Flash News in Tamilnadu Today Updates: பழங்குடியினர், நாட்டின் பொருளாதாரம் குறித்து ராஜ்யசபாவில் விவாதம் நடந்தது. பொருளாதாரம் மந்த நிலைக்கு சென்றுவிட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.இதற்கு பதில் அளித்து நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் கூறியதாவது: நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையில் இல்லை. வளர்ச்சி விகிதம் குறைந்தாலும் மந்தமான சூழ்நிலை இல்லை.பொருளாதாரம் எப்போதும் மந்தநிலைக்குவராது. கடந்த 2009- - 2014-ம் நிதியாண்டின் இறுதியில் ஜி.டிபி. எனப்படும் நாட்டின் மொத்த உற்பத்தி 6.4 சதவீதமாக இருந்தது. 2014 - -19 நிதியாண்டில் 7.5 சதவீதமாக உள்ளது.இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார். ஆனால் அமைச்சர் விளக்கத்துக்கு நடுவே அதிருப்தி தெரிவித்து எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.இதை சுட்டிக்காட்டிய நிர்மலா சீதாராமன் ''ஒரு விவாதத்தை கோருவதும் அதற்கு அரசு பதில் அளிக்கும்போது வெளிநடப்பு செய்வதும் 2014 முதல் எதிர்க்கட்சிகளின் பழக்கமாகிவிட்டது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல'' என்றார்.
காஞ்சிபுரம் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு விடுமுறை
புவியை மிகவும் துல்லியமாக படமெடுக்கும், அதிநவீன, 'கார்டோசாட் - 3' உட்பட, 14 செயற்கைக்கோள்களை, இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையம், வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியது. வணிக ரீதியாக, அமெரிக்காவின், 13 சிறு செயற்கைக்கோள்களை சுமந்தபடி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, 26 மணி நேர, 'கவுன்ட் டவுனை' முடித்து, 'பி.எஸ்.எல்.வி., - சி47' ராக்கெட், நேற்று காலை, 9:28 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. பின், 17 நிமிடங்கள், 38வது வினாடியில், கார்டோசாட் - 3 செயற்கைக்கோள், 509 கி.மீ., உயரம் உள்ள, புவி சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்ற சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். இதனை, மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
On behalf of DMK, I wish @OfficeofUT a successful tenure as CM.
I'm happy to be in Mumbai for this momentous occasion today.
I sincerely hope that the alliance of @ShivSena, @INCIndia & @NCPspeaks provides inclusive growth and overall development to the state.#UddhavMahaCM pic.twitter.com/TRXXnz4Wmm
— M.K.Stalin (@mkstalin) November 28, 2019
மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்ற உத்தவ் தாக்கரேவுக்கு என்.சி.பி தலைவர் அஜித் பவார் வாழ்த்து தெரிவித்துள்ளார். அஜித் பவார் தனது டுவிட்டர் பக்கத்தில், “உத்தவ் தாக்கரே தலைமையில் முழு மாநிலமும் வளர்ச்சி அடையும்” என பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிற நிலையில், தொகுதி மறுவரையறை பணிகளை நிறைவு செய்யாமல் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என திமுக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. திமுக ஏற்கெனவே தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வராத நிலையில் தேர்தலை நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் திமுக புதிதாக மனு தாக்கல்.
மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்ற சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் வாழ்த்து டுவிட்டில், “மகாராஷ்டிராவின் முதல்வராக பதவியேற்ற உத்தவ் தாக்கரே ஜிக்கு வாழ்த்துக்கள். மகாராஷ்டிராவின் பிரகாசமான எதிர்காலத்திற்காக அவர் விடாமுயற்சியுடன் செயல்படுவார் என்று நான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Congratulations to Uddhav Thackeray Ji on taking oath as the CM of Maharashtra. I am confident he will work diligently for the bright future of Maharashtra. @OfficeofUT
— Narendra Modi (@narendramodi) November 28, 2019
மும்பையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மகாராஷ்டிரா முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார். இதனை ஜம்மு காஷ்மீரில் உள்ள சிவசேனா கட்சியினர் கொண்டாடிவருகின்றனர்.
Jammu & Kashmir: Shiv Sena workers celebrate in Jammu, after Uddhav Thackeray takes oath as Maharashtra Chief Minister in Mumbai. pic.twitter.com/wFAmZX2G3M
— ANI (@ANI) November 28, 2019
மகாராஷ்டிர முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்கும் விழாவில் பங்கேற்க இயலாததற்கு வருத்தம் தெரிவிப்பதாகக் கூறியுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், உத்தவ் தாக்கரேவுக்கு எழுதிய கடிதத்தில்: மகாராஷ்டிராவின் 19 வது முதல்வராக நீங்கள் பதவியேற்கிறீர்கள் என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது ஒரு வரலாற்று நிகழ்வு மற்றும் உங்கள் தொலைநோக்குத் தலைமைக்கு உங்களை பாராட்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Dr.Manmohan Singh in a letter to Uddhav Thackeray: I am very happy to know that you are taking oath as the 19th Chief Minister of Maharashtra. It is a historic event and I commend you on your visionary leadership. pic.twitter.com/6U7pUumX7r
— ANI (@ANI) November 28, 2019
மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்கள் பாலாசாஹேப் தோரட், நிதின் ரவுத் ஆகிய இருவரும் மகாராஷ்டிரா மாநில அமைச்சர்களாக பதவியேற்பு.
#Maharashtra: Congress leaders Balasaheb Thorat and Nitin Raut take oath as Ministers. pic.twitter.com/exY9bMoOTN
— ANI (@ANI) November 28, 2019
தேசியவாத கட்சி (என்.சி.பி) தலைவர்களான ஜெயந்த் ராஜாராம் பாட்டில் அமைச்சராக பதவியேற்றார்.
Maharashtra: NCP leader Jayant Rajaram Patil takes oath as minister in Mumbai. https://t.co/QWnDgjf9lZ pic.twitter.com/i9US6vsVvW
— ANI (@ANI) November 28, 2019
மகாராஷ்டிரா தலைநகர் மும்பை தாதர் சிவாஜி பூங்கா மைதானத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி முதல்வர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், ராஜ் தாக்கரே உள்ளிட்டோர் பங்கேற்பு
சிவசேனா தலைவர்கள் ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய் ஆகியோர் மகாராஷ்டிராவின் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
Mumbai: Shiv Sena leaders Eknath Shinde and Subhash Desai take oath as ministers. #Maharashtra pic.twitter.com/RkyOdP6qRy
— ANI (@ANI) November 28, 2019
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார். மும்பையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், தொழில் அதிபர் முகேஷ் அம்பானி, மனைவி நிதா மற்றும் மகன் அனந்த் ஆகியோருடன் வந்தார். சிவசேனா-என்.சி.பி.- காங்கிரஸ் கூட்டணியான மகா விகாஸ் அகாதி தலைவர்கள் சரத்பவார், ஆகியோர் பங்கேற்பு.
நேற்று ஆதித்யா தாக்கரே என்னை நேரில் சந்தித்து முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். ஆனால் என்னால் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இயலவில்லை என்று சோனியா வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் புதிய ஆட்சிக்கு வாழ்த்துகளையும் பதிவு செய்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்பை டிசம்பர் 2ம் தேதி தமிழக அரசு வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், உள்ளாட்சி தேர்தலில் ஊரக பகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுக் என்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதுநாள் வரை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மட்டுமே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
கோட்சேவை நாடாளுமன்றத்தில் தேச பக்தர் என்று அறிவித்தார் பிரக்யா சிங் தாக்கூர். இதற்கு மன்னிப்பு கோரும்வரை நாடாளுமன்ற அலுவல்களில் அவர் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பிக்கள் 50 பேர் சபாநாயகர்களிடம் கடிதம் சமர்பித்துள்ளனர்.
5ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 15ம் தேதி துவங்கி ஏப்ரல் 20ம் தேதி முடிவடைகிறது. அதே போன்று 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்தல் மார்ச் 30ம் தேதி துவங்கி ஏப்ரல் 17ம் தேதி முடிவடைகிறது என அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி தீபா மற்றும் தீபக் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என அவ்விருவர் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலியை போயஸ் தோட்ட இல்லத்தில் நடத்த உள்ளதால் இந்த கோரிக்கையை வைத்துள்ளனர்.
மேலவளவு பஞ்சாயத்து தலைவர் உட்பட 6 பேரை கொலை செய்த வழக்கில் 13 பேர் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் தங்களின் கருத்துகளை பதிவு செய்தனர். இந்நிலையில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் விடுதலையை எதிர்த்து மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களில் வேலை நடப்பதற்காக அதிகாரிகளுக்கு, மக்கள் லஞ்சம் கொடுப்பது தொடர்பாக டிராஸ்பாரன்சி இன்டர்நேஷனல் ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது. இந்த ஆண்டின் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மக்களின் அளித்த லஞ்சத்தின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களில் அதிக அளவில் லஞ்சம் பெறப்படும் மாநிலங்களில் ராஜஸ்தான் முதல் இடத்திலும், பீகார்-2, உ.பி.,-3, தெலுங்கானா - 4, கர்நாடகா - 5, தமிழகம் - 6, ஜார்கண்ட் - 7, பஞ்சாப் - 8 ஆகிய இடங்களில் உள்ளன. இதே போன்று லஞ்சம் குறைவாக உள்ள மாநிலங்களில் டில்லி முதலிடத்திலும், அரியானா 2வது இடத்திலும், குஜராத் 3 வது இடத்திலும், மேற்குவங்கம் 4வது இடத்திலும், கேரளா 5வது இடத்திலும், கோவா 6வது இடத்திலும், ஒடிசா 7 வது இடத்திலும் உள்ளன.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே, அரசுமுறைப்பயணமாக டில்லி வந்துள்ளார். கோத்தபய ராஜபக்ஷேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ உள்ளிட்டமதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரதமர் மோடியை, கோத்தபய ராஜபக்ஷே சந்திக்க உள்ள நிலையில், மதிமுகவின் இந்த போராட்டத்தால், அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்ஷே நியமிக்கப்பட்டபிறகு, முதல் அரசுமுறைப்பயணமாக அவர் இந்தியா வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இலாபம் தரக்கூடிய பொதுத்துறை நிறுவனங்கள் மோடியின் நண்பர்களுக்கு விற்கப்பட்டு வருகிறது . பாஜக ஆட்சியில் நடைபெறும் முறைகேடுகள் பற்றி நாடாளுமன்றத்தில் உரக்க வலியுறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைக்க மேற்கொண்ட செயல்பாடுகள் வெட்கக்கேடானது என அவர் கூறியுள்ளார்.
கொடைக்கானல் - கும்பக்கரை சாலையில் மீண்டும் ஏற்பட்ட மண் சரிவால் 10 மலைக்கிராமங்கள் தனித் தீவாக துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த அக். 21, 26ம் தேதிகளில் கனமழை காரணமாக கொடைக்கானல் - அடுக்கம் - கும்பக்கரை சாலையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, பாறைகள் உருண்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வெங்காயம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். வெங்காயத்தின் அவசியத் தேவையை உணர்ந்து விலையை கட்டுக்குள் வைக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் அரசு இறங்க வேண்டும் என்று கூறியுள்ளார். திமுக எம்.பி.க்கள் இதனை நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் முதன்மை செயலர் பிரதீப் யாதவ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:மத்திய அரசின் உத்தரவுப்படி ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொது தேர்வுகட்டாயம் நடத்தப்படும். ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு எந்த மாணவரின் தேர்ச்சியும் நிறுத்தி வைக்கப்படாது. அதாவது தேர்வு எழுதும் அனைவரும் அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி செய்யப்படுவர். பொதுத் தேர்வை பொருத்தவரை ஐந்தாம் வகுப்புக்கு தமிழ் ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய மூன்று பாடங்களுக்கு மட்டும் நடத்தப்படும். இந்த தேர்வை பார்த்து பெற்றோரும் மாணவர்களும் பீதியடைய வேண்டாம். வினாத்தாள் எளிதாக இருக்கும். அந்தந்த பள்ளிகளிலேயே வினாத்தாள் வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 1,000 ரூபாய் ரொக்கம் மற்றும் பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு, நாளை முதல், ரேஷன் அரிசி கார்டுதாரர்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது. தமிழக அரசின் சார்பில், ரேஷன் கடைகளில், கார்டு தாரர்களுக்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் தயாரிக்கும் பொருட்களுடன், ரொக்க பணம், பரிசு தொகுப்பாக வழங்கப்படுகிறது.
தமிழகத்தில், மேலும் மூன்று அரசு மருத்துவக் கல்லுாரிகள் துவக்க, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. பிரதமருக்கு முதல்வர் நன்றி மூன்று மருத்துவக் கல்லுாரிகள் துவங்க, மத்திய அரசு அனுமதி அளித்ததற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் இ.பி.எஸ்., நன்றி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: ஒரே ஆண்டில், ஒன்பது புதிய அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு, அனுமதி பெறுவது, ஒரு வரலாற்று சாதனை. இதற்கென, 2,925 கோடி ரூபாய்க்கான மதிப்பீட்டிற்கு அனுமதி வழங்கி, அதில், 1,755 கோடி ரூபாய் வழங்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.தமிழக அரசின் பங்காக, 1,170 கோடி ரூபாய் வழங்கப்படும். இதுவரை வரலாறு கண்டிராத, சிறப்புமிக்க அனுமதியை வழங்கிய பிரதமருக்கும், மத்திய அரசுக்கும், தமிழக மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றி. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights