Flash News in Tamilnadu Today Updates: 'என்.ஆர்.சி., எனப்படும், தேசிய குடிமக்கள் பதிவேடு, நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். மதத்தின் அடிப்படையில், யாரும் பாகுபாடு காட்டி நடத்தப்படமாட்டார்கள்,'' என, ராஜ்ய சபாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்தார். மேயர், நகராட்சி மன்ற தலைவர், பேரூராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சர்வாதிகார போக்கில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு திட்டமிட்டிருப்பதாக, தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவா திரைப்பட விழாவில், ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி’ விருதை வாங்கிய நடிகர் ரஜினிகாந்த், “என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளதால், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், 664 பதவிகளுக்கான நேரடி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சிகளில் உள்ள, 1,064 கவுன்சிலர்கள், நகராட்சிகளில் உள்ள, 3,468 கவுன்சிலர்கள், பேரூராட்சிகளில் உள்ள, 8,288 கவுன்சிலர்கள் பதவிகளுக்கு மட்டும், நேரடி தேர்தல் நடக்க உள்ளது. மொத்தத்தில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள, 12 ஆயிரத்து, 820 வார்டுகளுக்கு மட்டுமே, நேரடி தேர்தல் நடக்கவுள்ளது. வெப்பச் சலனம் மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் மழை மேலும் 2 நாள் நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Live Blog
Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனிலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சீனாவில் நடைபெறும் #ISSFWorldCupFinal-ல் தமிழகத்தைச் சேர்ந்த @elavalarivan 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
தங்கமங்கையின் வெற்றி தமிழகத்திற்கும், இந்தியத் திருநாட்டிற்கும் உலக அரங்கில் பெருமை சேர்த்துள்ளது. https://t.co/WnKgcly7Sf
— M.K.Stalin (@mkstalin) November 21, 2019
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் மனு
நவ.30ஆம் தேதியுடன் முடியும் தனது பதவிக்காலத்தை நீடிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
கடந்த ஓராண்டாக அரசு ஒத்துழைக்கவில்லை என மனுவில் பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு
ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிசப் பந்த், ஷிவம் துபே, கேதர் ஜாதவ், ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், ஷமி, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் ஆர். மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ 2016 ஆம் ஆண்டு நடந்த ஒரு விபத்தில் கமல்ஹாசனின் காலில் முறிவு ஏற்பட்டது. அதனை சரிசெய்வதற்காக கமல்ஹாசனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது, காலில் டைட்டேனியம் கம்பி ஒன்று பொருத்தப்பட்டது. அரசியல், சினிமா என பல்வேறு வேலைகளின் காரணாமாக அந்த கம்பியை அகற்ற நேரமில்லாமல் தள்ளிப்போனது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி நவம்பர் 22 ஆம் தேதியான நாளை அந்தக் கம்பி அகற்றப்பட உள்ளது. சிறிது நாட்கள் ஓய்வுக்கு பின்னர் நம்மவர் மீண்டும் பொதுமக்களை சந்திப்பார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சில வாரங்கள் மருத்துவ ஓய்விற்கு பின்னர் கமல்ஹாசன் கட்சி ஆலோசனைக் கூட்டங்களில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது"
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் காலில் உள்ள டைட்டேனியம் கம்பியை நீக்குவதற்காக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Press Release regarding Nammavar surgical treatment.#Nammavar #MakkalNeedhiMaiam pic.twitter.com/5UgPXBio3v
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) November 21, 2019
நாதுராம் கோட்சேவை தேசப் பக்தர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திய பிரக்யா தாகூர், பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக்குழுவில் இடம் பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள, பிரக்யாசிங் தாகூருக்கு பாதுகாப்பு ஆலோசனைக்குழுவில் இடம் அளித்திருப்பது, நமது பாதுகாப்பு படையை இழிவுபடுத்துவது போன்றது என்று காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த ஆலோசனைக்குழுவில், எதிர்க்கட்சித் தலைவர்கள் சரத் பவார் மற்றும் பரூக் அப்துல்லா ஆகியோருக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
மேயர், நகர்மன்ற தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அரசாணையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டது. இந்த முறையீட்டை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் நீலமேகம் கேட்டுக்கொண்டார். இதனை ஏற்ற நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு, முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கலாம் என அறிவுறுத்தினர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை இன்று, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய வேல்முருகன், உள்ளாட்சித் தேர்தலில் மறைமுக தேர்தலை கொண்டு வரும் தமிழக அரசின் நடவடிக்கையை வாழ்வுரிமைக் கட்சி கண்டிப்பதாக தெரிவித்தார். தோல்வி பயத்தின் காரணமாகவே, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்ற தலைவர்கள் மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் என அ.தி.மு.க. அரசு அறிவித்து உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார். தி.மு.க. வுடன் இணைந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் எனவும் வேல்முருகன் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே புதுச்சத்திரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் வேலைப்பார்த்து வந்த ஆசிரியர் சரவணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் பாய்ச்சல் பகுதியில் உள்ள அரசுப்பள்ளிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்ட ஆசிரியரை தங்கள் ஊருக்கு இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 14 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்காததை கண்டித்து, போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல ஆணையம் முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், கண்டன கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் சிஐடியூ பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார், தொமுச பொருளாளர் நடராஜன் தலைமையில் 9 தொழிற்சங்க கூட்டமைப்பை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழக தலைமை தகவல் ஆணையர் ராஜகோபாலுக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
"2021ம் ஆண்டிலும் அதிமுக ஆட்சி தொடரும் என்பதைத்தான் அதிசயம் நிகழும் என ரஜினி கூறியிருப்பார். 2021 ஆம் ஆண்டில் அதிமுவை சேர்ந்த ஒருவரே முதல்வர் வேட்பாளராக இருப்பார். ரஜினி கட்சி தொடங்கிய பிறகே அவர் குறித்து கருத்து கூற முடியும்" என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவா திரைப்பட விழாவில் ஐகானிக் ஆஃப் கோல்டன் ஜூப்ளி விருது வாங்கிய நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். ’ நான் வாங்கிய சிறப்பு விருதுக்கு தமிழ் மக்கள் தான் காரணம் என்றும் அவர்களுக்கு விருதை சமர்ப்பிக்கிறேன்’ சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்தார். அதோடு, 2021 ஆம் ஆண்டு மிகப்பெரிய அதிசயத்தை, அற்புதத்தை தமிழக மக்கள் அரசியலில் நிகழ்த்துவார்கள் என்றும் குறிப்பிட்டார்.
இலங்கையில் பிரதமராக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
Congratulations and best wishes to Prime Minister Mahinda Rajapaksa. I look forward to working closely with him for further strengthening fraternal India-Sri Lanka ties. pic.twitter.com/fgc8H9MRab
— Narendra Modi (@narendramodi) November 21, 2019
மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் இடையே கொள்கை அளவில் ஒப்பந்தம். எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அமைச்சரவையில் இடஒதுக்கீடு செய்யப்படுகிறது. கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர், குறைந்தபட்ச செயல்திட்டம் நாளை இறுதி செய்யப்பட உள்ளதாக தகவல். நீண்ட இழுபறிக்கு பிறகு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது சிவசேனா.
தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் விருதுநகர், கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் பத்திரம் நடைமுறையால் ஊழல் அதிகரிக்கும் என்று மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.
மக்களவையின் கேள்விநேரத்தின் போது இந்த விவகாரம் குறித்து பேசிய மணீஷ் திவாரி, இந்த நடைமுறை, ஊழலை அங்கீகரிப்பது போன்று உள்ளது. இதற்கு உரிய பதில் கிடைக்காதநிலையில், அவையில் இருந்து காங்கிரஸ் எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக, மாநிலங்களவை 2 முறை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேயர், மாநகராட்சி தலைவர் பதவிக்கு விருப்பமனு அளித்தவர்களின் கட்டணம் திரும்ப அளிக்கப்படும் கட்டணம் செலுத்திய அசல் ரசீதை காட்டி பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என அதிமுக தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் நடைபெற்று வரும் உலககோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கடலூர் மாவட்டத்தில் பிறந்த இளவேனில் வாலறிவன், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று, இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இளவேனில், 2018 மற்றும் 2019ம் ஆண்டு நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டிகளிலும் தங்கப்பதக்கம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தும் அறிவிப்பாணைக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அறிவிப்பாணையை ரத்து செய்யுமாறு மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் நீலமேகம், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்துள்ளார்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சாம்பார் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.110ஆக அதிகரித்துள்ளது. பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ.70ல் இருந்து ரூ.80ஆக அதிகரித்துள்ளது.
வரத்து குறைவால், வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி, லிட்டர் ரூ.77.13 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி, லிட்டர் ரூ.69.59 ஆகவும் உள்ளது. கடந்த 3 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி ஒரே விலையில் தொடர்கிறது.
சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் நவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணி மூன்று மாதத்தில் நிறைவடையும் என காவல் கூடுதல் ஆணையர் தினகரன் தெரிவித்துள்ளார். அம்பத்தூர், நசரத்பேட்டை, குன்றத்தூர் கரைமா நகர், ஆகிய பகுதிகளில் 12 நவீன கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ஆயிரத்தி 629 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல், பிரியங்கா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு அளிக்கப்பட்டு வந்த SPG பாதுகாப்பை அண்மையில் அரசு வாபஸ் பெற்றது. பா.ஜ.,வைச் சேர்ந்த சுப்பிரமணியன் சாமி கூறியதாவது:மத்திய உள்துறை அமைச்சகம், மிகவும்தீவிரமாக ஆலோசித்து, இந்த முடிவை எடுத்துள்ளது. பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்வதற்கு, சிறப்பு குழு உள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரைபடியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இந்த முடிவில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், நீதிமன்றத்தை தாராளமாக அணுகலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights