Advertisment

Tamil Nadu News Today Updates: நிர்பயா குற்றவாளியின் கருணை மனுவை நிராகரிக்க டெல்லி அரசு பரிந்துரை

Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates: தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu News Today Updates: நிர்பயா குற்றவாளியின் கருணை மனுவை நிராகரிக்க டெல்லி அரசு பரிந்துரை

Flash News in Tamilnadu Today Updates: மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு பதவியேற்றமூன்றாவது நாளிலேயே, முக்கிய பதவிகளை பெறுவதில், கூட்டணி கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 'காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவியை தரக்கூடாது' என, தேசிய வாத காங்., தலைவர் சரத் பவார், அடம் பிடிக்கிறார். சட்டசபையில் நேற்று நடந்தநம்பிக்கை ஓட்டெடுப்பில், உத்தவ் தாக்கரே வெற்றி பெற்ற நிலையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மோதல், மஹாராஷ்டிரா அரசியலில், மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

Chennai Weather News Live updates - சென்னை வானிலை பற்றிய தகவல்கள் உடனுக்குடன்

கடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. ஆட்சி அமைத்து 6 மாதங்கள் நிறைவு பெற்ற நிலையில், அது குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட கருத்து: ஒவ்வொருவரின் வளர்ச்சி,அனைவரின் வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை என்ற கொள்கையால் கவரப்பட்டும், 130 கோடி இந்தியர்களின் ஆசியுடனும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், 130 கோடி இந்தியர்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உழைத்து வருகிறது. கடந்த 6 மாதங்களில், நாங்கள் எடுத்த முக்கியமான முடிவுகள், வளர்ச்சியை மேம்படுத்து வதற்கும், சமூக நல்லிணக்கத்தை வலுவூட்டுவதற்கும், இந்தியாவின் ஒற்றுமையை மேம்படுத்தவும் பயன்பட்டது. இனி வரவிருக்கும் காலங்களில், இன்னும் பலவற்றை செய்ய நாங்கள் விரும்புகிறோம். இதன் மூலம், ஒரு வளமான மற்றும் முற்போக்கான புதிய இந்தியா உருவாகும்.

Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

19:52 (IST)01 Dec 2019


நிர்பயா குற்றவாளியின் கருணை மனுவை நிராகரிக்க டெல்லி அரசு பரிந்துரை

நிர்பயா கூட்டுப் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் குற்றவாளிகளில் ஒருவர் விண்ணப்பித்த கருணை மனுவை நிராகரிக்க டெல்லி அரசு பரிந்துரைத்துள்ளது.

18:59 (IST)01 Dec 2019


ஆன்மீகத்தையும், தமிழையும் பிரிக்க முடியாது: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்: ஆன்மீகத்தையும், தமிழையும் பிரிக்க முடியாது, தமிழின் தொன்மையும், ஆன்மீகமும் பின்னி பிணைந்துள்ளது என்று கூறினார்.

15:54 (IST)01 Dec 2019


உள்ளாட்சித் தேர்தல் நாளை அறிவிக்க வாய்ப்பு: மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தகவல்

உள்ளாட்சித் தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் முடிந்ததால் நாளை அறிவிப்பு வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

15:23 (IST)01 Dec 2019


பருவமழை பாதிப்புகள், நிவாரணப் பணிகள் பற்றி முதல்வர் பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசனை

பருவமழை பாதிப்புகள் குறித்தும் நிவாரணப் பணிகள் தொடர்பாகவும் முதல்வர் பழனிசாமி அமைச்சர்கள் அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

14:35 (IST)01 Dec 2019


எகிப்து, துருக்கியில் இருந்து வெங்காயம் இறக்குமதி – மத்திய அரசு

எகிப்தில் இருந்து இம்மாத இறுதிக்குள் 6,090 மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் . துருக்கியில் இருந்து 11 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயம் ஜனவரிக்குள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

13:59 (IST)01 Dec 2019


மிசா கைது; நானே சொல்வதற்கு வெட்கமாக உள்ளது- ஸ்டாலின்

மிசா சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தேன் என நானே சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது, மிசா சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தேன் என நானே சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது. மண்புழுவைப் போல நெளிந்து போய் முதல்வராக வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் கருணாநிதியின் மகன். ஒருபோதும் தன்மானத்தை இழக்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

12:47 (IST)01 Dec 2019


ஸ்டாலின் முதல்வர் ஆவார் – பா.ஜ. மாநில துணை தலைவர் அரசக்குமார்

ஸ்டாலின் முதல்வர் ஆவார், அந்த காலம் கட்டாயம் வரும் என்று  பா.ஜ. மாநில துணை தலைவர் அரசக்குமார் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, ஸ்டாலின் நினைத்தால் கூவத்தூர் சம்பவத்தின்போதே முதல்வராகியிருக்க முடியும், ஆனால் ஜனநாயகத்திற்காக அமைதியாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

12:20 (IST)01 Dec 2019


மகாராஷ்டிரா சட்டசபை சபாநாயகராக நானா படோல் தேர்வு

மஹாராஷ்டிரா சட்டசபை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் நானா படோல் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சபாநாயகர் தேர்தல் இன்று (டிச.,01) நடக்கவிருந்தது. அவரை எதிர்த்து பா.ஜ.,வின் கிஷன் கதோர் நிறுத்தப்பட்டார். பின்னர் கடைசி நேரத்தில் அவர் தனது மனுவை திரும்ப பெற்று கொண்டார். இதனால், நானா படோல் போட்டியின்றி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.

11:37 (IST)01 Dec 2019


திருவண்ணாமலை தீபத்திருவிழா கொடியேற்றம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (டிச.,01) தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, டிச. 10 காலை பரணி தீபமும் அன்று மாலை மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது. அதனை தொடர்ந்து சுவாமியின் வீதியுலா நடைபெறும்.

11:32 (IST)01 Dec 2019


அரசுப்பள்ளிகளில் கூடுதலாக மாணவர்கள் சேர்ப்பு – அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள், ஜனவரி முதல்வாரத்தில் நிரப்பப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

11:00 (IST)01 Dec 2019


ராஜீவ்காந்தி கொலை வழக்கு – நளினி 4வது நாளாக உண்ணாவிரத போராட்டம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக, வேலூர் மகளிர் சிறையில் உள்ள நளினி 4வது நாளாக உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகுிறார். விடுதலை மற்றும் பரோல் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் நளினி உண்ணாவிரதத்தை தொடர்கிறார் . தன்னை வேறு சிறைக்கு மாற்றக்கோரி நளினியின் கணவர் முருகனும் 4வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

10:23 (IST)01 Dec 2019


திருவாரூரில் தொடர் மழை – 1000 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக பெய்துவரும் தொடர் மழையால்,  1000 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின.  வடிகால் வாய்க்காலை தூர்வாராததே நெற்பயிர்கள் மூழ்க காரணம் என விவசாயிகள் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர்

09:40 (IST)01 Dec 2019


போர்க்கால அடிப்படையில் மீட்புபணிகள் ; ஸ்டாலின் கோரிக்கை

தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் இந்த நேரத்தில் போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகங்கள் செயல்பட வேண்டும். சாலைகளில் வெள்ளமெனத் தேங்கி இருக்கும் தண்ணீர், பல ஊர்களில் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. மின் வயர்கள் துண்டிக்கப்பட்டு மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது.  தண்ணீர் தேக்கம் காரணமாக கொசு உற்பத்தி பெருகி, அதன் மூலம் டெங்கு பரவுவது அதிகரிக்கக் கூடும். வருமுன் காக்கும் நடவடிக்கைகளில் அரசும், அரசு அதிகாரிகளும் உடனடியாக இறங்கிட வேண்டும். உடனடி நிவாரணப் பணிகளையும் உடனடியாகத் தொடங்கிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

09:04 (IST)01 Dec 2019


செம்பரம்பாக்கம் ஏரியில் ஒரே நாளில் 100மில்லியன் கனஅடி நீர் உயர்வு

தொடர்மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் ஒரே நாளில் 100மில்லியன் கனஅடி நீர் உயர்வு செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்இருப்பு 649மில்லியன் கன அடியிலிருந்து 749மில்லியன் கன அடியாக அதிகரித்துள்ளது மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1,182 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

08:30 (IST)01 Dec 2019


பெட்ரோல் விலை அதிகரிப்பு

சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 8 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.77.91 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றமின்றி லிட்டர் ரூ.69.53 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

08:21 (IST)01 Dec 2019


தொடர்மழை காரணமாக அணைகளில் இருந்து நீர் திறப்பு

கடலூரில் தொடர் மழையால் வீராணம் ஏரியில் இருந்து பாதுகாப்பு காரணமாக 5,300 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது

தூத்துக்குடியில் பெய்துவரும்  மழை காரணமாக ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து 28,500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

08:17 (IST)01 Dec 2019


சென்னை மழை பாதிப்பு: தொடர்பு எண்கள் அறிவிப்பு

சென்னையில் மழை பாதிப்பு குறித்த விவரங்களை 044-25384520, 044-25384530 044-25384540 ஆகிய எண்களிலும், 9445477205 வாட்ஸ் அப் எண்ணிலும் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates : உள்ளாட்சி தேர்தலில், தனித்துப் போட்டியிடுவது குறித்து, அ.தி.மு.க., தலைமை தீவிரமாக பரிசீலித்து வருகிறது. மேயர் உள்ளிட்டமுக்கிய பதவிகளுக்கு, மறைமுக தேர்தல் நடக்க இருப்பதால், கூட்டணி கட்சிகளின் தயவு தேவையில்லை என்றும், லோக்சபாதேர்தலில் இழந்த, ஓட்டு சதவீதத்தை தக்கவைக்க, தனித்துப் போட்டியிடுவதே கை கொடுக்கும் என்றும், அக்கட்சி கருதுகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் பட்டினப்பாக்கம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மந்தவெளி, நுங்கம்பாக்கம் ஈக்காட்டுத்தாங்கல், சூளைமேடு, தாம்பரம், பம்மல், மயிலாப்பூர், முடிச்சூர், ஆதம்பாக்கம், தியாகராய நகர் , கே.கே.நகர், கொளத்தூர், கே,கே,நகர், அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. மேலும் 3 மணி நேரம் இடைவிடாது பெய்த கனமழையால் சாலைகள் மற்றும் நகரில் பல இடங்களில் நீர் தேங்கியுள்ளது. தி.நகர் உஸ்மான் சாலையில் தண்ணீர் வெள்ளம்போல் அதிகரித்துள்ளதால் வாகனங்கள் மெதுவாக செல்கிறது. பல துணிக்கடைகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் வாடிக்கையாளர்களும் கடை நிர்வாகிகளும் கடுமையாக அவதிக்குள்ளாகினர்.

Tamil Nadu India Narendra Modi Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment