News Today Updates: ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்பு – தமிழகத்தில் 33 பேர் கைது: என்.ஐ.ஏ. ஐ.ஜி. அலோக் மிட்டல்

Petrol Diesel Price: இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.14, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.20 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

By: Oct 14, 2019, 10:41:56 PM

Tamil Nadu News today updates : ஊழலின் ஊற்றுக் கண்ணே திமுக தான் என நாங்குநேரி பரப்புரையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். சீன அதிபருக்கு நான் கை கொடுத்ததை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை எனவும், அவர் விமர்சனம். முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமிக்கு சவால் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் தீவிரமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல்

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலையை நியாயப்படுத்தும் விதமாக, சீமான் பேசியதால், அவரை தேச துரோக வழக்கில் கைது செய்யுமாறு காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. வரும் 17-ம் தேதி முதல் வட கிழக்கு பருவமழை பெய்ய இருப்பதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக் கொள்ளை வழக்கில், மேலும் 6 கிலோ நகைகள் சிக்கியது. கைதான திருவாரூர் முருகனுக்கு, சமயபுரம் வங்கிக் கொள்ளையிலும் தொடர்பு இருப்பதாக தகவல்.

இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதோடு, தமிழகம், கர்நாடகம் மற்றும் தெலுங்கானாவிலும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் அமைந்திருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 12,943 கன அடியிலிருந்து 8,290 கன அடியாக குறைந்துள்ளது. அணையிலிருந்து பாசனத்திற்காக 18,000 கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாயில் 700 கன அடியும் நீர் திறக்கபட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 114.40 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 84.82 டி.எம்.சி.யாக இருக்கிறது.

 

Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, political events : சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன்  அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
21:38 (IST)14 Oct 2019
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்ற அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு - மன்மோகன் சிங் வாழ்த்து

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்ற அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கும்m முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். வறுமை ஒழிப்பு குறித்த உங்களின் ஆய்வுகள் புதிய பாதையை உருவாக்க உதவும் என்று தனது வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.

20:45 (IST)14 Oct 2019
நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட மூவருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்ற அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், கல்வி, சுகாதாரத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க உங்களது கண்டுபிடிப்புகள் உதவியாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

20:11 (IST)14 Oct 2019
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்ற அபிஜித் பானர்ஜிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், வறுமை ஒழிப்பில் அவர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

19:57 (IST)14 Oct 2019
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவழி அபிஜித் பானர்ஜிக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவழியைச் சேர்ந்த அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், உலகளவில் வறுமையை எதிர்கொள்ள பொருளாதார வல்லுநர்களின் ஆய்வு உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

19:39 (IST)14 Oct 2019
கோலிவுட்டில் நடிக்க உள்ள கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

19:08 (IST)14 Oct 2019
தீபாவளி பண்டிகைக்கு அரசுப் பேருந்துகளில் இதுவரை 51,208 பேர் முன்பதிவு

தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்காக தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் இதுவரை 51,208 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர் என்றும் இதன் மூலம் ரூ.2.55 கோடி வசூலாகியுள்ளது என்றும் போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

18:49 (IST)14 Oct 2019
பொருளாதார மந்தநிலைக்கு ஜிஎஸ்டியும், அதை தவறாக செயல்படுத்தியதும் முக்கிய காரணம் - ப.சிதம்பரம்

ப.சிதம்பரம் சார்பில் அவர் கேட்டுக்கொண்டபடி அவரது டுவிட்டர் பக்கத்தில் அவருடைய குடும்பத்தினர் டுவிட் செய்துள்ளனர். அதில், “ஜி.எஸ்.டி-யை தவறாக செயல்படுத்தியதை பிரதமரின் பொருளாதார ஆலோசகரே ஒப்புக்கொண்டார். அனைவரின் கருத்துகளின்படியே ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டது என நிதியமைச்சர் கூறுவது தவறு.” என்று குறிப்பிட்டுள்ளார்.

16:12 (IST)14 Oct 2019
நோபல் பரிசு வென்ற இந்தியர்

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை பெற்றார், இந்தியரான அபிஜித் பானர்ஜி

2019ம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது

எஸ்தர் டப்பல்லோ, மைக்கேல் கிரம்மர் ஆகியோருடன் நோபல் பரிசை பகிர்ந்து கொள்கிறார், அபிஜித் பானர்ஜி

15:24 (IST)14 Oct 2019
"வாக்காளர் பட்டியலில் 1.64 கோடி பேர் திருத்தம்" - சத்ய பிரதா சாஹு

வாக்களர் பட்டியலில் இதுவரை 1 கோடியே 64 லட்சம் பேர் திருத்தம் செய்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி மாதம் 20ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிக்காக 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

15:16 (IST)14 Oct 2019
ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்பு - தமிழகத்தில் 33 பேர் கைது

நாடு முழுவதும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக 127 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இருந்து 33 பேரும், உத்தரப்பிரதேசத்தில் இருந்து 19 பேரும், கேரளா மற்றும் தெலங்கானாவில் இருந்த முறையே 17 மற்றும் 14 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளதாக என்.ஐ.ஏ. ஐ.ஜி. அலோக் மிட்டல் தெரிவித்துள்ளார்.

15:15 (IST)14 Oct 2019
விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு உத்தரவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து வழக்கின் விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எவ்வளவு காலஅவகாசம் தேவைப்படும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்

15:13 (IST)14 Oct 2019
கையாடல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு

ஆதி திராவிடர் மாணவர்கள் கல்விக்கு ஒதுக்கும் நிதியில் கையாடல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு.

நீதிமன்றத்துக்கு உதவ அக்.21-ல் ஆவணங்களுடன் ஆஜராக ஆதி திராவிடர் நலத்துறை செயலருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

14:31 (IST)14 Oct 2019
ஐசிசி ரேங்கிங் - அஷ்வின் முன்னேற்றம்

ஐசிசி டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

இதில், ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென்னாப்பிரிக்காவின் ரபாடா 835 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், ஜஸ்பிரித் பும்ரா, 818 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். 

நீண்ட இடைவேளைக்குப் பிறகு அணியில் இடம்பிடித்த ரவிச்சந்திரன் அஷ்வின், 792 புள்ளிகளுடன் ஏழாம் இடத்துக்கு முன்னேறினார். 

14:25 (IST)14 Oct 2019
வழக்கு விசாரணை நாளை

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் பிரவீன், தந்தை சரவணன், ராகுல், தந்தை டேவிஸ் உள்ளிட்ட 4 பேரின் ஜாமீன் மனு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது தேனி நீதிமன்றம்.

14:24 (IST)14 Oct 2019
வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார் கங்குலி

பிசிசிஐ தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய ஸ்ரீநிவாசனுடன் வந்தார் சவுரவ் கங்குலி. பிசிசிஐயின் செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய அமித்ஷா மகன் ஜெய் ஷாவும் வருகை தந்துள்ளார். அக்.23 பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல் நடக்கும் நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும்.

14:12 (IST)14 Oct 2019
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

டெல்லியில் பொதுத்துறை வங்கிகளின் தலைமை நிர்வாக இயக்குநர்களுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

14:10 (IST)14 Oct 2019
தமிழக காங்கிரஸ் கட்சியின் மனித நேயம் போற்றத்தக்கது - பாமக நிறுவனர் ராமதாஸ்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் தமிழக அரசு விடுவிக்கலாம் என்று நீதிமன்றம் தெரிவித்த பிறகும் அதனை தமிழக காங்கிரஸ் எதிர்க்கிறது என்றால் அவர்களின் மனித நேயம் போற்றத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

13:38 (IST)14 Oct 2019
ரசிகர்களுக்கு விவேக் வேண்டுகோள்

'தேவையில்லாததைத் தவிர்த்து, ஆக்கப்பூர்வ விஷயங்களை ட்விட்டரில் டிரெண்ட் செய்யுங்கள் என நடிகர் விஜய், பிகில் ஆடியோ லான்ச் விழாவில் பேசிய நிலையில், நடிகர் விவேக் #PlantForKalam எனும் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்ய அழைப்பு விடுத்திருக்கிறார். 


13:30 (IST)14 Oct 2019
ராஜீவ்காந்தி கொலை குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்

"ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன். அமைதிப் பேச்சுவார்த்தை குழு என்ன செய்தது என்பதை விவாதிக்கத் தயாரா?. பிரபாகரன் படத்தை நெஞ்சிலும், தோளிலும் பச்சைக் குத்திக் கொண்டு சட்டசபையில் நுழைவோம். தேர்தல் ஆணைய விதிகளை பின்பற்றாமல் பேசினேன் என்பதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது." என்று சீமான் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். 

13:23 (IST)14 Oct 2019
ஓ.பி.எஸ் - ரங்கசாமி சந்திப்பு

புதுச்சேரி தனியார் ஹோட்டலில் தங்கியுள்ள துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி சந்தித்து பேசியுள்ளார்.

13:20 (IST)14 Oct 2019
வானிலை நிலவரம்

நீலகிரி, ஈரோடு, கோவை, சிவகங்கை, தருமபுரி, நாமக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர், நாகை, தஞ்சாவூர் ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

12:41 (IST)14 Oct 2019
சுரேஷூக்கு 7 நாள் போலீஸ் காவல்

லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் சுரேஷை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ்க்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சரணடைந்த சுரேஷை 15 நாள் விசாரிக்க தனிப்படை அனுமதி கேட்ட நிலையில் 7 நாள் அனுமதி அளித்துள்ளது திருச்சி நீதிமன்றம்.

12:27 (IST)14 Oct 2019
அதிகாரிகளுடன் தேர்தல் அதிகாரி ஆலோசனை

வாக்காளர் பட்டியலை சரிபார்க்க 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நியமிக்கப்பட்ட 10 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசனை நடத்தி வருகிறார்.  வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 25-ம் தேதி வெளியிடப்படவுள்ள நிலையில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. 

12:21 (IST)14 Oct 2019
சீமான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம்தமிழர் கட்சி சீமான் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் சென்னையில் உள்ள சீமான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

12:09 (IST)14 Oct 2019
தமிழகத்தைச் சேர்ந்த 33 பேர் கைது

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக தமிழகத்தை சேர்ந்த 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 127 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ-வின்  ஐ.ஜி. அலோக் மிட்டல் தெரிவித்துள்ளார். 

11:43 (IST)14 Oct 2019
மு.க.ஸ்டாலினுடன் வைரமுத்து சந்திப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை, கவிஞர் வைரமுத்து சந்தித்தார். திருவாரூரில் அமைய உள்ள கருணாநிதியின் அருங்காட்சியகத்திற்கு தன் பங்காக ரூ.1 லட்சம் நிதியை அவர் வழங்கினார்.

11:41 (IST)14 Oct 2019
மனு தள்ளுபடி

சமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்! 

11:15 (IST)14 Oct 2019
கனிமொழிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற தமிழிசைக்கு அனுமதி

தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. வழக்கு வாபஸ் குறித்து 10 நாட்களுக்குள் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட வேண்டும் எனவும், தமிழிசை தரப்புக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

11:06 (IST)14 Oct 2019
அதிமுக அறிவிப்பு

அதிமுக-வின் 48-ம் ஆண்டு விழா குறித்த விபரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது அக்கட்சியின் தலைமைக் கழகம்

11:02 (IST)14 Oct 2019
திமுக மனு நிராகரிப்பு

ராதாபுரம் தேர்தல் வழக்கில் அதிமுகவின் இன்பதுரை மனுவை விரைவாக விசாரிக்க கோரிய திமுகவின் அப்பாவு கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

10:57 (IST)14 Oct 2019
அதிமுக 48-ம் ஆண்டு விழா

அதிமுகவின் 48-வது ஆண்டு தொடக்க விழா வரும் வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

10:56 (IST)14 Oct 2019
கல்வித்துறை தகவல்

விஜயதசமி நாளன்று தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 2,754 குழந்தைகள் எல்கேஜி, யுகேஜி, முதல் வகுப்பில் சேர்ந்துள்ளனர் எனவும், அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 325 குழந்தைகள் சேர்ந்துள்ளனர் எனவும் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

10:54 (IST)14 Oct 2019
சீமான் மீது வழக்கு பதிவு

விக்கிரவாண்டியில் ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறையை தூண்டும் வகையிலும், தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

10:51 (IST)14 Oct 2019
அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு

தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  காய்ச்சல் என்ற பெயரில் ஒரு நாளைக்கு தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானவர்கள் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். சிலர் மருத்துவமனையில் அ்ட்மிட்டும் ஆகின்றனர். இது தவிர தனியார் மருத்துவமனைகளிலும் அட்மிட் ஆகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவும் உயிர் இழப்பை தடுக்கவும் தமிழக அரசு நிலவேம்பு கசாயத்தை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tamil Nadu News Today Updates: தேசிய அளவில் உள்ள அனைத்து குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் ஊட்டச்சத்து அளவைக் கணக்கீடும், விரிவான தேசிய ஊட்டச்சத்து ஆய்வறிக்கை (சி.என்.என்.எஸ்) சில தினங்களுக்கு முன்பு வெளியாகின. மத்திய சுகாதார அமைச்சகத்தின் உதவியுடன், 2016 முதல் 2018 வரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு,  தற்போது முடிவுகள் வந்துள்ளன.

தமிழ்நாட்டை பற்றியத் தகவல்கள் ஆச்சரியமளிப்பதாக இல்லையென்றாலும் , சற்று மலப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது. உதாரணமாக, அதிக எடைக்குறைவான  குழந்தைகள் தமிழகத்தில் இருக்கின்றனர், அதிகஎடை( ஓவர்வெயிட்) கொண்ட இளம் வயதினரும் அதே  தமிழகத்தில் தான் இருக்கின்றனர்.

Web Title:Tamil nadu news today updates dengue fever vikravandi nanguneri by election

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
JUST NOW
X