Flash News in Tamilnadu Today Updates: தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான புதிய அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஏற்கனவே வெளியிட்ட பழைய அறிவிப்பு நேற்று காலையில் ரத்து செய்யப்பட்டது. மாலையில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டாலும் ஓட்டுப்பதிவு தேதியில்மாற்றமில்லை. புதிய மாவட்டங்கள் உட்பட ஒன்பது மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தலில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்...மக்கள் அதிர்ச்சி!
ஊரக உள்ளாட்சிகளில் 91 ஆயிரத்து 975 பதவியிடங்களை நிரப்ப நேரடி தேர்தல் நடக்கும். இதில் 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி; 314 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகள்; 9,624 கிராம ஊராட்சி தலைவர் பதவிகள்; 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி கவுன்சிலர் பதவிகள் அடங்கும். கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர் பணியிடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் நடக்காது. ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு கட்சி அடிப்படையில் தேர்தல்நடக்கும்.
என் மன உறுதியை குலைக்க வேண்டும் என்பதற்காக தான், சிறையில் அடைத்தனர், என, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார். என் மன உறுதி, ஒரு நாளும் குறையாது.இந்திய பொருளாதாரம், மோசமான நிலைக்கு செல்கிறது. நிர்பயா நிகழ்வுக்கு பின், மத்திய நிதி அமைச்சராக பொறுப்பேற்றபோது, பட்ஜெட்டில், 3,100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினேன்.அந்த நிதியை, பெண்களின் பாதுகாப்பிற்கு பயன்படுத்த வேண்டும். தமிழகம் உட்பட, பல மாநிலங்கள், நிர்பயா நிதியை பயன்படுத்த வில்லை. பெண்களை மதிக்கும் நாட்டை, கொலைக்களமாக மாற்ற கூடாது. இவ்வாறு, அவர் கூறினார்.
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி: குடியுரிமைத் திருத்த மசோதாவை கடுமையாக எதிர்ப்போம். ஏனென்றால், அது நமது அரசியலமைபையும் மதச்சார்பற்ற நெறிமுறைகளையும், நமது பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றை மீறுவதாகும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி: உள்ளாட்சித் தேர்தல் யாரால் தள்ளிப்போகிறது என்பதை ஸ்டாலின் தெளிவுபடுத்திவிட்டார். அதிமுக கூட்டணி ஒன்றாக சேர்ந்து உள்ளாட்சித் தேர்தலை சந்தித்து அமோக வெற்றி பெறும். தமிழகத்தில் வெங்காய விளைச்சல் நன்றாக உள்ளதால் 20 நாட்களில் விலை குறையும். வரத்து குறைவால் வெங்காய விலை உயர்வு பிரச்னை நாடு முழுவதும் உள்ளது.
திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: திமுக உள்ளாட்சி தேர்தலை, உச்ச நீதிமன்றம் சென்று நிறுத்த நினைப்பது தமிழகத்திற்கு செய்யும் அநீதி. உலக அளவிலான பொருளாதார மந்த நிலையே, இந்தியாவிலும் எதிரொலிக்கிறது. பொருளாதார நிலையை விரைவில் சரிசெய்வோம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். தமிழக உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தி.மு.க தயங்குகிறது. உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த தி.மு.க உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது தமிழகத்திற்கு செய்யும் அநீதி” என்று கூறினார்.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு முறைகளை முடித்த பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என நீதிமன்றத்தை நாடுவோம் என்ற ஸ்டாலினின் கருத்து ஒருமனதாக ஏற்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் தொழிற்சாலை தீ விபத்தில் 43 பேர் இறந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த கட்டட உரிமையாளர் ரேஹானை போலீசார் கைது செய்தனர்.டெல்லி அனாஜ் மண்டியில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கமல்ஹாசன்: “உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை. இரு கட்சிகள் எழுதி இயக்கும் அரசியல் நாடகத்தில் எந்தப் பாத்திரமும் வேண்டாம். 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதே நோக்கம்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்: உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுகவுக்கு விருப்பமில்லை என்பதால் தொடர்ந்து பல்வேறு குளறுபடிகளை செய்து வருகிறது. எதிர்க்கட்சிகள் யாராவது நீதிமன்றத்துக்கு சென்று தேர்தலை நிறுத்தமாட்டார்களா என ஆளுங்கட்சி நினைக்கிறது. ஆளும் கட்சிக்கு தேர்தல் குறித்து அச்சம் இல்லை என்றால், நேர்மையான முறையில் தேர்தலை நடத்த வேண்டும். திருவிழா கூட்டத்தில் திருடியவன், திருடன் ஓடுகிறான் என்று கூவுவது போன்று ஆளும்கட்சி செய்கிறது” என்று கூறினார்.
மகாராஷ்டிராவில் 3 கட்சி ஆட்சி நீடிக்காது என்று முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
மராத்தி செய்தி தொலைக்காட்சிக்கு ஒன்றில் அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது, சரத் பவாருடன் இணைந்து ஆட்சியமைத்த விவகாரம் குறித்து பேசியுள்ளார். அப்போது, அஜித் பவார் அவராகவே என்னை அணுகி காங்கிரஸுடன் செல்ல தேசியவாத காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை, மூன்று கட்சி ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்காது. நாங்கள் பாஜகவுடன் இணைந்து நிலையான ஆட்சியமைக்கவே விரும்புகிறோம் என்று அஜித் பவார் தன்னிடம் தெரிவித்ததாக பட்னாவிஸ் கூறினார்.
பெண் பூக்களை பூத்து குலுங்க விடுங்கள் என்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் உருக்கமாக பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது, பெண்களுக்கு முன்னுரிமை தருகிறோம் என்று கூறிவிட்டு குத்துவிளக்கை, கொள்ளிக்கட்டையாக்க பார்க்கிறார்கள். பெண்கள் பாதுகாப்பாக வளர வேண்டிய சூழ்நிலைகளை தாண்டி, ஒரு ஆண், பெண்களுக்கு எப்படி மரியாதை தர வேண்டும் என கற்றுத்தந்து ஆண்களை வளர்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமினில் வெளிவந்துள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் திருச்சி வந்தார்.அங்கு அவர் அளித்த பேட்டி : அரசியலுக்கு வருவது குறித்து ரஜினிதான் பதில் சொல்ல வேண்டும். இந்திய பொருளாதாரம் மோசமாக உள்ளது. இந்தியாவில் 30 கோடி பேர் கூலி தொழிலாளர்கள். ரூபாய் நோட்டு வாபசிற்கு பின்னர், அவர்களின் வேலைநாட்கள் பாதியாக குறைந்துவிட்டது. சம்பளமும் பாதியாக குறைந்துவிட்டது என்றார்.
ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பலபகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்துக்கு, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதை தொடர்ந்து, சிதம்பரம், திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். சென்னையில் தங்கியுள்ள அவரை, கவிப்பேரரசு வைரமுத்து இன்று ( 8ம் தேதி) சந்தித்து பேசினார்.
ப.சிதம்பரத்தை அவரது இல்லத்தில் சந்தித்தேன்; மீண்டும் அவர் பழைய முகம் பார்த்தேன்’ என்று வைரமுத்து கூறியுள்ளார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மைத்துனர் கோ.ராஜரத்தினம் (86), வயது முதிர்வு காரணமாக காலமானார்.
கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் அண்ணன் கோ.ராஜரத்தினம். திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகில் உள்ள கோவில் திருமாளம் கிராமத்தில் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர் உயிரிழந்தார். இவரது உடலுக்கு கருணா நிதியின் மகள் செல்வி, திருவாரூர்மாவட்ட திமுக செயலாளரும் எம்எல்ஏவுமான பூண்டி கே.கலைவாணன், எம்எல்ஏ மதிவாணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். புங்கராயநல்லூரில் உள்ள மயானத்தில் ராஜரத்தினத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது.
தலைநகர் டில்லியில் நிகழ்ந்த தீவிபத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் இதுதொடர்பாக டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, டில்லி தீவிபத்து மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மாக்கள் சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். படுகாயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துமவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் மற்றும் நிவாரணப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையத்தில் முறைப்படி, அமமுக பதிவு செய்யப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். அமமுகவின் பொதுச்செயலாளராக தினகரன் இருப்பார் என்றும், கட்சி பதிவு செய்யப்பட்ட விவரங்களை நாளை மறுநாள் தேர்தல் ஆணையம் வெளியிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
டில்லியின் ராணி ஜான்சி சாலை, அனாஜ் மார்க்கெட் பகுதியில் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு, அதிகாலை 5.22 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. தீவிபத்திற்கான காரணம் தெரியவில்லை. இந்த சம்பவத்தில் 43 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்துள்ளனர். 56 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 30 வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும்பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, வார்டு வரையறை மற்றும் இட ஒதுக்கீட்டை செய்து முடித்த பிறகே, உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டுமென நீதி கேட்டு, மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதை தவிர, வேறு வழியில்லை' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights