர் வயதின் அடிப்படையில் 2015ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். மீதம் இருக்கும் 4 பேருக்கும் வருகின்ற 16ம் தேதி தூக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு காவலர்கள் வரவழைக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    16:24 (IST)12 Dec 2019

    அயோத்தி வழக்கின் மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி

    அயோத்தி தீர்ப்புக்கு எதிரான அனைத்து மறுஆய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

    16:07 (IST)12 Dec 2019

    ஜெகன் மோகனுக்கு ராக்கி கட்டிய எம்.எல்.ஏக்கள்

    பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் புரியும் நபர்களுக்கு 21 நாட்களில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று ஆந்திர அமைச்சரவை சட்டம் கொண்டுவந்துள்ளது. இதனை வரவேற்கும் விதமாக அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.எல்.ஏக்கள் ராக்கி கட்டி தங்களின் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

    15:52 (IST)12 Dec 2019

    சென்னை 43வது சென்னை புத்தக கண்காட்சி

    43வது சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 9 முதல் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னை புத்தக கண்காட்சி பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே இருக்கும் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் நடத்த திட்டமிட்ட நிலையில் மீண்டும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்திலேயே நடத்த முடிவு

    15:25 (IST)12 Dec 2019

    சென்னை சேப்பாக்க மைதானம் ஒப்பந்தம் நீட்டிப்பு

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் ஒப்பந்தத்தை மேலும் 21 ஆண்டுகளுக்கு நீட்டித்தது தமிழக அரசு.

    15:10 (IST)12 Dec 2019

    தலைவி, குயினை எதிர்த்து தீபா வழக்கு விவகாரம்

    தலைவி மற்றும் குயின் திரைப்படங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என தீபா வழக்கு பதிவு செய்திருந்தார். தீபா கதாபாத்திரம் இடம் பெறவில்லை என கவுதம் மேனன் தரப்பு உத்தரவாதம் அளித்துள்ளது. மேலும் தலைவி படம் முழுக்க முழுக்க கற்பனையானது என அறிவிப்பு வெளியிட வேண்டும் என ஏ.எல். விஜய்க்கும் உத்தரவு

    14:42 (IST)12 Dec 2019

    நெல் சாகுபடிக்காக வைகையில் நீர் திறக்க கூடாது

    சிவகங்கை மாவட்டத்தில் நெல் சாகுபடிக்காக வைகையில் நீர் திறக்கக் கூடாது என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து இன்றூ விசாரணைக்கு வந்தது. குடிநீர் தேவைக்காக மட்டும் வைகை நீர் பயன்படுத்தப்படுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் அறிவிப்பு

    14:41 (IST)12 Dec 2019

    தமிழகம் முழுவதும் நவோதயா பள்ளிகள்

    தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகள் திறக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உறுதி செய்துள்ளார்

    14:18 (IST)12 Dec 2019

    ஜார்கண்ட் மாநில தேர்தல்

    ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்றுவ் வருகிறது. மூன்றாம் கட்டமாக நடைபெற்று வரும் இன்றைய தேர்தலில் இதுவரை 45.14% வாக்குகள் பதிவாகியுள்ளது.

    14:15 (IST)12 Dec 2019

    காங்கிரஸ் கட்சியால் தடம் மாற வேண்டாம் - மோடி

    குடியுரிமை சட்டம் திருத்த மசோதாவால் அசாம் மாநிலத்தின் பாரம்பரியம், கலாச்சாரம், மொழி என எதிலும் பாதிப்பு ஏற்படாது. அசாம் மற்றும் இதர வடகிழக்கு மாநிலங்களில் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியால் தடம் மாற வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார் பிரதமர் மோடி

    14:14 (IST)12 Dec 2019

    முக்கிய ஆலோசனையில் மம்தா

    குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து 20ம் தேதி ஆலோசனையில் ஈடுபட உள்ளார் மம்தா பானர்ஜி.

    13:58 (IST)12 Dec 2019

    இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து

    பிஎஸ்எல்வி சி 48 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம் அவர்கள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர். இஸ்ரோ விஞ்ஞானிகள் மேலும் பல சாதனைகளை புரிய வாழ்த்துவதாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    13:21 (IST)12 Dec 2019

    எகிப்து வெங்காயம் இதயத்துக்கு நல்லது – அமைச்சர் செல்லூர் ராஜூ

    எகிப்து வெங்காயத்தில் சல்பர் (கந்தகம்) அதிகமாக இருப்பதால், காரம் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். இது இதயத்துக்கு நல்லது. முதல்வர் பழனிசாமி இதை பரிசோதனை செய்து பார்த்துள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

    12:54 (IST)12 Dec 2019

    லேசான மழைக்கு வாய்ப்பு

    வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    அடுத்த 48 மணி நேரத்தில் தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

    12:36 (IST)12 Dec 2019

    தெலுங்கானா என்கவுன்டர் – நீதி விசாரணைக்கு உத்தரவு ; உச்சநீதிமன்றம்

    தெலுங்கானா என்கவுன்டர் விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சிர்புர்கார் தலைமையில் நீதி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆறு மாதத்தில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.

    11:54 (IST)12 Dec 2019

    திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா

    முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா திமுகவில் இருந்து விலகியுள்ளார்.

    அரசியல் கட்சியானது செயல்பாடுகள் மூலம்தான் மக்களை கவர வேண்டும், தனியார் ஏஜன்சிகள் உதவியால் முன்னிலைப்படுத்துவது சரியானது அல்ல என்று அவர் தனது விலகலுக்கான காரணமாக தெரிவித்துள்ளார்.

    11:35 (IST)12 Dec 2019

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து

    குடியுரிமை மசோதாவுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில்,  அசாம் மற்றும் திரிபுராவில் நடைபெறவிருந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    11:03 (IST)12 Dec 2019

    குடியுரிமை மசோதா ; அசாம் மக்கள் கவலைப்பட வேண்டாம் – பிரதமர் மோடி

    குடியுரிமை மசோதா குறித்து அசாம் மாநில மக்கள் கவலைப்பட வேண்டாம் உங்களின் உரிமைகள், தனித்துவமான அடையாளம், அழகான கலாசாரத்தை யாரும் பறிக்க முடியாது அசாம் ஒப்பந்தத்தின் பிரிவு 6ன் படி மாநில மக்களின் மொழி, கலாசார, நில உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று பிரதமர் மோடி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

    10:42 (IST)12 Dec 2019

    ஆபாச பட விவகாரம் : திருச்சியில் முதல் கைது

    போலி பேஸ்புக் கணக்குகளை உருவாக்கி குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த திருச்சி பாலக்கரையை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவரை திருச்சி போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    09:58 (IST)12 Dec 2019

    கமல் கட்சி நடத்துவது சந்தேகமே - நமது அம்மா பத்திரிகை விமர்சனம்

    கமல்ஹாசன் எதிர்காலத்தில் கட்சியை நடத்துவது ஐயம் தான் என்பதை மக்கள் நீதி மய்யத்தின் உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு அறிக்கை உணர்த்துவதாக நமது அம்மா நாளிதழ் விமர்சனம் செய்துள்ளது. கிராமசபை நடத்துகிறேன் என்று ஏக பில்டப்போடு அரசியல் கட்சி தொடங்கிய கமல்ஹாசன், யதார்த்தத்தை உணராத சினிமா கதாநாயகனாக, முதல் காட்சியில் ஆசைப்பட்டு, மூன்றாவது காட்சியில் கைக்கு அகப்பட்டு விடுகிற கற்பனை நாற்காலியாக முதலமைச்சர் இருக்கையை கணக்கு போட்டுவிட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளது.

    09:42 (IST)12 Dec 2019

    உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை வெல்வோம் – தினகரன்

    தேர்தல் ஆணையம் தங்களுக்கு பொதுச் சின்னம் வழங்காத போதிலும், சுயேட்சைகளுக்கு வழங்கப்படும் சின்னத்தை வைத்து உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் அதிக இடங்களில் வெல்வோம் என்று விழுப்புரத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமமுக கட்சிபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

    09:06 (IST)12 Dec 2019

    உள்ளாட்சி தேர்தல் – இதுவரை 21,655 பேர் மனுத்தாக்கல்

    உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக 3வது நாளில் 16,654 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர், இதுவரை 21,655 பேர் மனுதாக்கல் செய்துள்ளனதாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    09:00 (IST)12 Dec 2019

    குறைந்தது பெட்ரோல் விலை

    சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 5 காசு குறைந்து ஒரு லிட்டர் ரூ.77.92ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து மாற்றமில்லாமல் லிட்டர் ரூ.69.81 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

    08:50 (IST)12 Dec 2019

    அயோத்தி தீர்ப்பு சீராய்வு மனுக்கள் – இன்று விசாரணை

    அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து,தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுக்கள் மீது,உச்ச நீதிமன்றத்தில், நீதிபதி அறையில், இன்று விசாரணை நடக்கிறது

    'சர்ச்சைக்குரிய நிலத்தில், ஹிந்துக் கடவுள் ராமருக்கு கோவில் கட்டலாம். மசூதி கட்டுவதற்காக, அயோத்தியின் முக்கிய இடத்தில் முஸ்லிம்களுக்கு, 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும்' என, தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து, 18 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில், ஒன்பது மனுக்கள், இந்த வழக்கில், முன்பு சம்பந்தப்பட்டவர்களால் தாக்கல் செய்யப்பட்டவை; மற்ற ஒன்பது மனுக்கள், புதியவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates : 'குரூப் - 1' பதவிக்கான நேர்முக தேர்வில் முறைகேடு நடக்காது' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி., செயலர்நந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:எந்த நேர்முக தேர்விலும், மதிப்பெண்களை பென்சிலால் குறிக்கும் வழக்கம், டி.என்.பி.எஸ்.சி.,யின் நடைமுறையில் எப்போதும் இல்லை. நேர்முகத் தேர்வில், தேர்வருக்கு வழங்கப்படும் மதிப்பெண், வல்லுநர் குழுவால் ஆலோசிக்கப்பட்டு, ஒருமித்த முடிவாக மட்டுமே வழங்கப்படும்.இந்த மதிப்பெண், கணினி வழியே மதிப்பீடு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட குறியீட்டு தாளில், பேனா மையால் மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. இது குறித்து, தேர்வர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

    குடியுரிமை சட்ட திருத்த மசோதா விவகாரத்தில், பாகிஸ்தானைப் போல, எதிர்க்கட்சிகள் பேசி வருவதாக, பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார். மோடி பேசியதாவது:மத ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி, அண்டை நாடுகளில் இருந்து, அகதிகளாக இங்கு குடியேறிய சிறுபான்மையின மக்கள், நீண்ட நாட்களாகவே, ஒரு நிச்சயமற்ற வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், அவர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.இந்த மசோதா குறித்து, எதிர்க்கட்சியினர் பரப்பி வரும் கட்டுக் கதைகளை உடைத்து, இதன் உண்மையான பயனை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டியது, உறுப்பினர்களின் கடமை.இந்த விவகாரத்தில், பாகிஸ்தானைப் போல, எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன. குடியுரிமை சட்ட திருத்த மசோதா, வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.

    Tamil Nadu Rajinikanth Narendra Modi
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment