புரோ கபடி லீக் 2017: ஆதிக்கம் செலுத்தும் பாட்னா பைரேட்ஸ்!

புரோ கபடி லீக் 2017 தொடரில், பாட்னா வீரர் பர்தீப் நர்வால் தனி ஆளாக 15 புள்ளிகளைக் குவித்து எதிரணியை திக்குமுக்காட வைத்தார்.

புரோ கபடி லீக் தொடரில் நேற்று (ஞாயிறு) இரவு எட்டு மணிக்கு நடந்த முதல் ஆட்டத்தில், பெங்களூரு புல்ஸ் அணியும், பாட்னா பைரேட்ஸ் அணியும் மோதின. நாக்பூரில் உள்ள மன்காபூர் உள் அரங்கத்தில் இந்தப்போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில், பாட்னா பைரேட்ஸ் அணி, 46-32 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிப் பெற்று, தொடர்ந்து இந்த சீசனில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டி வருகிறது. இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள பாட்னா அணி, அனைத்திலும் எதிரணிகளை துவம்சம் செய்து வெற்றிப் பெற்றுள்ளது.

நேற்றைய போட்டியில் பாட்னா சார்பில், பர்தீப் நர்வால் 15 புள்ளிகளைக் கைப்பற்றினார். ரெய்டில், பாட்னா 24 புள்ளிகளும், பெங்களூரு புல்ஸ் 22 புள்ளிகளும் எடுத்து ஓரளவிற்கு சம நிலையில் தான் விளையாடின. ஆனால், வீரர்களை மடக்குவதில் பாட்னா 12 புள்ளிகளை குவித்தது. பெங்களூரு 4 புள்ளிகள் மட்டுமே எடுத்தது.

இதற்கு முன் தெலுகு டைட்டன்ஸ் அணியை 43-36 என்ற புள்ளிக் கணக்கிலும், அதே அணிக்கு எதிராக ஹைதராபாத்தில் நடந்த மற்றொரு போட்டியில், 29-35 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றியை வசமாக்கியுள்ளது பாட்னா. இதனால், நடப்பு சீசனில் பலம் வாய்ந்த அணியாக பாட்னா பைரேட்ஸ் அணி உருவாகியிருக்கிறது.

இதைத் தொடர்ந்து நேற்று இரவு 9 மணிக்கு நடந்த மற்றொரு போட்டியில், பெங்கால் வாரியஸ் அணியும், யு.பி. யோதா அணியும் களம் கண்டன. நாக்பூரில் மன்காபூர் உள் அரங்கத்தில் தான் இப்போட்டியும் நடைபெற்றது.

இதில் பெங்கால் வாரியர்ஸ் அணி 40-20 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் யு.பி. அணியை தவிடுபொடியாக்கியது. மொத்தம் 22 ரெய்ட் புள்ளிகளையும், 9 டாக்கில் புள்ளிகளையும், 6 ஆல் அவுட் பாயின்ட்களையும் பெங்கால் அணி குவித்தது. மேலும், உதிரிகள் வகையிலும் 4 புள்ளிகள் அந்த அணிக்கு கிடைத்தது. இதன்மூலம், தான் விளையாடிய இரண்டு போட்டிகளையும் பெங்கால் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

Web Title:

Pro kabaddi 2017 pardeep dupki king narwal sinks ailing bengaluru bulls

Related Posts
ஒரே பாய்ச்சலில் தாய், மகனை காப்பாற்றி மக்கள் மனதை வென்ற சிவகங்கை காளை (வீடியோ)
ஒரே பாய்ச்சலில் தாய், மகனை காப்பாற்றி மக்கள் மனதை வென்ற சிவகங்கை காளை (வீடியோ)

மஞ்சு விரட்டு என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். காளைகளின் கழுத்தில் மஞ்சல் துண்டு கட்டி விடுவார்கள். அதனை காளையர்கள் ஒன்று சேர்ந்து விரட்டி பிடித்து காளையை அடக்கி கழுத்தில் உள்ள மஞ்சல் துண்டை அவிழ்ப்பர். இதற்கு மஞ்சுவிரட்டு என பெயர். விவாகரத்து, குடி பழக்கம் மற்றும் விபத்தை கடந்து மீண்டு இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்… இன்றைய தமிழக செய்திகளின் லேட்டஸ்ட் அப்டேட்டுகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும் தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு […]

துரத்திய நெட்டிசன்கள் : துவளாத ஜல்லிக்கட்டு போராட்ட பிரபலம் ஜூலி
துரத்திய நெட்டிசன்கள் : துவளாத ஜல்லிக்கட்டு போராட்ட பிரபலம் ஜூலி

Jallikattu protest fame Julie : ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமடைந்த ஜூலி, ஜல்லிக்கட்டு போராட்ட படத்தை இந்நேரத்தில் பகிர்ந்தவிவகாரம், சமூகவலைதளங்களில் பெரும்விவாதப்பொருளாக மாறியுள்ளது.

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close