Tamil Nadu news updates : இந்தியாவிற்குள் ஊடுருவ, 500 பாகிஸ்தான் பயங்கரவாதிகள், எல்லையில் தயாராக உள்ளனர்; அதை முறியடிக்க, இந்திய ராணுவமும் தயார் நிலையில் இருக்கிறது,'' என, இந்திய ராணுவ தலைமை தளபதி, பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
தமிழக உள்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா., பொதுச் சபையின், 74வது ஆண்டு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, அமெரிக்காவுக்கு வந்துள்ளார். அவரது ஏழு நாள் பயணத்தில், 40க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவற்றில், ஹூஸ்டன் நகரில் நேற்று முன்தினம் நடந்த, 'ஹவ்டி மோடி' நிகழ்ச்சி, நேற்று நடந்த, பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு உட்பட, 10 நிகழ்ச்சிகளில், இதுவரை அவர் பங்கேற்றுள்ளார். அடுத்த நான்கு நாட்களில், இன்னும், 30க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில், அவர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இன்று, நியூயார்க்கில், இந்திய - பசிபிக் தீவுகள் கூட்டமைப்பின் தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஐ.நா., பொதுச் செயலர், ஆன்டனியோ குட்ரெஸ் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார்.
Live Blog
Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
ஹூஸ்டன் நகரில் ஹவுடி மோடி நிகழ்ச்சிக்கு அதிபர் ட்ரம்ப் வந்ததற்கு நன்றி என்ரு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எனது நண்பர் மட்டுமின்றி இந்தியாவின் சிறந்த நண்பர் என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் நற்பணி மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நடிகர் தனுஷின் அசுரன் படத்திற்கு கட் அவுட், பேனர் வைப்பதை தவிர்த்து நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டும். மேலும், அந்த அறிவிப்பில், ‘இளைய சூப்பர் ஸ்டார்’ தனுஷ் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை கொரட்டூரில் பதுங்கி இருந்த விழுப்புரம் தாதா மணிகண்டனை கைது செய்ய விழுப்புரம் தனிப்படை போலீசார் முற்பட்டனர். அப்போது, போலீசாரை தாக்கியதை தொடர்ந்து தாதா மணிகண்டன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான தனிப்படை அதிரடி நடவடிக்கை.
டெல்லி சென்றுள்ள தமிழ் வளர்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் வந்தடையும் உள்ளூர் விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் செய்ய வலியுறுத்தி விமான போக்குவரத்துத்துறை செயலாளரிடம் மனு அளித்தார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று ஓ. பன்னீர்செல்வம் நம்பிக்கை
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தின் டுவிட்டர் கணக்கை அவர் சார்பில் அவரது குடும்பத்தினர் பதிவிடுகின்றனர். அதில், பிரதமர் மோடி ப.சிதம்பரத்துக்கு தமிழில் அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தை பதிவிட்டுள்ளனர். அந்த கடிதத்தில் பிரதமர் இன்றுபோல் என்றென்றும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார். இதனைக் குறிப்பிட்டு பிரதமர் மோடியின் வாழ்த்துப்படி மக்களுக்கு சேவை செய்வதே என் விருப்பம். துரதிர்ஷ்டவசமாக மோடி அரசின் விசாரணை துறைகள் தடையாக இருக்கின்றனவே நெறு குறிப்பிட்டுள்ளார்.
@PMOIndia @narendramodi என் பிறந்தநாளுக்குப் பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்துச் செய்தியை பெற்று வியப்பு கலந்த மகிழ்ச்சியடைந்தேன். பிரதமருக்கு நன்றி. pic.twitter.com/HGbWnkCrim
— P. Chidambaram (@PChidambaram_IN) September 24, 2019
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய நீதிபதி எஸ்.ராமதிலகம் இன்று ஓய்வுபெற்றார். இதன் மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 56-ஆக குறைகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பதவி காலியிடங்கள் 19-ஆக உயர்வு
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டெல்லியில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்: தமிழகத்தில் மேலும் 6 மருத்துவக் கல்லூரிகளை தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளோம். புதிதாக சுகாதார மையங்கள் அமைக்கவும் மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. என்று கூறினார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை பிற்பகல் 3.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது. இருதரப்பு விவாதங்களை கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை நாளை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
நீட் தேர்வில் ஆள் மாறாட்டத்தில் ஈடுப்பட்ட உதித் சூர்யா தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் வழக்கை விசாரித்த நீதிபதி, உதித் சூர்யாவை நேரில் ஆஜராக அறிவுறுத்தியதோடு, விசாரணையின் போது அவர் கைது செய்யப்பட்டால் முன்ஜாமீன் மனுவை ஜாமீன் மனுவாக எடுத்து விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் இந்த வழக்கு விசாரணைக்கு உதித்சூர்யா நேரில் ஆஜராக அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி தி.மு.க. வேட்பாளராக புகழேந்தி என்பவரை தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். விழுப்புரம் மாவட்ட தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி உடன் இருந்தார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது.ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீடு பெற்றுக்கொள்ள வழங்கப்பட்ட ஒப்புதல் அனைத்தும் சட்டப்பூர்வமானவை, இதில் ஊழல் எங்கே நடைபெற்றுள்ளது? - ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் தனது வாதத்தை தொடங்கினார்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய மனுவின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். நடந்து முடிந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக தொடரப்பட்ட இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைப்பெற்றது.
சுபஸ்ரீ மரணம் தொடர்பாக டிஜிட்டல் பேனர் நிறுவனம் மீது சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேனர் தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி நீதிபதி சத்யநாராயணன் தலைமையிலான அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது.
வரும் 27 முதல், 29ம் தேதி வரை நடைபெற உள்ள கணினி வழியிலான முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வை 1.84 லட்சம் பேர் எழுத உள்ளனர். இந்நிலையில் 154 மையங்களில் சிசிடிவி கண்காணிப்பு இருக்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுத்துள்ளது. மேலும், தேர்வறையில் பெல்ட், நகைகள், ஹை ஹீல்ஸ் காலணிகள், கைக்கடிகாரங்களுக்கு அனுமதியில்லை என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வடகிழக்கு பருவமழையில் பெய்யும் மழையை சேமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். மேலும் மேட்டூர் அணைக்கான நீர் வரத்து 50 ஆயிரம் கன அடியை எட்டும் என்பதால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், நீரின் வேகம் மிக அதிகமாக இருப்பதால் ஆற்றில் இறங்கவோ, அருகில் நின்று செல்ஃபி எடுக்கவோ வேண்டாம் என மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் அவர்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தல் வேட்பாளர்களை உரிய நேரத்தில் அதிமுக அறிவிக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும் எம்.ஜி.ஆர் பாணியில் நடிக்க வேண்டும். வன்முறையை தூண்டும் வகையில் நடிக்க கூடாது என பிகில் படம் குறித்தும் தன்னுடைய கருத்துகளை பதிவு செய்துள்ளார்.
டெங்கு காய்ச்சலால் 2 குழந்தைகள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்தார் முக ஸ்டாலின். மேலும் மக்களை நோய்களில் இருந்து பாதுகாக்க முதல்வர் போர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், மக்களிடையே மருத்துவர்கள், டெங்கு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, கன்னியாகுமரி மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் வீடியோகான்பரன்ஸ் மூலம் நாளை மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்
எனக்கு யார் இடையூறாக இருந்தாலும் அவர்கள் சிறை செல்வர் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். கல்லிடைக்குறிச்சி நடராஜர் சிலைக்கு 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். மீட்கப்பட்ட நடராஜர் சிலை இந்திய மதிப்பில் ரூ28 கோடி என்று கூறப்படுவதாக அவர் தெரிவித்தார்.
விஜய் நடிப்பில், தீபாவளிக்கு திரைக்கு வர உள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா, தாம்பரம் அருகே உள்ள தனியார் இஞ்ஜினியரிங் கல்லூரியில், கடந்த வாரம் நடைபெற்றது. இந்த கல்லூரிக்கு, உயர்கல்வித்துறை செயலாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எதன் அடிப்படையில் இந்த நிகழ்ச்சியை நடந்த கல்லூரி அனுமதி தந்தது என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் நீதிபதி வினீத் கோத்தாரி. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி ராஜினாமாவை தொடர்ந்து நீதிபதி வினீத் கோத்தாரி பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இளங்கலை, முதுகலை படிப்பிற்கான தேர்வு கட்டணத்தை திருவள்ளுவர் பல்கலைக்கழகம் குறைத்துள்ளது. மாணவர்களின் போராட்டத்தையடுத்து தேர்வு கட்டணத்தில் சிறிய மாற்றம் செய்யப்படடுள்ளது. ரூ.68-லிருந்து, ரூ.100 ஆக உயர்த்திய தேர்வு கட்டணத்தை, ரூ.90 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நாங்குநேரி தொகுதியை திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ்க்கு திமுக வழங்கியுள்ளது. இங்கு போட்டியிட காங்கிரஸ் மூத்த தலைவரும், தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில மனித உரிமை பொறுப்பாளர், பிரபு நல்லதம்பி, பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர்.
புவி வெப்பமடைதல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த விவகாரத்தில் இனி பேச்சுவார்த்தை என்பதே கிடையாது, செயல்பாடு தான் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பேசும்போது இவ்வாறு தெரிவித்தார்.
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. அதிமுக விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடத்தி முடித்துள்ளது. அதிமுக இரண்டு தாெகுதிகளில் ஒரு தொகுதியை பா.ஜ.,விற்கு வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாங்குநேரி தொகுதியை திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ்க்கு திமுக வழங்கியுள்ளது. விக்கிரவாண்டி தாெகுதியில் உதயநிதி ஸ்டாலினுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், திமுக மற்றும் அதிமுக கட்சிகள் வேட்பாளர்களை இன்று அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரசாந்த் கிஷோருடன் ரஜினி திடீர் சந்திப்பு : 2021ம் ஆண்டு, சட்டசபை தேர்தலுக்கு வியூகம் அமைக்க, பிரசாந்த் கிஷோரை, தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சி தலைவர்கள் அணுகியுள்ளனர். குறிப்பாக, முதல்வர், இ.பி.எஸ்., நடிகர் கமல் ஆகியோர், ஏற்கனவே, பிரசாந்த் கிஷோரிடம் பேச்சு நடத்தி உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் மும்பையில், நடிகர் ரஜினியும், பிரசாந்த் கிஷோரும் சந்தித்து பேசியுள்ளனர். இது குறித்து, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும், அ.தி.மு.க., - தி.மு.க., தலைமைக்கு உள்ள செல்வாக்கு குறித்தும், இருவரும் விவாதித்துள்ளனர். மேலும், தமிழகத்தில் பிரசாந்த் கிஷோர் தரப்பினர் எடுத்துள்ள, சர்வே குறித்தும் பேசப்பட்டு உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights