Flash News in Tamilnadu Today Live Updates: குடியுரிமை திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது. இது குறித்து மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியது, பக்கத்துநாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் மத ஒடுக்குமுறை ஏற்பட்டது, இதன் காரணமாக மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தனர். இப்போது, இந்த மசோதா அவர்களுக்கு குடியுரிமை வழங்க முற்படுகிறது, இதன் மூலம் தேசிய நலனுக்காகவே புதிய குடியுரிமை திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது .இதனால் மற்ற மதத்தினர் கவலைப்பட தேவையில்லை எனறார்.
விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டுபிடித்த தமிழக இஞ்ஜினியர்
இந்தியா, மக்களின் வறுமையை ஒழிப்பதில் சிறப்பாக முன்னேறியிருப்பதாக, ஐ.நா., ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டு, ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்ட, இந்திய பிரதிநிதி, ஷோகோ நோடா பேசியதாவது :நடப்பாண்டில், 189 நாடுகளில், மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், மனித வள மேம்பாட்டு குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்தியா, 129வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டு, இந்தியா, 130வது இடத்தில் இருந்தது. கடந்த, 30 ஆண்டுகளாக இந்தியா வளர்ச்சி கண்டு வருகிறது. மனித வளத்தை மேம்படுத்துவதில், வேறு, எந்த பிராந்தியத்திலும், இத்தகைய விரைவான வளர்ச்சி காணப்படவில்லை.கடந்த, 1990-2018 வரை, தெற்காசிய நாடுகள். 46 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளன. கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளின் வளர்ச்சி, 43 சதவீதமாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
நிர்பயா வழக்கில் குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து டெல்லி தலைமை செயலாளர் உடன், உள்துறைச் செயலாளர் ஆலோசனை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது.மேலும், தூக்குக் கயிறு களை தயாரிப்பதில் மிகவும் நிபுணத்துவம் பெற்ற புக்சார் சிறைச் சாலை நிர்வாகத்துக்கு இந்த வார இறுதிக்குள் 10 தூக்குக் கயிறுகளை தயாராக வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை
சட்டத்திற்கும், மக்களாட்சி தத்துவத்திற்கும் புறம்பாக நடைபெறும் இத்தகைய செயல்கள் வருந்தத்தக்கவை
ஜனநாயகத்திற்கு ஊறுவிளைவிப்பதை தடுக்க தேர்தல் அலுவலர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவு
-மாநில தேர்தல் ஆணையம்
கத்தி திரைப்படம் தொடர்பான வழக்கில் இருந்து நடிகர் விஜய், தயாரிப்பு நிறுவனம், ஒளிப்பதிவாளர் உள்ளிட்டோர் விடுவிப்பு. கத்தி திரைப்படத்தையும், தாகபூமி குறும்படத்தையும் தஞ்சாவூர் நீதிமன்ற நீதிபதி பார்க்க வேண்டும், படத்தை பார்த்த பின் புகார்தாரர் கூறும் ஒற்றுமை இருந்தால் விசாரணை நடத்தலாம். இந்த வழக்கில் இயக்குநர் முருகதாஸை மட்டுமே எதிர்மனுதாரராக சேர்த்து விசாரணை நடத்த வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
மணல் மாஃபியா போல, தண்ணீர் மாஃபியா தமிழகத்தில் அதிகரித்து வருகிறது - சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவிப்பு
தமிழகத்தில் தண்ணீரை தேக்கி வைக்க போதிய உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தாவிட்டால், எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை.
கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் மாநிலங்களவை அதிமுக எம்.பி. நவநீத கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட கேரள அரசுக்கு மத்திய அரசு வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள்
உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து மாவட்ட வாரியாக கருத்துகளை கேட்ட பின்பு தான் முடிவு எடுக்கப்படும் என்று பொன். ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்தார்.
இந்தியாவை பற்றி பாஜக மட்டுமே கவலைக் கொள்கிறது என்ற ஒரு பிம்பத்தை உருவாக்கியுள்ளது அக்கட்சி. குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில் மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால் மாநிலங்களவையில் ஆதரவு கிடையாது என சிவசேனா கட்சி தலைவரும் மகாராஷ்ட்ரா மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரே அறிவிப்பு.
தெலுங்கானாவில் கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஆந்திர முதல்வர் பாலியல் குற்றம் புரிபவர்களுக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். அதன்படி பாலியல் குற்றவாளிகளை 21 நாட்களுக்குள் தூக்கிலிடப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. . ராமநாதபுரம் கடல் பகுதியில் உயரமான அலைகள் உருவாக வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடிக்க சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.
அதேபோல், இந்த பதவிகளுக்கு மறைமுக தேர்தலுக்கு வழிவகை செய்யும் அவசர சட்டத்தை ரத்து செய்யவும் நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
மறைமுக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்துக்கு விரோதமானதல்ல என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 1ல் தீப திருவிழா கொடியேற்றத்துன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வாக இன்று அதிகாலை, 4:00 மணிக்கு சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து , அனேகன், ஏகன்' என்பதை விளக்கும் வகையில் மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளன. மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரை இன்று, மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என கர்நாடகா ஐகோர்ட், மாநில அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.நித்தியானந்தா எங்கிருக்கிறார் என்று டிச.12க்குள் அறிக்கை தர வேண்டும் என கர்நாடக அரசை அம்மாநில உயர்நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கர்நாடக அரசு மற்றும் காவல்துறை விரிவான அறிக்கை தரவேண்டும் என்றும் கோர்ட் வலியுறுத்தி உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights