Tamil Nadu news today updates: ‘நியூட்ரினோ திட்டத்தை தமிழக அரசு அழுத்தம் கொடுத்து கைவிட வைக்க வேண்டும்’ – ஸ்டாலின்

News in Tamil: தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள். 

By: Jul 12, 2019, 9:04:17 PM

Tamil Nadu news today updates: ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரும் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதையடுத்து, இன்று முதல் ரயில் மூலம் சென்னைக்கு வருகிறது நீர். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு காட்சியளிக்கும் காஞ்சிபுரம் அத்தி வரதரை தரிசிக்க, தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.

தமிழக செய்திகளை ஆங்கிலத்தில் லைவ்வாக தெரிந்துக் கொள்ள  Chennai, Tamil Nadu News Live Updates

தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் ஆணவக்கொலைகளை தடுக்க அரசு முயற்சி எடுத்து வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார். ஒரே நதிநீர் தீர்ப்பாயம் கொண்டுவரும் மத்திய அரசின் புதிய சட்ட திருத்த மசோதாவுக்கு, திமுக தலைவரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Live Blog
Tamil Nadu and Chennai news today updates of Politics, Sports, Entertainment, weather, traffic, train services and airlines தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
20:58 (IST)12 Jul 2019
நியூட்ரினோ திட்டத்தை கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்

நியூட்ரினோ ஆய்வு மையம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஆய்வு மையத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பது கண்டனத்திற்குரியது. தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் பணிக்கு எதிராக முதல்வர், துணை முதல்வர் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து திட்டத்தை கைவிட வைக்க வேண்டும் - ஸ்டாலின்

20:22 (IST)12 Jul 2019
வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை நூல் - ஸ்டாலின் வெளியீடு

கவிஞர் வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை நூலை வெளியிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின். சென்னை தேனாம்பேட்டையில் நடைபெறும் விழாவில், திமுக தலைவர் ஸ்டாலின் நூலை வெளியிட ப.சிதம்பரம் பெற்றுக்கொண்டார்.

"வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசமும், கருவாச்சி காவியமும், 21ம் நூற்றாண்டின் இரட்டை காப்பியங்கள். வைரமுத்து எழுதிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.

19:48 (IST)12 Jul 2019
விவசாயிகளின் செல்லப்பிள்ளை எடப்பாடி பழனிசாமி - தனியரசு எம்.எல்.ஏ

"வடநாட்டில் இருந்து வந்து தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது என எட்டிப்பார்த்தனர்; எட்டிப்பார்த்த வடநாட்டினரை எடப்பாடி பழனிசாமி வென்றுவிட்டார். ஏழை விவசாயி, விவசாயிகளின் செல்லப்பிள்ளை எடப்பாடி பழனிசாமி" என தனியரசு எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

19:29 (IST)12 Jul 2019
ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன?

கண்காணிப்பு கேமிரா பதிவு அடிப்படையில், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிச் சென்றவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? என்று சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து, போக்குவரத்து காவல்துறை அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

18:54 (IST)12 Jul 2019
இயக்குனர் சங்க தேர்தலில் இருந்து விலகல் - அமீர்

இயக்குநர் சங்கத் தேர்தலில் இருந்து விலகுவதாக, அமீர் அணி அறிவித்துள்ளது. தேர்தல் அதிகாரி விதிமுறை மீறி செயல்படுவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.. தலைவர் பதவிக்கு விண்ணப்பித்த ஜனநாதன் மனு விதிகளுக்கு மாறாக நிராகரிக்கப்பட்டதால் இந்த முடிவு விதிக்கப்பட்டது என அமீர் அறிவித்துள்ளார்.

17:30 (IST)12 Jul 2019
முகிலன் திருப்பதி வந்தது எப்படி? தொடரும் தீவிர விசாரணை

திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்டார் சமூக செயற்பாட்டாளர் முகிலன். 144 நாட்களாக காணாமல் போன அவர் திருப்பதி ரயில் நிலையம் வந்தது எப்படி என்ற ரீதியில் விசாரணைகள் நடைபெற்று வருகிறது. தமிழக சிபிசிஐடி போலீசார் திருப்பதி ரயில்வே காவல் ஆய்வாளர் சைதய்யாவிடம் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

17:06 (IST)12 Jul 2019
தமிழில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு - டி.ஆர்.பாலு கோரிக்கை

உச்சநீதிமன்ற தீர்ப்பை தமிழிலும் மொழிபெயர்த்து வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து, திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு கோரிக்கை வைத்துள்ளார். கோரிக்கையை பரிசீலித்து, விரைவில் நல்ல முடிவை எடுப்பதாக தலைமை நீதிபதி கூறினார் என்றும் அவர் கூறியுள்ளார். ஆங்கிலம் நீங்கலாக, தெலுங்கு, கன்னடம், ஒடியா, இந்தி, அசாமி, மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் தீர்ப்புகளின் நகல்கள் இருக்கும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

16:42 (IST)12 Jul 2019
அவதூறு வழக்கு : ராகுல் காந்திக்கு முன் ஜாமீன்

அகமதாபாத் கூட்டுறவு வங்கியின் தலைவர் அஜய் படேல் தொடர்ந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது அகமதாபாத் நீதிமன்றம்

16:18 (IST)12 Jul 2019
தற்கொலை செய்துகொள்ளும் பெண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார் ஸ்மிரிதி இரானி. அதில் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது என்று அறிவித்துள்ளார். தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின் (NCRB) படி 2014ல் 42,521 பெண்களும், 2015ல் 42,088 பெண்களும் தற்கொலை செய்துள்ளனர் என்று எழுத்துப்பூர்வ விளக்கம் அளித்துள்ளார்.

15:57 (IST)12 Jul 2019
இலங்கை கடற்படையால் கைது செய்யபட்ட தமிழக மீனவர்கள்

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராம்நாதபுரம் மீனவர்கள் 6 பேரை, 26ம் தேதி வரை யாழ்பாணம் சிறையில் அடைக்க வேண்டும் என்று ஊர்க்காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

15:36 (IST)12 Jul 2019
SBI Bank Update

இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில், ஆன்லைன் ட்ரான்சக்சன்களுக்கான கட்டணத்தை ரத்து செய்தது. மேலும் இதர தனியார் மற்றும் பொதுவுடை வங்கிகள் NEFT, RTGS, IMPS, போன்ற பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களை குறைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது. இந்நிலையில் எஸ்.பி.ஐ. வங்கி தங்களின் நெஃப்ட், ஆர்.டி.ஜி.எஸ், ஐ.எம்.பி.எஸ் பணப்பரிமாற்ற கட்டணங்களை ரத்து செய்து அறிவித்துள்ளது.

15:12 (IST)12 Jul 2019
அத்திவரதர் தரிசனம் : காஞ்சியில் குடியரசு தலைவர்

குடியரசுத் தலைவர் வருகையை ஒட்டி பக்தர்களுக்கு இன்று அனுமதி மறுக்கப்ப்பட்டுள்ளது. அவருடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித் மற்றும் அமைச்சர் உதயக்குமார் அவருடன் இருக்கின்றனர்.

15:08 (IST)12 Jul 2019
குடியரசு தலைவர் வருகையை ஒட்டி காஞ்சியில் பலத்த பாதுகாப்பு

அத்திவரதரை தரிசனம் செய்ய காஞ்சியை வந்தடைந்தார் குடியரசு தலைவர். சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் பயணித்த அவர் தற்போது காஞ்சிபுரம் வந்தடைந்துள்ளார். அவரின் வருகையை ஒட்டி காஞ்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

15:07 (IST)12 Jul 2019
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை வந்த குடிதண்ணீர்... எங்கே விநியோகம்?

ஜோலார்பேட்டையில் இருந்து வில்லிவாக்கத்திற்கு ரயிலில் குடிதண்ணீர் கொண்டுவரப்பட்டது. தற்போது இது குறித்து பேசிவருகிறார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி. வில்லிவாக்கத்தில் இருந்து இந்த தண்ணீர் கீழ்பாக்கத்தில் உள்ள சுத்தகரிப்பு மையத்திற்கு அனுப்பப்படும் என்றும், அங்கிருந்து சுத்திகரிப்பு செய்யப்பட்ட பின்பு பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

14:30 (IST)12 Jul 2019
சென்னை வந்தார் குடியரசு தலைவர்

அத்திவரதரை தரிசிக்க டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். விமானநிலையத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அவரை வரவேற்றனர்

13:56 (IST)12 Jul 2019
முதல்வர் பேச்சு

தூத்துக்குடியில் 60 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும், முதலீடுகளை ஈர்க்க யாதும் ஊரே என்ற சிறப்பு பிரிவு, தனி இணையதளம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் பேச்சு

13:24 (IST)12 Jul 2019
திமுக மீது பழி போடுவதை நிறுத்துங்கள்

அதிமுக அரசு, நீட் தேர்வு மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற முடியாமல், திமுக மீது மீண்டும் பழி போடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

13:19 (IST)12 Jul 2019
8 வழி சாலைக்கு எதிராக திமுக மனு

சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிடுமாறு மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் திமுக மக்களவை உறுப்பினர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். 

13:03 (IST)12 Jul 2019
கருணாநிதி, அண்ணா பெயர்

திருவாரூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர்வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காஞ்சிபுரம் ரயில் நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணா பெயரை சூட்ட வேண்டும் என திமுக எம்எல்ஏ சுந்தர் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்துள்ளார். முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா - கலைஞர் கருணாநிதி

12:27 (IST)12 Jul 2019
கிரண் பேடி வழக்கு தள்ளுபடி

அரசின் செயல்பாட்டில் ஆளுநர் கிரண்பேடி தலையிட அதிகாரம் இல்லை என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை தற்போது உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத் தான் முழு அதிகாரமும் உள்ளதாக தெரிவித்து கிரண் பேடியின் வழக்கை தள்ளுபடி செய்தனர் நீதிபதிகள்.  

12:24 (IST)12 Jul 2019
ஆளுநருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது

ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு தீர்மானம் அனுப்பியும் ஆளுநர் முடிவெடுக்கவில்லை என கூறி நளினி தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த விவாதத்தின் போது, ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனவும்,  7பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக ஆளுநர் சட்ட உதவிகளை நாடியுள்ளார் எனவும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் செய்து வருகிறது.  

12:06 (IST)12 Jul 2019
Tamil nadu news: நியூட்ரினோவை மதிமுக எதிக்கும் - வைகோ

நியூட்ரினோ ஆய்வகத்தால் தேனி மாவட்டம் மற்றும் கேரளப் பகுதிகளின் சுற்றுச்சூழல் கெடுவதுடன், நீராதாரமும் பாழ்படும். தேனி மாவட்ட மக்களின் எதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு முயன்றால், மதிமுக மக்கள் மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் கடுமையாக எதிர்க்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

11:46 (IST)12 Jul 2019
கிராம உதவியாளர்களுக்கு பதவி உயர்வு

கல்வித்தகுதியின் அடிப்படையில் கிராம உதவியாளர்களுக்கு, கிராம நிர்வாக அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 

11:44 (IST)12 Jul 2019
சென்னை வந்தது தண்ணீர் ரயில்

ஜோலார்பேட்டையிலிருந்து சென்னை வில்லிவாக்கத்துக்கு 50 வேகன்களில் 25 லட்சம் லிட்டர் குடி தண்ணீருடன் வந்தது ரயில். இதைத் தொடர்ந்து கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையத்திற்கு குடிநீர் கொண்டு செல்லப்பட உள்ளது. 

11:12 (IST)12 Jul 2019
மனு தள்ளுபடி

ரூ.100 கோடி அபராதம் விதித்த பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடை கோரிய தமிழக அரசின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

10:57 (IST)12 Jul 2019
சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் Vs அமைச்சர் தங்கமணி

மழைக்காலத்தில் மின்கசிவால் அடிக்கடி விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்படுகிறது. கொளத்தூரில் புதைவட மின்கம்பிகளாக மாற்ற நடந்துவரும் பணிகளை இந்தாண்டுக்குள் முடிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, 2021க்குள் சென்னையில் உள்ள மின்பாதைகள் புதைவட மின்கம்பிகளாக மாற்றப்படும். புதைவட மின்கம்பிகளாக மாற்ற சென்னைக்கு மட்டும் ரூ.2567 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். 

10:53 (IST)12 Jul 2019
தபால்துறையில் இனி இந்தி, ஆங்கிலத்தில் தான் தேர்வு

தபால்துறை தேர்வுகளில் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும். இனி அனைத்து மாநிலங்களிலும் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய அரசு அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

10:44 (IST)12 Jul 2019
கருணாநிதி நினைவிடத்தில் வைரமுத்து

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் இன்று வெளியாகவுள்ள தனது ‘தமிழாற்றுப்படை’ புத்தகத்தை வைத்து கவிஞர் வைரமுத்து மரியாதை செலுத்தினார். 

10:43 (IST)12 Jul 2019
போராட்டம் நடத்த இருந்தவர்கள் கைது

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தஞ்சையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட ஆட்சியர் அலுவலகம் வருவோரை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். 

10:32 (IST)12 Jul 2019
வேலூர் அதிமுக-திமுக வேட்பாளர்களுக்கு தடை விதிக்க வேண்டும்

வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி மனு. கடந்த முறை தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு காரணமாக இருந்த அதே வேட்பாளர்களே மீண்டும் திமுக மற்றும் அதிமுக சார்பில் களமிரக்கப்படுவதாக குற்றம் சாட்டியிருக்கும் அவர்கள், தேர்தலை நேர்மையான முறையில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 

10:27 (IST)12 Jul 2019
சென்னைக்கு வரும் தண்ணீர் ரயில்

ஜோலார்பேட்டையில் இருந்து 50 வேகன்களில் காவிரி கூட்டு குடிநீரை ஏற்றிக்கொண்டு வாழை தோரணங்கள், மலர்கள் அலங்காரத்துடன் சென்னைக்கு புறப்பட்டது தண்ணீர் ரயில். 

10:22 (IST)12 Jul 2019
4 மணிநேரம் ’நோ எண்ட்ரி’

காஞ்சிபுரம் அத்தி வரதரை தரிசிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருவதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதோடு இன்று பகல் 1 மணி முதல் மாலை 5 வரை அத்திவரதரை தரிசிக்க பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. 

10:15 (IST)12 Jul 2019
விவசாயிகள் போராட்டம்

தமிழகத்துக்கான காவிரி நீரை கர்நாடகாவிடம் இருந்து மத்திய அரசு பெற்றுத்தர வலியுறுத்தி, மன்னார்குடியில் பாமணி ஆற்றில் இறங்கி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். 

10:09 (IST)12 Jul 2019
Tamil News Live: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல்

10% இட ஒதுக்கீடு தொடர்பான அரசின் முடிவு குறித்து விரைவில் அறிவிக்கப்படும்  எனவும், தொலைநோக்கு பார்வையுடன் தான் 8 வழிச்சாலை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது என்றும் நாட்டிலேயே கைத்தறித்துறையில் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது எனவும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். 

Tamil Nadu news today updates: ரூ.2,371 கோடியில் அடையாறு நதி சீரமைக்கப்படும் என்று சட்ட பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி நேற்று அறிவித்தார். தவிர, சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பு பற்றி திட்ட அறிக்கை தயாரிக்கப்படும், மாற்றுத்திறனாளி உதவியாளர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் ஆவின் மையம் அமைக்க 200 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும், எடப்பாடி தெரிவித்துள்ளார்.

நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டை போற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் அவருக்கு விழா எடுக்கப்படும் பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார். திமுக பொருளாளர் துரைமுருகனின் வேண்டுகோளை ஏற்று அவர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

Web Title:Tamil nadu news today live updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X