Tamil nadu news today updates : தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை துவங்குகிறது. திமுக எம்.எல்.ஏக்கள் மறைவு மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்படும். முதல் நாளில் முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரன் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். திருவொற்றியூர் எம்.எல்.ஏ. – கே.பி.பி. சாமி, குடியாத்தம் எம்.எல்.ஏ. காத்தவராயன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்டசபை ஒத்தி வைக்கப்படும்; நாளை சட்டசபை இல்லை. இன்று மக்களை கவரும் வகையில் புதிய அறிவிப்புகளை 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டசபை பொதுத் தேர்தலுக்கு முன் நடக்க உள்ள நீண்ட கூட்டத்தொடர் என்பதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. தமிழக சட்டசபையில் பிப்ரவரி 14ல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம் நான்கு நாட்கள் நடந்தது. அதன்பின் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. துறை வாரியான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தவும் துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு ஒப்புதல் அளிக்கவும் சட்டசபை கூட்டம் இன்று துவங்குகிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
‘கொரோனா’ வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 34ஆக உயர்ந்துள்ளநிலையில், இது தொடர்பாக, பிரதமர், நரேந்திர மோடி நேற்று ஆய்வு செய்தார். தனிமை மையங்கள் மற்றும் சிகிச்சை வசதிகள் தயார் நிலையில் இருக்கும்படி, அவர் அறிவுறுத்தியுள்ளார். வைரஸ் பரவாமல் தடுக்க, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரபடுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
காவிரி டெல்டா பகுதியை, பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண்மை மண்டலமாக அறிவித்த, முதல்வர், பழனிசாமிக்கு, திருவாரூரில்,விவசாயிகளின் நன்றி பாராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது தற்போது, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பரிசீலனை செய்து, நல்ல முடிவு எடுக்கப்படும். விவசாயிகள் அச்சப்பட வேண்டாம். விவசாயிகளுக்கு, இந்த சட்டம் துணை நிற்கும். குடிமராமத்து பணிகளை குறை சொல்கின்றனர். ஆனால், விவசாயிகள் பாராட்டுகின்றனர். இவ்வாறு, அவர் பேசினார். விழாவில், முதல்வருக்கு, ‘காவிரி காப்பாளர்’ என்ற பட்டம், விவசாயிகள் சார்பில் வழங்கப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.
Web Title: Tamil nadu news today live womens day corona virus modi
மதுரை திருப்பரங்குன்றம் பொதுக்கூட்டத்தில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழக மக்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் நான் சும்மா இருக்க மாட்டேன் என்று கூறினார்.
சென்னை கிண்டியில் ஆய்வகம் அமைக்கப்பட்ட நிலையில், கூடுதலாக ஆய்வகம் அமைக்க மத்திய அரசு, தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் அமைக்க அனுமதி அளித்துள்ளது.
விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், “பிரேமலதா விஜயகாந்த் நிழல் சக்தி அல்ல; நிஜ சக்தி. மக்களுக்காக உருவாக்கப்பட்ட கழகம் தேமுதிக; நல்ல தலைவனை, மிகச்சிறந்த தலைவனை 15 வருடங்களாக இழந்தது தமிழக மக்களே தவிர விஜயகாந்தும், தேமுதிகவும் அல்ல.” என்று கூறியுள்ளார்.
திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் நடைபெற்று வரும் சிஏஏ எதிர்ப்பு தொடர் போராட்டத்தில் பேசிய நாம் தமிழ கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “என்.பி.ஆர்.-க்கு எதிராக மற்ற மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றியது போல தமிழக அரசும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை என என்னிடமே கூறியுள்ளார். நம் நாட்டின் குடியரசுத்தலைவருக்கும் பிரதமருக்கும் கூட பிறப்புச் சான்றிதழ் இருக்காது. சிஏஏ முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானது இல்லை. ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கு எதிரானது. இந்த சட்டத்தில் இருக்கும் நடைமுறையால் ஒட்டுமொத்த மக்களும் முகாமுக்கு செல்ல வேண்டிய நிலைதான் வரும்.” என்று கூறினார்.
சிஏஏ, என்சிஆர், என்பிஆர் ஆகியவற்றிற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இது தொடர்பாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறுகையில், “இப்போது வரை எனக்கு பிறப்புச் சான்றிதழ் கிடையாது. எனக்கே பிறப்புச் சான்றிதழ் இல்லாத போது என் தந்தையின் பிறப்புச் சான்றிதழை எப்படி காண்பிக்க முடியும்.
அப்போது நான் இறந்துவிடலாமா? சிஏஏ, என்ஆர்சி, என்பிஆரை கடுமையாக எதிர்க்கிறேன். நான் பிறந்தபோது 580 ஏக்கர் நிலமும் ஒரு வீடும் இருந்தது. நான் என் வீட்டில் தான் பிறந்தேன். என்னாலேயே பிறப்புச் சான்றிதழை சமர்ப்பிக்க முடியாதபோது ஏழை மற்றும் பாமர, பட்டியலின மக்களால் எப்படி பிறப்புச் சான்றிதழை காட்ட முடியும். விரைவில் சிஏஏ, என்ஆர்சி-க்கு எதிராக தெலங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும்” என அவர் கூறியுள்ளார்.
பொதுத் துறை நிறுவனமான, ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்’ நிறுவனத்தில், தன் வசம் உள்ள அனைத்து பங்குகளையும் விற்பனை செய்யும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ள நிலையில், ‘லாபகரமாக இயங்கும் நிறுவனத்தை ஏன் விற்க வேண்டும்?’ என காங்கிரஸ் கட்சி மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி உள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரண்தீப் சிங் சுா்ஜிவாலா டுவிட்டரில் “கடந்த டிசம்பர் மாதத்தில் பிபிசிஎல் மூலம் அரசுக்கு ரூ.2051.53 கோடி லாபம் கிடைத்துள்ளது. இந்த அளவிற்கு லாபகரமாக இயங்கும் நிறுவனத்தை அரசு விற்க வேண்டிய கட்டாயம் என்ன வந்தது.” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்.பி-யுமான திருமாவளவன், “ஆளும் அதிமுக அரசு பாஜக உறவை கைவிட வேண்டும். சிஏஏ விவகாரத்தில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்; துணிந்து முடிவெடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
கோவை குளத்துப்பாளையத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழகத்தில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு சுமார் 57 ஆயிரம் கோடி ரூபாய் கடன் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், அவர் பெண்களை மதிப்பவர்கள் வாழ்க்கையில் மேன்மை அடைவார்கள் என்று கூறினார்.
மகளிர் தினத்தை முன்னிட்டு சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள வீடியோவில், தன் வாழ்க்கையில் முக்கியமாக பங்கு வகித்த 5 பெண்கள் குறித்து பேசி உள்ளார். அதில், தன் அம்மா, தன் மனைவி, மனைவியின் அம்மா. மகள், அத்தை என 5 பெண்கள் முக்கிய பங்காற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவர்கள் அனைவருக்கும் சச்சின் டெண்டுல்கர், தனது மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவ துவங்கியுள்ளதால் தமிழக – கேரள எல்லை பகுதியில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், வாகனங்களை சோதனை செய்து பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்ததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து மு.க.ஸ்டாலின், “அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு இரங்கல் அறிக்கை வெளியிட்ட முதல்வருக்கு நன்றி. அன்பழகன் உடலுக்கு மரியாதை செலுத்திய திமுக தோழமைக்கட்சியினர் மற்றும் பலதுறைகளை சார்ந்த சான்றோர்களுக்கும் கண்ணீர் கலந்த நன்றி” என தெரித்துள்ளார்.
கொரோனா எதிரொலியால் தமிழகத்தில் முகக்கவசம் அணியும் நிலை ஏற்படவில்லை
கொரோனா வைரஸ் பரவுவதை 100% தடுத்து வருகிறோம்
சீனாவில் கொரோனா பரவியதில் இருந்தே தனி வார்டுகள் அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவருகிறோம்
– அமைச்சர் விஜயபாஸ்கர்
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ஷிகர் தவான், ப்ரித்விஷா, ராகுல், மணீஷ் பாண்டே, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர், சாஹல், பும்ரா, நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், சுப்மான் கில் ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.
ஈரானில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பலியானோரின் எண்ணிக்கை 194ஆக உயர்ந்துள்ளது.
ஈரானில் கொரோனாவால் ஏற்கனவே 145 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 49 பேர் உயிரிழந்தனர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “அண்டை வீடுகளில் வசிப்பவர் யாரேனும் வெளிநாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களில் வந்திருந்தால் அவர்கள் தொடர்பான தகவலை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரானா வைரஸ் அறிகுறிகளுடன் தீவிர கண்காணிப்பில் இருக்கும் நபர்களுக்கு நிறுவனங்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.
கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு உள்ளான அவர்கள் 5 பேரும் கொரோனா பாதிப்பின் போது 3000 பேருடன் தொடர்பில் இருந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 5வது முறையாக சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலிய அணி.
மெல்போர்னில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 85 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி
கோரோனா வைரஸ் தொற்று சீனாவில் 80 ஆயிரம் பேருக்கும், பிற நாடுகளைச் சேர்ந்த 20 ஆயிரம் பேருக்கும் ஏற்பட்டுள்ளதால், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற பெண்கள் தின நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது, அமைச்சர் ஜெயக்குமார், உள்ளாட்சி அமைப்புகள், கட்சிப் பதவிகளில் பெண்களுக்கு 33 சதவீத பிரதிநிதித்துவம் வழங்கியது அதிமுக மட்டுமே என்றும், தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக இருப்பதால், மகாத்மா காந்தி கூறியது போல் தமிழ்நாட்டில் இரவு 12 மணிக்கும் பெண்கள் நகைகளை அணிந்து பாதுகாப்பாக உலாவலாம் என்றும் கூறினார்.
சர்வதேச பெண்கள் தின பரிசாக பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மதுரையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு திமுக எம்பி கனிமொழி, டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது,
சமூகத்தில், குடும்பத்தின் சரிபாதியாம் பெண் இனத்துக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்! பெண்களைப் போற்றுதலில் இல்லை; மதிப்பதில், நடத்துவதில் காட்டுவோம்! ‘இந்தப் பேருலகு சமைக்க பெண்ணினமே எழு!’ என்று, அனைவரும் சேர்ந்து உரக்கச் சொல்வோம்! பெண்ணே வாழ்க! என்று குறிப்பிட்டுள்ளார்.
பிறப்புச் சான்றிதழ் இல்லையென்றால் நான் இறந்துவிட வேண்டுமா என்று சிஏஏ, என்ஆர்சி சட்டங்கள் குறித்து தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் காட்டமாக தெரிவித்துள்ளார்
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் சிஏஏ, என்ஆர்சி சட்டங்கள் குறித்து மத்திய அரசை கடுமையாக சாடினார். அப்போது பேசிய அவர் எனக்கு இப்போது வரை பிறப்புச் சான்றிதழ் இல்லை. எனக்கே இல்லாதபோது நான் எவ்வாறு என் தந்தையின் பிறப்புச் சான்றிதழை காண்பிக்க முடியும். அப்போது நான் இறந்துவிடலாமா ?என கேள்வி எழுப்பினார்.
சர்வதேச பெண்கள் தினத்தை ஒட்டி 7 சாதனை பெண்கள் தனது சமூக ஊடக கணக்குகளை நிர்வகிப்பார்கள் என்று பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில், முதல் பெண்ணாக தமிழகத்தைச் சேர்ந்த சினேகா மோகன்தாஸ் பிரதமரின் கணக்கில் இருந்து டுவீட் செய்துள்ளார்.
ஆதரவற்றவர்கள், சாலையோரம் தஞ்சமடைந்தவர்களுக்கு மூன்று வேளை உணவு அளித்துவரும், FoodBank India என்ற அமைப்பை நிர்வகித்துவரும் சினேகா, தன்னை அறிமுகம் செய்துகொண்டு, தனது அமைப்பைப் பற்றி பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கின் வழியே எடுத்துக்கூறினார்.
சேலம் ஜங்சன் ரயில்நிலையம் எதிரே உள்ள ஒரு ஹோட்டலில், மட்டன் பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை சேர்ந்த முருகேசன், ஆதிதமிழன் உள்ளிட்ட சிலர், ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள ஒரு அசைவ ஹோட்டலுக்கு சாப்பிட சென்றனர். மட்டன் பிரியாணி ஆர்டர் செய்த நிலையில், அவர்களுக்கு பிளேட்டில் பிரியாணி வழங்கப்பட்டது. அப்போது, ஒருவரது பிளேட்டில் இருந்த பிரியாணியில் பூச்சி கால் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, பிரியாணியை கிளறி பார்த்த போது, உள்ளே கரப்பான் பூச்சி சமைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து ஹோட்டல் பணியாளர்களிடம் கேட்ட போது, உரிய முறையில் பதில் அளிக்காததுடன், அவர்களை அலட்சியம் செய்துள்ளனர். இதனையடுத்து, சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற அதிகாரிகள், கரப்பான் பூச்சி கிடந்த சுமார் 10 கிலோ மட்டன் பிரியாணியை பறிமுதல் செய்து அழித்தனர். தொடர்ந்து, கடைக்குள் சென்று சோதனை செய்தனர்.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், டுவிட்டரில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, சர்வதேச பெண்கள் தினத்தில் இந்தியா மற்றும் உலகத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த நாளில், சிறந்த சமுதாயத்தை, தேசத்தை, உலகத்தை கட்டியெழுப்ப பெண்களின் அயராத முயற்சிகளையும், முக்கிய பங்கையும் நாம் கொண்டாட வேண்டும் என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேரள மாநிலத்தில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.
எஸ் வங்கியின் ஏடிஎம் சேவை சில நாட்களாக முடங்கிருந்த நிலையில், தற்போது வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடி, மோசமான நிர்வாகம் காரணமாக தனியார் வங்கியான YES BANK நிர்வாகத்தை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் அடுத்த ஒரு மாதத்திற்கு 50ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. எஸ் வங்கி வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம் மற்றும் இணைய வங்கி சேவை மூலம் தங்களது பணத்தை எடுக்க முடியாத சூழல் இருந்த நிலையில், தற்போது வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மூலம் பணத்தை எடுக்கலாம் என்று அந்த வங்கியின் டுவிட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறுமை காத்ததற்காக வாடிக்கையாளர்களுக்கு நன்றி என்றும் அந்த டுவீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 20காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.73.58 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 20 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.67.01ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.
சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படும் இந்த வேளையில், அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். சிலநாட்களுக்கு முன் அளித்த வாக்குறுதியின்படி, எனது சோஷியல் மீடியாக்கள் அக்கவுண்டிலிருந்து இன்று வெளியே வந்து விட்டேன் . பெண்கள் தினத்தை போற்றும் வகையில், அந்த அக்கவுண்ட்களை 7 பெண்கள் இன்று நிர்வகிக்க உள்ளதாாக பிரதமர் மோடி, டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.