Advertisment

Tamil Nadu News Today Updates: முதலமைச்சர் பழனிசாமிதான் தமிழகத்திற்கு சூப்பர் ஸ்டார் - அமைச்சர் கடம்பூர் ராஜு

Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates: தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu News Today Updates: முதலமைச்சர் பழனிசாமிதான் தமிழகத்திற்கு சூப்பர் ஸ்டார் - அமைச்சர் கடம்பூர் ராஜு

Flash News in Tamilnadu Today Updates: பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகியோரின் மேம்பாட்டில், கவர்னர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. அவர்களின் வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சியுடனும், உள்நாட்டு பாதுகாப்புடனும் இணைந்துள்ளது,'' என, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.

Advertisment

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்தாலும், தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம்,அனைத்து கட்சியினரிடமும் எழுந்துள்ளது. புதிய மாவட்டங்களில், வார்டு வரையறை முறையாக செய்யப்படவில்லை எனக் கூறியும், மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிக்கு, மறைமுக தேர்தல் நடத்துவதை எதிர்த்தும், சிலர் நீதிமன்றம் செல்ல முடிவு செய்துள்ளனர்.இதன் காரணமாக, அனைத்து கட்சியினரும், தேர்தல் நடக்குமா, நடக்காதா என்ற சந்தேகத்துடனேயே உள்ளனர். உள்ளாட்சி தேர்தல் நடந்தால், பலத்தை சோதிக்கும் முயற்சியில் ஏற்படும் பின்னடைவு, சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால், சில கட்சிகள் தற்காலிகமாக நிம்மதி அடைந்துள்ளன. ஆனால், இரண்டாவது முறையாக, விருப்ப மனு கொடுத்தவர்கள், இம்முறையும் தாங்கள் செலுத்திய பணம் வீணாகி விடுமோ என்ற பதைபதைப்பில் உள்ளனர்.தேர்தல் நடப்பதுதள்ளிப் போனால், மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிக்கு விண்ணப்பித்தோருக்கு, பணம் திரும்ப வழங்கப்பட்டது போல, தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என, விருப்ப மனு அளித்தவர்கள், கட்சி தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    21:11 (IST)24 Nov 2019

    முதலமைச்சர் பழனிசாமிதான் தமிழகத்திற்கு சூப்பர் ஸ்டார் - அமைச்சர் கடம்பூர் ராஜு

    சென்னை வேல்ஸ் பிலிம் நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு: தமிழ் சினிமா துறைக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தும் முதலமைச்சர் பழனிசாமிதான் தமிழகத்திற்கு சூப்பர் ஸ்டார் என்று கூறினார்.

    20:33 (IST)24 Nov 2019

    உலகப் படங்களுக்கு நிகராக தமிழ்ப் படங்கள் தயாரிக்கப்படுவது பெருமை - முதல்வர் பழனிசாமி

    முதலமைச்சர் பழனிசாமி: உலகப் படங்களுக்கு நிகராக தமிழ்ப் படங்கள் தயாரிக்கப்படுகிறது என்பதை பார்க்கும் போது பெருமையாக உள்ளது. இந்திய சினிமா நூற்றாண்டை கடந்திருப்பது மாபெரும் சாதனை. உலகமெங்கும் பேசப்படும் திரைப்படங்களைத் தருபவர்கள் தமிழ்த் திரையுலகினர்தான். நகைச்சுவை படங்களை பார்க்கும் போது மனதிலுள்ள கவலைகள் நீங்கும். எம்ஜிஆரை போன்று நல்ல கருத்துகளை சினிமா கலைஞர்கள் எடுத்துரைக்க வேண்டும். தீய கருத்துகளை பரப்பும் வகையிலான படங்களை எடுக்க வேண்டாம் என திரையுலகினரை கேட்டுக்கொள்கிறேன்.

    19:56 (IST)24 Nov 2019

    மகாராஷ்டிராவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு கட்சி தலைவர்கள் வருகை

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஹமது படேல், மும்பையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தங்கியிருக்கும் நட்சத்திர விடுதிக்கு வந்தார். மேலும், அங்கே அஷோக் சவான், பாலாசாஹேப் தோரட், சுஷில் குமார் ஷிண்டே, மல்லிகார்ஜூன் கார்கே உள்ளிட்ட தலைவர்களும் உள்ளனர்.

    19:52 (IST)24 Nov 2019

    மகாராஷ்டிராவில் என்.சி.பி எம்.எல்.ஏ.-க்கள் வேறு விடுதிக்கு மாற்றம்

    மும்பையில் என்.சி.பி கட்சி எம்.எல்.ஏ-க்கள் தங்கிருந்த விடுதியில் இருந்து பாதுகாப்பு காரணமாக மற்றொரு நட்சத்திர விடுதிக்கு மாற்றப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    18:38 (IST)24 Nov 2019

    பாஜகவுடன் இணைந்து என்.சி.பி ஆட்சி அமைக்குமா என்ற கேள்விக்கு இடமில்லை - சரத் பவார்

    செய்தியாளர்களிடம் பேசிய என்.சி.பி தலைவர் சரத்பவார்: பாஜகவுடன் இணைந்து தேசியவாத காங்கிரஸ் ஆட்சி அமைக்குமா என்ற கேள்விக்கே இடமில்லை. சிவசேனா மற்றும் காங்கிரஸ் உடன் இணைந்து ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் ஒரு மனதாக முடிவு. மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அஜித் பவார் தவறான தகவலை வெளியிடுகிறார் என்று கூறினார்.

    18:22 (IST)24 Nov 2019

    குட்கா முறைகேடு வழக்கில் தமிழக முன்னாள் டிஜிபி ராஜேந்திரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்

    குட்கா முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை டிசம்பர் 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் தமிழக முன்னாள் டிஜிபி ராஜேந்திரனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதே போல, சென்னை கூடுதல் காவல் ஆணையர் தினகரன் வரும் 3ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவு.

    18:17 (IST)24 Nov 2019

    என்.சி.பி சுப்ரியா உடன் சிவசேனா ஆதித்ய தாக்கரே சந்திப்பு

    மும்பையில் தேசியவாத காங்கிரசின் சுப்ரியா சுலே மற்றும் ரோகித் பவார் உடன் சிவசேனாவின் ஆதித்ய தாக்கரே மற்றும் சஞ்சய் ராவத் ஆகியோர் சந்தித்தனர்.

    17:47 (IST)24 Nov 2019

    எச்.ராஜா இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர், துணை, முதல்வர் ஸ்டாலின், ரஜினி பங்கேற்பு

    பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

    திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின், இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    நடிகர்கள் ரஜினிகாந்த் ,விவேக், கவுதமி உள்ளிட்டோரும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

    17:39 (IST)24 Nov 2019

    பாஜக சட்டமன்ற உறுப்பினர் கூட்டம் முடிந்தது

    இன்று மகாராஷ்டிர பாஜக அலுவகலத்தில்  நடைபெற்ற  சட்டமன்ற உறுபினர்கள் கூட்டம் தற்போது முடிவடைந்து இருக்கிறது .  கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய ஆஷிஷ் ஷெலார், " எங்களது அணியில் உள்ள அனைத்து உருப்பினர்களும் கலந்து கொண்டனர். எங்களுக்கு ஆதரவு கொடுக்கும்  சுயேச்சை எம்.எல்.ஏ- க்களின் கூட்டம் தனியாக மற்றொரு இடத்தில் நடைபெறும் என்று தெரிவித்தார்.    

    17:31 (IST)24 Nov 2019

    பாஜக - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தொடரும்

    அஜித் பவாருக்கும், சரத் பவாருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் உருவாகிவரும் சூழ்நிலையில் அஜித் பவார் சில ட்விட்டின் மூலம் தனது கருத்தை பதிவு செய்து வருகிறார். அதில், நான் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தான் இருக்கிறேன், அக்கட்சியில் தான் எப்போதும் இருப்பேன். சரத் பவார் சாகேப் தான் எங்கள் தலைவர்.  நமது பாஜக- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மக்களின் நன்மைக்காக  அடுத்த ஐந்து வருடம் நிலையற்ற ஆட்சியைக் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.         

    மேலும் அவர், யாரும் எதற்கும் பயப்பட வேண்டாம், எல்லாம் நன்றாக  நடக்கின்றது. என்ன இருந்தாலும் பொறுமை இங்கு தேவைப்படுகிறது. உங்களுடைய அனைத்து உதவிகளுக்கும் எனது மனமார்ந்த நாரி எனவும் தெரிவித்து இருக்கிறார்.      

    16:32 (IST)24 Nov 2019

    நிலையான ஆட்சியை உறுதி செய்வோம் - அஜித் பவார்

    மகாராஷ்ட்ராவில் கடந்த சனிக்கிழமை முதல்வராக பாரதிய ஜனதாவின் தேவேந்திர பட்னவிஸூம், துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார், பதவியேற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து பாஜக கட்சியைசஜ் சேர்ந்த அத்துனை தலைவர்களும் அஜித் பவாருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதற்கு இப்போது அஜித் பவார் ட்விட்டரில் நன்றி தெரிவித்து வருகிறார். பிரதமர் மோடிக்கு அவர் அனுப்பிய ட்விட்டில் , நன்றி பிரதமர் மோடி அவர்களே, மகாராஷ்டிரா மக்களுக்காக ஒரு நிலையான ஆட்சி அமைவதை நாங்கள் உறுதி செய்வோம்   என்று பதிவு செய்திருக்கிறார்.       

    15:58 (IST)24 Nov 2019

    மகாராஷ்டிரா ஆளுநர் பதவி விலக வேண்டும் - ராஜஸ்தான் முதல்வர் கருத்து

    பாஜக சொல்வது போல் மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோசியாரி மனசாட்சிக்கும் , அரசியல் நெறிமுரைக்கும் பதில் சொல்லும் விதமாக தனது ஆளுநர் பதவில் இருந்து உடனதியாக விலக வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலட் தெரிவித்து இருக்கிறார். 

    15:54 (IST)24 Nov 2019

    காங்கிரஸ் பாராளுமன்ற நாடாளுமன்ற யுக்தி கூட்டம் நாளை நடைபெறுகிறது

    காங்கிரஸ் நாடாளுமன்ற யுக்தி குழு  நாளை சோனியா காந்தி தலைமையில் கூடுகிறது  . கட்சி இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் அதிகாரப்பூர்வ இல்லமான ஜன்பத்தில்  நாளை காலை  10 மணி அளவில் இந்த கூட்டம் நடைபெறுகிறது  

    15:48 (IST)24 Nov 2019

    உத்தவ் தாக்கரே , சரத் பவார் சந்திப்பு நடைபெற்று வருகிறது

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மும்பையில் ரினையசன்ஸ் ஓட்டலில் தங்கவைக்கப் பட்டிருக்கின்றனர். அந்த ஓட்டலுக்கு சற்று முன்பு வந்த சிவா சேன தலைவர்  உத்தவ் தாக்கரே தற்போது கட்சித் தலைவர் சரத் பவாரிடமும் , அவரது கட்சி உறுப்பினர்களிடமும் பேசி வருகிறார். 

    publive-imagepublive-imagepublive-image

    15:43 (IST)24 Nov 2019

    பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூடியது

    மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அமைத்துள்ள அரசுக்கு எதிராக சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் , கவர்னர் பிறப்பித்த உத்தரவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தற்போது அதன் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், முதல்வர் பட்னாவிஸ் , மத்திய ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல்  ஆகியோர் கலந்து கொள்கின்றனர். 

    publive-image

    15:01 (IST)24 Nov 2019

    இலங்கைத் தமிழர்களின் கண்ணியத்தை குறைக்கும் செயல் - ஸ்டாலின் கண்டனம்

    பதவியேற்ற சில நாட்களிலே , தமிழர்களின் இதயங்களைக் காயப்படுத்தி, அவர்களின் கண்ணியத்தைக் குறைக்கும் பணியினை ராஜபக்ச சகோதரர்கள்  துவக்கிவிட்டது ஏமாற்றமளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  இலங்கையில் வாழும் தமிழர்கள் பகுதியில் துப்பாக்கி ஏந்திய ராணுவத்தை குவிப்பதையும் ,  தமிழர்கள் வாழும் பகுதிகளில் இருக்கும் தமிழ் தெருக்களின் பெயர்களை மாற்றிவருவதையும், அப்பாவி மீனவர்கள்  மீதான தாக்குதல்கள்  அதிகரித்து இருப்பதையும் திமுக வன்மையாக கண்டிக்கின்றது என்றும் தெரிவித்துள்ளளார்.      

    13:49 (IST)24 Nov 2019

    அதிசயத்தை அதிமுக நிகழ்த்தும் – அமைச்சர் தங்கமணி

    அதிசயம் நடக்கும் என சிலர் கூறி வருகின்றனர்; 2021 தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று அதிசயம் நிகழ்த்தும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

    13:11 (IST)24 Nov 2019

    அதிமுக உட்கட்சி விதிகளில் திருத்தம்

    அதிமுக உட்கட்சி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உட்கட்சி தேர்தலில் போட்டியிடுவோர் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் . ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிடுவோர் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

    12:55 (IST)24 Nov 2019

    பட்னாவிஸ் அரசு மீதான மனு விசாரணை 25ம் தேதிக்கு ஒத்திவைப்பு

    முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தமக்கு இருக்கும் ஆதரவு, கவர்னர் பிறப்பித்த உத்தரவு உள்ளிட்டவைகளை மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் நாளை (25ம் தேதி) தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த மனுவின் விசாரணையை, நாளைக்கு ஒத்திவைத்தனர்.

    12:11 (IST)24 Nov 2019

    போதிய ஆதரவு இல்லாமல் அஜித் பவார் எப்படி துணை முதல்வரானார் – சிங்வி கேள்வி

    மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அமைத்துள்ள அரசுக்கு எதிராக சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை துவங்கி நடைபெற்று வருகிறது.  

    காங்கிரஸ் தரப்பில் அபிஷேக் மானு சிங்வி வாதாடி வருகிறார். அவர் தனது தரப்பு வாதத்தில் தெரிவித்துள்ளதாவது,  தேசியவாத காங்கிரஸ் கட்சியில் மொத்தமுள்ள 54 எம்எல்ஏக்களில் 41 எம்எல்ஏக்கள் அஜித் பவாருக்கு எதிராக உள்ளனர். போதிய ஆதரவு இல்லாத அஜித் பவார், எப்படி துணை முதல்வர் ஆனார்? தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களின் நிறைவேற்றியுள்ள தீர்மானம் மராத்தி மொழியில் உள்ளது.  அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கவர்னரிடம் இன்று வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

    11:52 (IST)24 Nov 2019

    பட்னாவிஸ் அரசுக்கு எதிரான மனு – உச்சநீதிமன்றத்தில் விசாரணை துவக்கம்

    மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அமைத்துள்ள அரசுக்கு எதிராக சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை துவங்கி நடைபெற்று வருகிறது.  

    இதில் ஆஜரான கபில் சிபல் கூறியதாவது, தேர்தலுக்கு முந்தைய கூட்டணி உடைந்ததன் காரணமாகவே, தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்து பேசு்சுவார்த்தை நடைபெற்று இறுதி முடிவு எடுக்கப்பட்ட நிலையில், பட்னாவிஸ் அரசு தடாலடியாக பதவியேற்றுள்ளது. உத்தவ் தாக்ரே முதல்வர் என்று அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், அதிகாலை நேரத்தில் எவ்வித முன்னறிவிப்புமின்றி பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றுள்ளதாக அவர் தனது தரப்பு வாதத்தை எடுத்துவைத்தார்.

    11:27 (IST)24 Nov 2019

    அஜித் பவார் தவறை உணர்ந்து திரும்புவார் – தேசியவாத காங்கிரஸ்

    அஜித் பவார், தான் செய்த தவறை உணர்ந்து மீண்டும் மனம்மாறி கட்சிக்கு திரும்புவார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி செய்தித்தொடர்பாளர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம், இன்று மாலை நடைபெற உள்ளது. பட்னாவிசால், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது.  அவர் விரைவில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார். அஜித் பவார் தவறிழைத்து விட்டார். அவர் செய்த தவறை உணர்ந்து மீண்டும் கட்சிக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை தங்களுக்கு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

    11:03 (IST)24 Nov 2019

    அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் துவங்கியது

    சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தொடங்கியது.  முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.  உள்ளாட்சி தேர்தல் மற்றும் கட்சி விதிகளில் மாற்றம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

    10:38 (IST)24 Nov 2019

    சென்னையில் வெங்காயத்தின் விலை சதமடித்தது

    சென்னை, கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 110 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வடமாநிலங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக வரத்து குறைந்ததே விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது

    09:43 (IST)24 Nov 2019

    கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் இன்‌று மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    09:06 (IST)24 Nov 2019

    பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்

    சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 11 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.77.49 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் லிட்டருக்கு 7 காசுகள் குறைந்து ரூ.69.47 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

    09:03 (IST)24 Nov 2019

    பாலில் கலப்படம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை – பிரேமலதா விஜயகாந்த்

    பாலில் நச்சுத்தன்மை, கலப்படம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் - பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் அவசரமாக ஆட்சியமைக்க, அங்கு ஒன்றும் இல்லை; அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக எதையும் செய்யக் கூடாது என அவர் மேலும் கூறியுள்ளார்.

    Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates : தலித் சமுதாய மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும், தமிழ் திரையுலக கலைஞர்களின் ஆதரவை பெறவும், இளையராஜாவின், 50 ஆண்டு கால இசைப் பணியை பாராட்டி விழா நடத்த, தமிழக பா.ஜ., முடிவு செய்துள்ளது. பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:பிரதமர் மோடியின் வீட்டில், மொபைல் போன் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதற்கு, பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஏற்கனவே அதிருப்தி தெரிவித்திருந்தார். இது தொடர்பாக, அவர், 'டுவிட்டர்' பக்கத்தில், 'பிரதமர் மோடியின் வீட்டிற்கு, விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றேன். அப்போது, பாதுகாப்பு வீரர்கள், என்னிடம் இருந்த மொபைல் போனை வாங்கினர்.பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:பிரதமர் மோடியின் வீட்டில், மொபைல் போன் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதற்கு, பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஏற்கனவே அதிருப்தி தெரிவித்திருந்தார். . இளையராஜாவுக்கு நடத்தும் பாராட்டு விழாவில், எஸ்.பி.பாலசுப்பிர மணியத்தை அழைத்து, அவரையும் கவுரவிப்பதன் வாயிலாக, அந்த அதிருப்தியை போக்க முடியும். மேலும், பிரதமர் மோடியுடன், ரஜினி, கமல் ஒன்றாக கைகோர்க்கும் அரசியல் அதிசயம் நிகழும். தமிழக அரசியல் கூட்டணியின் காட்சிகளும் மாறும் வாய்ப்பு உருவாகும். இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

    ரஜினி, கமல் கூட்டணி பேச்சை தொடர்ந்து, தமிழக தேர்தல் கள வியூகம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. தமிழகத்தில், ரஜினி, கமல் கூட்டணி பேச்சு, மற்ற கட்சிகளை உஷார்படுத்தி உள்ளது. சொல்லி வைத்தார் போல், ரஜினியும், கமலும், அடுத்தடுத்து கூட்டணி குறித்து பேசி, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை உசுப்பி விட்டுள்ளனர்.வியூகம்ரஜினி இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை என்றாலும், இந்த கூட்டணியை, ஆளும் கட்சி உள்பட, எந்த கட்சிகளுமே விரும்பவில்லை. அ.தி.மு.க.,வில் தொடங்கி, தி.மு.க., காங்கிரஸ், நாம் தமிழர், கம்யூனிஸ்ட் என, பலரும் ரஜினி, கமலை விமர்சிக்க துவங்கியுள்ளனர்.

    Tamil Nadu Rajinikanth Narendra Modi Maharashtra
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment