Advertisment

முரசொலி சர்ச்சை - டாக்டர் ராமதாஸ், பாஜக சீனிவாசனுக்கு திமுக நோட்டீஸ்

Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates: தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Local body election live updates

Local body election live updates

Flash News in Tamilnadu Today Updates: வங்கிகளில், பல கோடி ரூபாய் கடன் வாங்கி, அவற்றை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாத, 30 மோசடி பேர்வழிகளின் பட்டியலை, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. 'இவர்கள் திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ள கடன் தொகை, கடந்த ஏப்ரல் மாதம் வரை, 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது' என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Advertisment

உள்ளாட்சிகளில் மறைமுக தேர்தலை கொண்டு வந்ததே தி.மு.க.,தான், என முதல்வர் பழனிசாமி துாத்துக்குடியில் தெரிவித்தார். 2006 ஜூன் 31 ல் சட்டசபையில் அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின், ''அசாம்,குஜராத் போன்ற மாநிலத்தில் மறைமுக தேர்தல் நடக்கிறது. விழுப்புரம், விருதாச்சலம் 2 நகராட்சிகளில் நேரடி தேர்தல் நடைபெற்றதால் அந்த அமைப்புகள் செயல்பட முடியாமல் இருந்தது. அதனால் தான் மறைமுக தேர்தல் கொண்டுவரப்பட்டது. மேயர் ஒரு கட்சியாகவும், பெரும்பான்மையான கவுன்சிலர்கள் வேறு ஒரு கட்சியாகவும் இருந்தால் அது மக்களுக்கு நன்மையளிக்காது,'' என விளக்கியுள்ளார்.

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.














Highlights

    21:52 (IST)22 Nov 2019

    24 முதல் 29ம் தேதி வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம்

    உள்ளாட்சி தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 24 முதல் 29ம் தேதி வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் - தினகரன்

    20:53 (IST)22 Nov 2019

    விபத்து நடந்த இடத்தில் கொடி கம்பம் இல்லை - தமிழக அரசு தகவல்

    சட்டவிரோத பேனர் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சுபஸ்ரீ மரணத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கோரி அவரது தந்தை தொடர்ந்த வழக்கு உள்ளிட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோயம்புத்தூரில் இளம்பெண் ராஜேஸ்வரிக்கு விபத்து நடந்த இடத்தில் கொடி கம்பம் ஏதும் இல்லை எனவும் நீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் பேனர் வைக்க யாருக்கும் அனுமதி வழங்குவதில்லை என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்தது. பேனரால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அந்த குடும்பதிற்கான இழப்பீட்டை சம்பந்தப்பட்டவர்களிடம் ஏன் வசூலிக்க கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜனவரி 6-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

    20:26 (IST)22 Nov 2019

    அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்று கட்டாயமில்லை

    அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்று கட்டாயமில்லை. ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெறும் விவகாரத்தில் அனைத்து சங்கங்களிடமும் கருத்து கேட்கப்பட்டு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

    20:08 (IST)22 Nov 2019

    தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

    கல்வியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவரை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை. துணைவேந்தராக நியமிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

    3 வாரங்களுக்குள் துணைவேந்தரை நியமிக்கப்பட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

    20:08 (IST)22 Nov 2019

    கனமழை

    திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது

    20:07 (IST)22 Nov 2019

    அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும்

    மருத்துவ மேற்படிப்பில் பி.சி, எம்.பி.சி., பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்த விவகாரம் தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

    20:07 (IST)22 Nov 2019

    தமிழகம் வருகிறார் ஜே.பி.நட்டா

    உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனை, பாஜக அலுவலகங்களுக்கான அடிக்கல் நாட்டுவிழாவிற்கு பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா வரும் 30ம் தேதி தமிழகம் வருகிறார்

    20:02 (IST)22 Nov 2019

    பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜக மாநில செயலாளர் சீனிவாசனுக்கு திமுக நோட்டீஸ்

    முரசொலி தலைமை அலுவலகம் அமைந்திருக்கக் கூடிய இடம் பஞ்சமி நிலம் என தவறான கருத்தை கூறியதாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் ஆகியோர் 48 மணி நேரத்துக்குள் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

    தவறும் பட்சத்தில் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு இருவர் மீதும் வழக்கு தொடரப்படும் என திமுக அமைப்புச் செயலாளரும் முரசொலி அறக்கட்டளையின் அறங்காவலருமான ஆர்எஸ் பாரதி நோட்டீஸ்.

    19:39 (IST)22 Nov 2019

    பாத்திமா மரணத்தில் மர்மம் உள்ளது - பாத்திமாவின் தந்தை

    சென்னை ஐஐடியில் நவம்பர் 9 ஆம் தேதி பாத்திமா லத்தீஃப் என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். பாத்திமாவின் மரணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப்: பாத்திமா மரணத்தில் மர்மம் உள்ளது. இதனை தற்கொலை என ஒதுக்கிவிட முடியாது என தெரிவித்துள்ளார்.

    19:32 (IST)22 Nov 2019

    உத்தவ் தாக்கரேவை முதல்வராக ஏற்க கருத்து ஒற்றுமை - சரத்பவார்

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்: மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை முதல்வராக ஏற்க கருத்து ஒற்றுமை ஏற்பட்டுள்ளது; மகாராஷ்டிரா விகாஸ் அகாதி என்ற பெயரில் 3 கட்சிகளும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

    18:31 (IST)22 Nov 2019

    மு.க.ஸ்டாலின் ரஜினி, கமலுடன் கூட்டணி அமைக்க முயற்சி - அமைச்சர் ஜெயக்குமார்

    செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ரஜினி, கமலுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

    17:27 (IST)22 Nov 2019

    ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை வழக்கு: இரு தரப்பும் ஆவணங்களை சமர்ப்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

    தி.மு.க. வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ராதாபுரம் தொகுதியில், மறுபடியும் வாக்குகள் எண்ணப்பட்டன. இதை எதிர்த்து அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை முடிவுகளை வெளியிட தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட இடைக்கால தடைவிதித்தது. இன்று நடைபெற்ற விசாரணையில், எம்.எல்.ஏ இன்பதுரை, தி.மு.க வேட்பாளர் அப்பாவு இரு தரப்பும் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க உத்தரவு.

    16:47 (IST)22 Nov 2019

    ஐஐடி மாணவி பாத்திமா மரணத்தில் நீதி கிடைக்குமா என்பது சந்தேகம் - திருமாவளவன்

    செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணத்தில் நீதி கிடைக்குமா என்பதில் சந்தேகம்தான். மறைமுகத் தேர்தல் என்பது குதிரை பேரம், ஆள் கடத்தல் போன்றவைக்கு வழிவகுக்கும் . மக்களால் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால்தான் சுதந்திரமாகத் தீர்மானங்களைக் கொண்டுவர முடியும்.” என்று கூறினார்.

    16:12 (IST)22 Nov 2019

    இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகத்துக்கு 2வது இடம்

    இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை 1,35,456 என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    15:37 (IST)22 Nov 2019

    எத்தனையோ பாவங்களுக்கு சூத்திரதாரி ஈபிஎஸ் - துரைமுருகன் விமர்சனம்

    ஸ்டாலினுக்கு பாவமன்னிப்பு கிடையாது என முதல்வர் பழனிசாமி கூறியது பற்றி திமுக பொருளாளர் துரைமுருகன் கூறுகையில், “அரசியல் வாழ்க்கை தொடங்கியது முதல் கொடநாடு வரை எத்தனையோ பாவங்களுக்கு சூத்திரதாரி எடப்பாடி பழனிசாமி. பொது வாழக்கையில் நேர்மையும் தூய்மையும் உள்ளோர்தான் பாவம் புண்ணியம் பற்றி பேச வேண்டும். மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து புதிய பெயரைச் சூட்டினாலே சாதனை என நினைக்கிறார் முதல்வர். மறைமுகத் தேர்தல் என்பது ஒருநாள் இரவில் உதயமானதற்கு என்ன காரணம்? தோல்விபயம்தானே?” என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    14:59 (IST)22 Nov 2019

    மகாராஷ்டிராவில் சிவசேனா, காங். என்.சி.பி அரசு அமைத்தாலும் நீடிக்காது - நிதின் கட்கரி

    மகாராஷ்டிராவில் அரசு அமைப்பது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி: காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் இடையே சித்தாந்த வேறுபாடு உள்ளது. அதனால், அவர்கள் அரசு அமைத்தாலும் அதிகம் நீடிக்காது என்று கூறியுள்ளார்.

    14:40 (IST)22 Nov 2019

    தமிழகத்தில் பாலில் நச்சுத்தன்மை; நாடளுமன்றத்தில் டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

    மக்களவையில், தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு பாலில் நச்சுத்தன்மை கலந்திருப்பதாக எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே பதிலளித்தார். அபோது அவர், “தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக நச்சுத்தன்மை உள்ளது. தமிழகம் கேரளா டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் பாலில் அஃப்லா டாக்சின் எம்.ஒன் (Aflatoxin M1) என்ற நச்சுத்தன்மை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக உள்ளது. நச்சுத் தன்மை அதிகமாக உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. அங்கே சேகரிக்கப்பட்ட மாதிரிகளை கொண்டு உணவு கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட 551 மாதிரிகளில் 88 மாதிரிகளில் இந்த நச்சுத்தன்மை அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. அதேபோல கேரளாவில் இருந்து சேகரிக்கப்பட்ட 187 மாதிரிகளில் 37 மாதிரிகளில் நச்சுத் தன்மை அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.

    14:19 (IST)22 Nov 2019

    அனைத்து இடஒதுக்கீடு விவரங்கள் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய பிரதமருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

    நாடாளுமன்றத்தின் நடப்பு கூட்டத்தொடரில் அனைத்து இடஒதுக்கீடு விவரங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை பிரதமர் மோடி தாக்கல் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும், மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டை நிராகரிப்பது பிற்படுத்தப்பட்டோரை வஞ்சிக்கும் போக்காகும் என்று கூறியுள்ளார்.

    14:16 (IST)22 Nov 2019

    ராணுவ வீரர்கள் வாட்ஸ்அப் செயலியில் செட்டிங்கை மாற்ற வேண்டும் - இந்திய ராணுவம் அறிவுரை

    இந்திய ராணுவ வீரர்கள் வாட்ஸ்அப் செயலியில் செட்டிங்கை மாற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் உளவு நிறுவனங்கள் வேவு பார்க்காமல் தடுப்பதற்காக இந்திய ராணுவம் அறிவுரை வழங்கியுள்ளது. இந்திய வீரரின் செல்போன் எண் பாகிஸ்தான் வாட்ஸ்அப் குரூப்பில் தானாகவே சேர்க்கப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    13:55 (IST)22 Nov 2019

    தென்காசி மாவட்டத்தை உருவாக்கும் அரசாணையை எதிர்த்த மனு தள்ளுபடி - உயர் நீதிமன்றம்

    நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரித்து தென்காசி மாவட்டத்தை உருவாக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    13:49 (IST)22 Nov 2019

    இந்தியா - பங்களாதேஷ் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி; தொடங்கிவைத்த மம்தா பானர்ஜி, ஷேக் அசினா

    இந்தியா பங்களாதேஷ் அணிகள் மோதும் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் மேற்கு வங்க முதல்வர் ம‌ம்தா பானர்ஜி ஆகியோர் மணி அடித்து தொடங்கி வைத்தனர்.

    13:29 (IST)22 Nov 2019

    கமல்ஹாசனை சந்தித்த மு.க.ஸ்டாலின்

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து நலம் விசாரித்தார். ஏற்கனவே கமல்ஹாசனுக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின்போது காலில் வைக்கப்பட்ட டைட்டனியம் கம்பியை அகற்றுவதற்காக இன்று சிறு அறுவை சிகிச்சை கமல்ஹாசனுக்கு மேற்கொள்ளப்பட்டது.

    மேற்படி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டிருப்பதாக மக்கள் நீதி மய்யம் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நலம் விசாரிக்க மு.க.ஸ்டாலின் நட்பு அடிப்படையில் சென்று கமல்ஹாசனை சந்தித்ததாக கூறினாலும், அரசியல் வட்டாரத்தில் இந்த சந்திப்பு கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

    13:01 (IST)22 Nov 2019

    அதிக நச்சுத்தன்மை கொண்ட பால் பயன்பாடு – தமிழகம் முதலிடம்

    அதிக நச்சுத்தன்மை கொண்ட பால் பயன்பாடு உள்ள மாநிலங்களில்  தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் செளபே தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட 88 மாதிரிகளில் நச்சுத்தன்மை மிக அதிகமாக இருந்தது, உணவுக் கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

    தமிழகம், கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாலில் Aflatoxin M1 என்ற நச்சுத்தன்மை இருந்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

    12:02 (IST)22 Nov 2019

    ரஜினிக்கு கே.எஸ். அழகிரி பதிலடி

    2021ம் ஆண்டில் தமிழக அரசியலில் அதிசயம், அற்புதம் நிகழும் என்று நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்த நிலையில், 2021ல் அதிசயம் நிகழும் என்ற சினிமா வேண்டுமானால் வரும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 

    ரஜினி போன்றவர்கள் அரசியலுக்கு வருவது தவறான ஒன்று என்பது எனது கருத்து என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    11:35 (IST)22 Nov 2019

    தண்டனை நிறுத்திவைப்பு

    திமுக முன்னாள் எம்எல்ஏ அசோகனுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இந்த வழக்கில், அசோகன் மேல்முறையீடு செய்ய கோரிக்கை வைத்ததை தொடர்ந்து தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    11:15 (IST)22 Nov 2019

    சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை துவக்கம்

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்திடம், அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அளித்த அனுமதியின் அடிப்படையில், 4 அதிகாரிகள், சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    11:05 (IST)22 Nov 2019

    திமுக முன்னாள் எம்எல்ஏ அசோகனுக்கு 3 ஆண்டுகள் சிறை

    மனைவியை கொல்ல முயன்ற வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏ அசோகன் குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அசோகனுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

    10:58 (IST)22 Nov 2019

    தென்காசி மாவட்டம் ஏன்? - முதல்வர் பழனிசாமி விளக்கம்

    மக்களின் கோரிக்கையின் படியே, திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரித்து தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கும் புதிய மாவட்டங்கள் உருவாக்குவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    10:27 (IST)22 Nov 2019

    33வது மாவட்டமாக உதயமானது தென்காசி

    தமிழகத்தின் 33வது மாவட்டமாக தென்காசி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

    புதிய மாவட்டம் தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய 2 கோட்டங்கள் மற்றும் 8 தாலுகாக்களை உள்ளடக்கியதாக அமையும்.  தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர், ஆலங்குளம், வாசுதேவநல்லூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளை தன்னகத்தே இந்த மாவட்டம் கொண்டிருக்கும்.

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆயிரம்பேரி பகுதியில் 37 ஏக்கர் பரப்பில் அமைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    10:02 (IST)22 Nov 2019

    அதிமுக வழியில் திமுக : விருப்பமனு கட்டணம் ‘ரிட்டர்ன்’

    திமுக தலைமை இன்று (நவம்பர் 22ம் தேதி ) காலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு விருப்பமனு அளித்தவர்கள் அதற்கான கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். நவம்பர் 28 முதல் 30 வரை ரசீதை காட்டி, கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு போட்டியிடுவோர் தவிர கவுன்சிலர்களுக்கு போட்டியிடுவோர், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நவ.,27 வரை விருப்ப மனு அளிக்கலாம்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    09:45 (IST)22 Nov 2019

    ஏறுமுகத்தில் பெட்ரோல் விலை

    சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 16 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.77.29 ஆகவும், டீசல், நான்காவது நாளாக விலையில் மாற்றமின்றி லிட்டர் ரூ.69.59 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

    09:42 (IST)22 Nov 2019

    நாகையில் கனமழை – பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

    நாகப்பட்டினத்தில் கனமழை பெய்துவருவதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் பிரவீன் நாயர் உத்தரவிட்டுள்ளார். தேனி, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates : கோவாவில் நடந்த விழாவில், 'கோல்டன் ஐகான்' என்ற, விருது வாங்கியதில் மகிழ்ச்சி. அந்த விருது வாங்கியதற்கு, தமிழக மக்கள் தான் காரணம். இந்த விருதை, தமிழக மக்களுக்கே சமர்ப்பிக்கிறேன்.நானும், கமலும் இணைந்து செயல்படுவது என்பது, தேர்தல் நேரத்தில், அப்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு எடுக்க வேண்டிய முடிவு. அதிலும், நான் கட்சி ஆரம்பிக்கும் போது, கட்சி உறுப்பினர்களை கலந்து பேசிய பின், எடுக்க வேண்டிய முடிவு. எங்களில் யார், முதல்வர் வேட்பாளர் என்பது குறித்து, இப்போது கருத்து கூற விரும்பவில்லை. தமிழக மக்கள், வரும், 2021ல், அரசியலில் மிகப்பெரிய அற்புதத்தை, அதிசயத்தை, நுாற்றுக்கு நுாறு சதவீதம் நிகழ்த்துவர்.இவ்வாறு, ரஜினி கூறினார்.

    பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கவும், தேர்தல் நிதி பத்திரங்கள் தொடர்பான விதிமுறைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், லோக்சபாவில் கடும் அமளியில் ஈடுபட்டனர். அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, லோக்சபாவில் நேற்று எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபை கூடியதும், காங்., லோக்சபா தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, இந்தப் பிரச்னையை எழுப்பினார். அவர் பேசுகையில், ''மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம், நாடு கொள்ளையடிக்கப்படுகிறது; இது, மிகப் பெரிய திருட்டு,'' என்றார்.

    Tamil Nadu Kamal Haasan Narendra Modi
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment