/tamil-ie/media/media_files/uploads/2021/10/MKStalin_16072021_1200_0.jpg)
Tamil Nadu news today updates: செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது. நவம்பர் 1ம் தேதி முதல் ப்ளே ஸ்கூல்கள் மற்றும் நர்சரி பள்ளிகள் உட்பட அனைத்தும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. வருகின்ற 1ம் தேதி முதல் 1 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அங்கன்வாடி, நர்சரிகள் திறக்கப்படாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
8 கி.மீ காட்டில் பயணம் செய்து களப்பணி மேற்கொண்ட அட்டப்பாடி மருத்துவக்குழு
78% நிரம்பிய தமிழக நீர் நிலைகள்
தமிழகத்தின் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்ததன் விளைவாக தமிழகத்தில் உள்ள முக்கிய நீர் தேக்கங்கள் ஒட்டுமொத்தமாக 78% நிரம்பியுள்ளது. வடகிழக்கு பருவமழை இன்னும் முழுமையாக துவங்காத நிலையில், வரும் காலத்தில் பெய்யும் மழைநீர், அதிக நீர் வரத்து காரணமாக உடனே நீர் நிலைகளில் இருந்து வெளியேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதி நாட்களில் சிறப்பான மழைப்பொழிவை தந்த தென்மேற்கு பருவமழை தற்போது இந்திய நிலப்பரப்பில் இருந்து பின் வாங்க துவங்கியுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 103.01க்கும் டீசல் ஒரு லிட்டர் 98.92க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 23:00 (IST) 19 Oct 2021அவசரகால பணிகளை கண்காணிக்க அமைச்சர்கள் நியமனம் - முதல்வர் ஸ்டாலின்
"மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த, அவசரகால பணிகளை கண்காணிக்க அமைச்சர்கள் நியமனம்"
மாவட்ட வாரியாக அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சேலம் - கே.என்.நேரு, தேனி - பெரியசாமி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி - எ.வ.வேலு நியமனம்
தருமபுரி - எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தென்காசி - கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ராமநாதபுரம் - தங்கம் தென்னரசு நியமனம்
காஞ்சிபுரம் - தா.மோ. அன்பரசன், நெல்லை - ராஜ கண்ணப்பன், திருவாரூர் - சக்கரபாணி, கோவை - செந்தில் பாலாஜி நியமனம்
கிருஷ்ணகிரி - காந்தி, பெரம்பலூர் - சிவசங்கர், தஞ்சை - அன்பில் மகேஷ், மயிலாடுதுறை, நாகை - மெய்யநாதன் நியமனம்
- 20:47 (IST) 19 Oct 2021உத்தரகாண்ட்டில் கன மழை: வெள்ள பாதிப்பில் பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு
உத்தரகாண்டில் பெய்த கன மழையால் இறந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 23ஆக உயர்ந்துள்ளது. அம்மாநிலத்தில் உள்ள நைனிடால் மாவட்டத்தில் இருந்து 13 மரணங்கள் பதிவாகியுள்ளன. உத்தரகண்ட் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் மழை பெய்து வருகிறது. இது வெள்ளம், நிலச்சரிவு மற்றும் வீடுகள் சேதத்துக்கு வழிவகுத்தது.
மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பிடுவதற்காக மாநிலப் பேரிடர் மேலாண்மை அமைச்சர் தன்சிங் ராவத் மற்றும் மாநில டிஜிபி அசோக்குமார் ஆகியோருடன் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டார்.
விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மதிப்பிட்டு விரைவில் அவருக்கு அறிக்கை அனுப்புமாறு அனைத்து மாவட்ட மேஜிஸ்ட்ரேட்களுக்கும் உத்தரவிட்டார். இருப்பினும், மக்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், மக்கள் அச்சமடைய வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். சார்தாம் புனித பயணிகள் இருக்கும் இடத்தில் தங்கவும், வானிலை சீராகும் முன் தங்கள் பயணத்தை மீண்டும் தொடங்க வேண்டாம் என்றும் மீண்டும் வலியுறுத்தினார். சாமோலி மற்றும் ருத்ரபிரயாக் மாவட்டங்களின் டி.எம்.களும் சார்தம் யாத்திரை பாதையில் சிக்கித் தவிக்கும் யாத்ரீகர்களை விசேஷமாக கவனிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
- 19:07 (IST) 19 Oct 2021முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சம்மன்!
முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஜூலை மாதம் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது. அக்டோபர் 25ம் தேதி சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 17:25 (IST) 19 Oct 2021சொமோட்டோ நிறுவன தலைவர் தீபிந்தர் கோயல் ட்வீட்
இந்தியாவை நேசிப்பது போல் தமிழ்நாட்டையும் நேசிப்பதாக சொமோட்டோ நிறுவன தலைவர் தீபிந்தர் கோயல் ட்வீட் செய்துள்ளார். மெலும் நாம் அனைவரும் சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
- 16:44 (IST) 19 Oct 2021மக்களின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் ராஜ கண்ணப்பன்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களின் தேவைக்கேற்ப போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறியுள்ள அமைச்சர் ராஜ கண்ணப்பன், சென்னை மாநகர பேருந்துகளில் 2900 கண்கானிப்பு கேமராக்கள் பொறுத்தும் பணி நடைபெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
- 16:09 (IST) 19 Oct 20214 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் புதுச்சேரி மழலையர் பள்ளி ஆசிரியரின் விடுதலை ரத்துசெய்யக்கோரி போலீஸ் தரப்பு தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
- 15:58 (IST) 19 Oct 20219 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
அடுத்த ஓரிரு மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல் அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
- 15:57 (IST) 19 Oct 20219 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
அடுத்த ஓரிரு மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல் அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
- 15:05 (IST) 19 Oct 2021செம்பரம்பாக்கம் ஏரியை நாளை காலை பார்வையிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளின் ஒருபகுதியாக செம்பரம்பாக்கம் ஏரியை நாளை காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்
- 14:21 (IST) 19 Oct 2021ஜெயலலிதா வழிநின்று அதிமுகவைக் காப்போம் – வி.கே.சசிகலா
ஜெயலலிதா வழிநின்று அதிமுகவைக் காப்போம். கரம் கோர்ப்போம், பகை வெல்வோம், அதிமுக நஞ்சாவதை ஒரு நொடியும் பொறுக்காது, வெற்றிப் பயணத்தை தொடர்வோம் என வி.கே.சசிகலா தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்
- 14:08 (IST) 19 Oct 2021உ.பி. தேர்தலில் பெண்களுக்கு 40% சீட் கொடுப்போம் -பிரியங்கா காந்தி
உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு 40% சீட் கொடுப்போம் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்
- 14:07 (IST) 19 Oct 2021உ.பி. தேர்தலில் பெண்களுக்கு 40% சீட் கொடுப்போம் -பிரியங்கா காந்தி
உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு 40% சீட் கொடுப்போம் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்
- 13:54 (IST) 19 Oct 2021தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம், புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும், சென்னையில் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 13:44 (IST) 19 Oct 2021வழக்குகளை கண்டு அஞ்சக்கூடிய கட்சி அதிமுக அல்ல -இபிஎஸ்
பொய் வழக்குகள் போட்டு அதிமுகவினரை முடக்கிவிட முடியாது என்றும், வழக்குகளை கண்டு அஞ்சக்கூடிய கட்சி அதிமுக அல்ல என்றும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
- 13:43 (IST) 19 Oct 2021வழக்குகளை கண்டு அஞ்சக்கூடிய கட்சி அதிமுக அல்ல -இபிஎஸ்
பொய் வழக்குகள் போட்டு அதிமுகவினரை முடக்கிவிட முடியாது என்றும், வழக்குகளை கண்டு அஞ்சக்கூடிய கட்சி அதிமுக அல்ல என்றும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
- 13:39 (IST) 19 Oct 2021தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 13:39 (IST) 19 Oct 2021தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம், புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும், சென்னையில் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 13:25 (IST) 19 Oct 2021ஆர்.என்.ரவியை சந்திக்கும் இபிஎஸ்
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நாளை கிண்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, பல்வேறு முக்கிய நிகழ்வுகள் தொடர்பான கோரிக்கை மனுவை வழங்குகிறார்.
- 13:12 (IST) 19 Oct 2021தமிழர்களுக்கு யாரும் பாடம் நடத்த வேண்டாம் - கனிமொழி
வாடிக்கையாளர்களுக்கு இந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழர்களுக்கு யாரும் யார் இந்தியர்கள் என்று பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை.(2/3)
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 19, 2021
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 19, 2021
வாடிக்கையாளர்களுக்கு இந்தி அல்லது ஆங்கில மொழிகள் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தமிழர்களுக்கு யாரும் பாடம் நடத்த வேண்டாம் என்றும் ஜொமேட்டோ விவகாரத்திற்கு கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
- 13:11 (IST) 19 Oct 2021தமிழர்களுக்கு யாரும் பாடம் நடத்த வேண்டாம் - கனிமொழி
வாடிக்கையாளர்களுக்கு இந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழர்களுக்கு யாரும் யார் இந்தியர்கள் என்று பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை.(2/3)
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 19, 2021வாடிக்கையாளர்களுக்கு இந்தி அல்லது ஆங்கில மொழிகள் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தமிழர்களுக்கு யாரும் பாடம் நடத்த வேண்டாம் என்றும் ஜொமேட்டோ விவகாரத்திற்கு கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 19, 2021
- 13:11 (IST) 19 Oct 2021தமிழர்களுக்கு யாரும் பாடம் நடத்த வேண்டாம் - கனிமொழி
வாடிக்கையாளர்களுக்கு இந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழர்களுக்கு யாரும் யார் இந்தியர்கள் என்று பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை.(2/3)
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 19, 2021வாடிக்கையாளர்களுக்கு இந்தி அல்லது ஆங்கில மொழிகள் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தமிழர்களுக்கு யாரும் பாடம் நடத்த வேண்டாம் என்றும் ஜொமேட்டோ விவகாரத்திற்கு கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
- 12:06 (IST) 19 Oct 2021கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் ஆய்வு
சென்னை அருகே நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். ரூ.1,259.38 கோடி மதிப்பில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- 12:05 (IST) 19 Oct 2021பூம்புகார் மீனவர்கள் மீது புகார்
நாகை மாவட்டம் பூம்புகார் விசைப்படகு மீனவர்கள், கீச்சாங்குப்பத்தை சேர்ந்த மீனவர்களின் ரூ.15 லட்சம் மதிப்பிலான வலைகளை சேதப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. பூம்புகார் மீனவர்கள் தடை செய்யப்பட்ட என்ஞினை பயன்படுத்தி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
- 11:32 (IST) 19 Oct 2021ஆயிரம் விளக்கு அலுவலகத்திற்கு சீல்
சென்னை, ஆயிரம் விளக்கில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் உதவியாளரான சரவணனின் நண்பர் சந்திரசேகர் என்பவரின் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
- 11:07 (IST) 19 Oct 2021Cloudburst
Cloudburst : உத்தரகாண்டில் கொட்டித் தீர்த்த கனமழை உத்தரகாண்ட் மாநிலம் நைனிதால் அருகே ராம்கர் பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் சிக்கியுள்ள மக்களை மீட்க காவல்துறையினர் விரைந்துள்ளதாக தகவல்
- 10:44 (IST) 19 Oct 2021தங்கம் விலை உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 72 உயர்ந்துள்ளது. தற்போது ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 35 ஆயிரத்து 720க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- 10:42 (IST) 19 Oct 2021மின் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன - அமைச்சர்
மழைப் பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. முதலமைச்சரின் உத்தரவுப்படி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மின் பாதிப்ப் ஏற்பட்ட இடங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்று கன்னியாகுமரியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
- 10:14 (IST) 19 Oct 202162 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது சென்செக்ஸ்
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் முதன்முறையாக 62 ஆயிரம் புள்ளிகளை தாண்டி புதிய உயரம் தொட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் 290 புள்ளிகள் அதிகரித்து 62,156 புள்ளிகள் வணிகம் செய்து வருகிறது. அதே போன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 127 புள்ளிகள் உயர்ந்துள்ளது.
- 10:06 (IST) 19 Oct 2021கன்னியாகுமரியில் அமைச்சர்கள் ஆய்வு
கன்னியாகுமரியில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. செண்பகராமன்புதூர், செம்பாறை ஆகிய பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், செந்தில் பாலாஜி, மனோ தங்கராஜ் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.
- 10:02 (IST) 19 Oct 20217 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்று தினசரி பாதிப்பு குறைவு
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை உச்சம் தொட துவங்கிய காலத்தில் இருந்து கொரோனா தொற்று எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக பதிவாகி வந்தது. இந்நிலையில் 7 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்று தினசரி பாதிப்பு குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 13,058 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
- 09:24 (IST) 19 Oct 2021தெற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்றும் கனமழை
புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை முதல் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் தெற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- 09:19 (IST) 19 Oct 2021கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் இன்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறார் முதல்வர்
சென்னை நெம்மேலி அருகே கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் இன்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். கடல் நீரில் இருந்து 150 மில்லியன் லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்யும் இரண்டாவது ஆலைக்கான திட்டப்பணிகளை அவர் ஆய்வு செய்ய உள்ளார்.
- 08:50 (IST) 19 Oct 2021கேரளா நிலச்சரிவு : பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
கேரளாவில் கடந்த மூன்று நாட்களில் பெய்த அளவுக்கு அதிகமான கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. முழுக்கொள்ளளவை எட்டிய நிலையில் மலம்புழா, மலங்கரா அணைகளில் இருந்து நீர் திறப்பு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.