News today updates : தேசியவாத காங்கிரஸ் ஆட்சியமைக்க இரவு 8.30 மணி வரை காலக்கெடு!

Chennai petrol diesel price : சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.76.08க்கும், டீசல் விலை 7 பைசா குறைந்து ரூ.69.60க்கும் விற்பனை.

Tamil nadu news today live updates
Tamil nadu news today live updates

Tamil nadu news today updates :  முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் சென்னை, ஆழ்வார்பேட்டையில் காலமாகியிருக்கிறார். அவருக்கு வயது 86. பிரதமர் மோடி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர், முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி குரோஷி உள்ளிட்டோர் சேஷன் மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்குமாறு சிவசேனாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து, சோனியாவுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் சரத்பவார். அயோத்தி தீர்ப்பை தொடர்ந்து, இந்து, முஸ்லிம் மதத் தலைவர்களுடன் அஜித் தோவல் சந்திப்பு. அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் பேணிக் காப்பது தொடர்பாக இந்த சந்திப்பில் ஆலோசனை. சென்னை உயர் நீதிமன்ற தலைமைன் நீதிபதியாக இன்று பதவியேற்கிறார் ஏ.பி.சாஹி. வழக்கறிஞர்கள் உதவி இல்லாமல், தாமாக ஆஜராகி வாதாடுவதற்கான விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வங்க தேசத்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் தொடரை வென்றது இந்தியா.

Live Blog

Tamil Nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற இருக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்


22:45 (IST)11 Nov 2019

அதிமுகவினரின் விளம்பர வெறிக்கு முற்றுப்புள்ளி எப்போது?

கோவையில் அனுராதா என்பவர் விபத்துக்குள்ளானதற்கு அதிமுக கொடிக் கம்பம் சரிந்து விழுந்ததே காரணமெனவும், அதனை காவல்துறையினர் மறைப்பதாகவும் புகார்கள் எழுகின்றன.

அதிமுக-வினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிக்கப்பட்டுள்ளார்.

இவர்களது விளம்பர வெறிக்கு முற்றுப்புள்ளி எப்போது?

– கோவையில் அனுராதா என்பவர் விபத்துக்குள்ளானதற்கு அதிமுக கொடிக்கம்பம் சரிந்து விழுந்ததே காரணம் என்ற புகார்கள் எழுந்த நிலையில் மு.க.ஸ்டாலின் ட்வீட்

22:43 (IST)11 Nov 2019

ஜம்மு- காஷ்மீரில் துப்பாக்கி சண்டை ..! இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் பந்திபோரா மாவட்டம் லாவ்தாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினரால் அப்பகுதியில் பலத்த பாதுகாப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது, பதுங்கியிருந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்துவதை அறிந்த பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் மேற்கொண்டனர். இருதரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில், தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

22:40 (IST)11 Nov 2019

42 இடங்களில் நடைபெற்ற ரெய்டு… ரூ.3300 கோடி ஹவாலா பண பரிமாற்றம் கண்டுபிடிப்பு!

வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில், டெல்லி, மும்பை, ஆக்ரா, ஹைதராபாத் மற்றும் ஈரோடு போன்ற பகுதிகளில் நடைபெற்ற சோதனையில், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ஒப்பந்த பணிகளை எடுத்த நிறுவனங்கள், இடைத்தரகர்கள், ஹவாலா தரகர்கள் மூலம் பெருமளவு பணத்தை வேறு நிறுவனங்களுக்கு மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நவம்பர் முதல் வாரத்தில் நடந்த சோதனையில், ஆந்திராவைச் சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவருக்கு 150 கோடி ரூபாய் ஹவாலா பணம் பரிமாற்றம் செய்ததும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்த சோதனையில் 4 கோடியே 19 லட்சம் ரூபாய் ரொக்கமும், 3.2 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளும் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்கள், ஹவாலா தரகர்களுக்கு இடையேயான தொடர்புகள், போலியாக ஒப்பந்த பணிகளை எடுத்து வேறு நிறுவனங்களுக்கு மாற்றியதில் குழுவாக செயல்பட்டது போன்ற மோசடிகள் இந்த சோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

22:30 (IST)11 Nov 2019

காட்டு யானைக்கு பயந்து பெருமாள் மலைக்கோயிலில் தஞ்சமடைந்த மக்கள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அச்சுறுத்தி வரும் ஒற்றை காட்டு யானையால் அச்சமடைந்த பள்ளக்காடு, கனுவாக்காடு நொச்சிப்பள்ளம் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குடும்பத்தினருடன் பெருமாள் மலைக்கோயிலில் தஞ்சமடைந்துள்ளனர்.

21:46 (IST)11 Nov 2019

நாளை இரவு 8.30 மணி வரை காலக்கெடு

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரசுக்கு நாளை இரவு 8.30 மணி வரை காலக்கெடு – ஆளுநர் உத்தரவு

பாஜக, சிவசேனா கட்சிகள் போதுமான பலத்தை உறுதிப்படுத்தி தெரிவிக்காத நிலையில் 3வது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பை தந்துள்ளார் ஆளுநர்

21:19 (IST)11 Nov 2019

ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு

ஆளுநர் அழைப்பு கடிதம் தந்துள்ளது பற்றி காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசித்த பின் நாளை இறுதி முடிவு எடுக்கப்படும் – நவாப் மாலிக்

20:48 (IST)11 Nov 2019

உழவுப்பணியை எளிமையாக்க புதிய வகை உழவுக் கருவி கண்டுபிடித்த நாமக்கல் விவசாயி

ரேக்ளா வண்டியில் டிராக்டர் கலப்பையை பொருத்தி, புதிய வகை உழவுக் கருவியை உருவாக்கியுள்ளார் நாமக்கல்லை சேர்ந்த விவசாயி ஒருவர். இதனால் உழவுப்பணி எளிமையாகி உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

விவசாயத்தில் பலரும் பல நவீன யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அப்படி, ஒரு புதுமையான முயற்சியை மேற்கொண்டிருக்கிறார் நாமக்கல் மாவட்டம் நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்த விவசாயி செந்தில்குமார். டிராக்டர் மூலம் உழவு செய்து வந்த இவர், குறைந்த செலவில் உழவுக் கருவியை உருவாக்க திட்டமிட்டார். அவரின் எண்ணத்தில் உதித்ததுதான், இந்த “ரேக்ளா டிராக்டர்”.

ரேக்ளா பந்தயங்களுக்கு பயன்படுத்தப்படும் வண்டியில் சிறிது மாற்றம் செய்து, அதன் பின்னால், டிராக்டரில் பயன்படுத்தப்படும் கலப்பையை போன்று எடை குறைந்த கலப்பையை மாட்டி, மாடுகளை வைத்து உழவு செய்து வருகிறார். அந்த வாகனத்தில் அமர, இருக்கை வசதியும் செய்துள்ளார். மண்ணின் தன்மைக்கு ஏற்ப கலப்பையை மட்டும் மாற்றினால் போதுமானது.

20:46 (IST)11 Nov 2019

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பொறுப்பேற்றுள்ளார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில்ஆளுநர் பன்வாரிலால் பதிவு பிரமாணம் செய்து வைத்தார்.

20:46 (IST)11 Nov 2019

காவலர் உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி

கடந்த 9ம் தேதி நிறுத்தப்பட்ட காவலர் உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் மீண்டும் வரும் 18ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெறும் – கூடுதல் காவல்துறை இயக்குநர்

19:58 (IST)11 Nov 2019

ஆட்சியமைக்க உரிமை கோரியது, சிவசேனா

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க உரிமை கோரியது, சிவசேனா

ஆளுநரை நேரில் சந்தித்து விருப்பத்தை தெரிவித்தார், ஆதித்ய தாக்கரே

ஆட்சியமைக்க 2 நாள் அவகாசம் தர ஆளுநர் மறுத்து விட்டதாக ஆதித்ய தாக்கரே குற்றச்சாட்டு

19:58 (IST)11 Nov 2019

மத்திய அரசு பதில் மனு தாக்கல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டம் 370வது பிரிவு ரத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல்.

19:57 (IST)11 Nov 2019

ரூ.3,300 கோடி ஹவாலா பணபரிமாற்றம்

நாடு முழுவதும் ஈரோடு உள்ளிட்ட 42 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.3,300 கோடி ஹவாலா பணபரிமாற்றம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது – வருமானவரித்துறை

டெல்லி, மும்பை, ஹைதராபாத், புனே, ஆக்ரா, கோவா உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.

19:57 (IST)11 Nov 2019

சுபஸ்ரீ வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயகோபாலுக்கு ஜாமீன்

சென்னை பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் மாதம் 12 தேதி சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ என்ற பெண் கீழே விழுந்து லாரி ஏறி உயிரிழந்தார். இந்த வழக்கில் ஜெயகோபால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தமக்கு ஜாமீன் கோரி ஜெயகோபால் 2வது முறையாக மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 45 நாட்களுக்கும் மேலாக மனுதாரர்கள் சிறையில் இருப்பதாகவும், எந்த நிபந்தனை விதித்தாலும் பின்பற்ற மனுதாரர் தயாராக இருப்பதாகவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜெயகோபாலுக்கும், மேகநாதனுக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.மேலும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், சென்னை கேன்சர் மருத்துவமனைக்கும், ஸ்டான்லி மருத்துவமனைக்கும் தலா 25 ஆயிரம் ரூபாயை வழங்க ஜெயகோபாலுக்கு நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

19:01 (IST)11 Nov 2019

பொன் மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு மனு

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. வழக்கு தொடர்பான விபரங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30ஆம் தேதி பொன் மாணிக்கவேல் பதவிக்காலம் முடிவடைவதால் முன்கூட்டியே ஒப்படைக்கவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

18:58 (IST)11 Nov 2019

5 கோடி ரொக்கம், ரூ.3 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்

ஜேப்பியார் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் ரூ.5 கோடி ரொக்கம், ரூ.3 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் – வருமான வரித்துறை

ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடிக்கும் மேலான வருவாயை கணக்கில் காட்டாதது சோதனையில் கண்டுபிடிப்பு – வருமான வரித்துறை

18:57 (IST)11 Nov 2019

162 எம்எல்ஏக்களின் ஆதரவுடன்….

தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உட்பட 162 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரிடம் கொடுத்து ஆட்சி அமைக்க சிவசேனா உரிமை கோருகிறது

18:35 (IST)11 Nov 2019

காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு தர முடிவு என தகவல்

மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது குறித்து ஆளுநருடன் சிவசேனா தலைவர்கள் சந்திப்பு; சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே உள்ளிட்டோர் ஆளுநருடன் சந்திப்பு

சிவசேனா ஆட்சியமைத்தால் காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு தர முடிவு எனத் தகவல்

18:34 (IST)11 Nov 2019

தனி அதிகாரி நியமனம்

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம், மருத்துவ உதவித்தொகை முறையாக வழங்கப்படவில்லை என்ற புகாரின் அடிப்படையில்தான் தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் – ஐசரி கணேஷ்

18:11 (IST)11 Nov 2019

மனமகிழ் மன்றங்கள் மீது நடவடிக்கை

விதிகளை மீறி செயல்படும் மனமகிழ் மன்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க கலால்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

18:10 (IST)11 Nov 2019

மஹாராஷ்டிரா முதல்வர் ஆகிறார் உத்தவ் தாக்கரே

மஹாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா உறவு முறிந்து விட்டதால், புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது. இதனால்,
சிவசேனா தலைமையில் புதிய ஆட்சி உருவாக்கும் பணி, முடுக்கி விடப்பட்டு உள்ளது. நடந்து முடிந்த தேர்தலில், மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு, 105 இடங்கள் மட்டுமே கிடைத்தது. கூட்டணி கட்சியான சிவசேனா, முதலமைச்சர் பதவி கேட்டு பிடிவாதம் பிடித்ததால், ஆட்சி அமைக்கும் முயற்சியில் இருந்து பாஜக பின் வாங்கியது. இதைத்தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உதவியுடன் ஆட்சி அமைக்கும் முயற்சியில் சிவசேனா, ஈடுபட்டு உள்ளது.

இன்னும் சற்று நேரத்தில், மஹாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யரியை ,. சிவசேனா தலைவர்கள் சந்திக்க இருக்கிறார்கள். இதனிடையே, மஹாராஷ்டிராவில், முதலமைச்சர் பதவிக்கு உத்தவ் தாக்கரேவும், துணை முதலமைச்சர் பதவிக்கு அஜித் பவாரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என செய்தி வெளியாகி உள்ளது.

18:09 (IST)11 Nov 2019

அதிக மீன்கள் கிடைத்ததால், மீனவர்கள் மகிழ்ச்சி

கியார், மகா புயல் சின்னங்கள் உருவாகி மறைந்த நிலையில், அதிக மீன்கள் கிடைத்திருப்பதாக குளச்சல் மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். புயல் சின்னங்களால்​, அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், 10 நாட்களுக்கு பிறகு ஆழ்கடலுக்கு சென்றுவிட்டு கரை திரும்பியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பி உள்ளனர். ஆழ்கடலில் சகஜ நிலை திரும்பியுள்ள நிலையில், கொளிசாலை உள்ளிட்ட மீன்கள் அதிகம் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

18:09 (IST)11 Nov 2019

அரியலூர் : பிரகதீஸ்வரருக்கு 100 மூட்டை அன்னாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தில், மாமன்னன் ராஜேந்திர சோழன் கட்டிய பிரகதீஸ்வரர் ஆலையத்தில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. 100 மூட்டை அன்னத்தை வடித்து சாதத்தை உலர வைத்து கூடைகளில் எடுத்து கொண்டு அதனை 13 அரை அடி உயரமும், 62 அடி சுற்றளவும் கொண்ட பிரகதீஸ்வரருக்கு கொட்டி, அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனை வழிப்பட்டனர்.

18:08 (IST)11 Nov 2019

ரஜினி நடிகர்தான் – முதல்வர் பழனிசாமி

உள்ளாட்சி தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் அறிவிக்கும். நாடாளுமன்ற தேர்தலின் போது இருந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும். ரஜினி நடிகர்தான், அவர் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்பது இடைத்தேர்தல் வெற்றி மூலம் நிரூபணமாகியுள்ளது – முதலமைச்சர் பழனிசாமி

18:07 (IST)11 Nov 2019

கடையம் தம்பதியர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு : கைதான பாலமுருகன் குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு

நெல்லை மாவட்டம் கடையத்தில் வீட்டில் இருந்த முதியவர்களிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பாலமுருகன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் அவரது தந்தை மாடசாமி, தாய் சவுரியம்மாள் உட்பட 5 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். தங்கள் குடும்பத்தில் இருப்பவர்களை காவல்துறையினர் துன்புறுத்தி வருவதாக கூறிய அவர்கள், விஷம் குடித்து இருப்பதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டார். ஆனால் பரிசோதனையில் அவர்கள் யாரும் விஷம் குடிக்கவில்லை என உறுதியானது. இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

17:25 (IST)11 Nov 2019

உள்ளாட்சி தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் அறிவிக்கும்

உள்ளாட்சி தேர்தல் குறித்து உரிய நேரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என கோவை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். நாடாளுமன்ற தேர்தலின் போது இருந்த அதே கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

17:02 (IST)11 Nov 2019

அனைத்துக் கட்சித் தலைவர்களை ஆலோசனைக்கு அழைத்த துணை ஜனாதிபதி

ராஜ்ய சபை சேர்மன் மற்றும் துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடு அனைத்து கட்சி உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களை 17ம் தேதி தன்னுடைய இல்லத்திற்கு அழைத்துள்ளார். 18ம் தேதி குளிர்கால கூட்டத்தொடர் துவங்குகின்ற நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

16:59 (IST)11 Nov 2019

மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் லதா மங்கேஷ்கர்

பிரபல திரைப்பட பாடகியான லதா மங்கேஷ்கர் மூச்சுத் திணறல் காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

16:47 (IST)11 Nov 2019

5 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார் உத்தவ் தாக்கரே

இன்று மாலை 5 மணிக்கு சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்ட்ரா மாநில ஆளுநரை சந்திக்கிறார். தங்களால் ஆட்சி அமைக்க இயலாது என்று பாஜக அறிவித்துவிட்ட நிலையில் சிவசேனாவை ஆட்சி அமைக்க அழைத்திருக்கிறார் உத்தவ் தாக்கரே.

16:19 (IST)11 Nov 2019

யாரையும் நீக்கும் உரிமை மாவட்ட தலைவர்களுக்கு இல்லை

தமிழக காங்கிரஸ் தலைவரின் ஒப்புதல் இல்லாமல் மாவட்ட, வட்டார, நகராட்சி, மற்றும் பேரூராட்சி நிர்வாகிகளை நீக்கும் உரிமை மாவட்ட தலைவர்களுக்கு கிடையாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார்.

15:58 (IST)11 Nov 2019

ஜே.என்.யூ வளாகத்தில் மாணவர்கள் தொடர் போராட்டம்

கட்டண உயர்வை கண்டித்து ஜே.என்.யூ பல்கலைக் கழக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களுக்கும் – பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற தள்ளுமுள்ளால் டெல்லியில் பதட்டம். 

15:42 (IST)11 Nov 2019

செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீட்டில் சுங்க அதிகாரிகள் சோதனை

அரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியின் உதவியாளராக பணியாற்றுபவர் சுப்பிரமணியன். மூர்த்திபாளையத்தில் கொசு வலை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். அவருடைய அலுவலகத்தில் இன்று சுங்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

15:30 (IST)11 Nov 2019

குறைத்தீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்த வருவாய்த்துறை அலுவலர்கள்

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்த வருவாய்த்துறை அலுவலர்கள் 20 பேருக்கு விளக்கம் கேட்டு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

15:08 (IST)11 Nov 2019

முன்னாள் தேர்தல் ஆணையர் சேஷனின் இறுதி ஊர்வலம் துவங்கியது

ஆழ்வார்பேட்டையில் இருக்கும் சேஷனின் இல்லத்தில் இருந்து அவருடைய உடல் பெசண்ட் நகரில் அமைந்திருக்கும் மின் மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு மின் தகனம் செய்யப்பட உள்ளது.

14:36 (IST)11 Nov 2019

வெங்காய விநியோகஸ்தர்களின் இடங்களில் வருமான வரி சோதனை

டெல்லி, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், மும்பை உள்ளிட்ட இடங்களில் உள்ள வெங்காய விநியோகஸ்தர்களுக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

14:24 (IST)11 Nov 2019

பெரும்பான்மையை நிரூபிக்க கூடுதல் கால அவகாசம் கோரும் சிவசேனா

பாஜகவுடனான ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்ட சிவசேனா தற்போது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எம்.எல்.ஏக்கள் தங்களின் ஆதரவு கடிதங்களை ஆளுநரிடம் அளிப்பதோடு மட்டுமல்லாமல் பெரும்பான்மையை நிரூபிக்க கூடுதல் கால அவகாசம் கோரவும் சிவசேனா திட்டம் தீட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

14:20 (IST)11 Nov 2019

மத்திய அமைச்சரவையில் தொடர்வது சரியாக இருக்காது – அரவிந்த் சாவந்த்

தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதிகளை பாஜக சரிவர நிறைவேற்றாமல் பின்வாங்கிய காரணத்தால் மத்திய அமைச்சரவையில் நான் இனியும் தொடர்வது சரியாக அமையாது என சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் அறிவித்துள்ளார்.

13:50 (IST)11 Nov 2019

சரத்பவாருடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு

மஹாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்கும் மும்முரத்தில் இருக்கிறது. இது தொடர்பாக அடுத்தடுத்த நடவடிக்கைகளாக மத்திய அமைச்சரவையில் இருந்து விலகல், இன்று பிற்பகலில் மாநில ஆளுனருடன் சந்திப்பு என களம் இறங்கியிருக்கிறது சிவசேனா.

மேலும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவை பெறும் விதமாக அந்தக் கட்சியின் தலைவர் சரத்பவாரை, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சந்தித்து பேசினார். காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து சிவசேனா அரசை ஆதரிக்கும் என கூறப்படுகிறது. தேசியவாத காங்கிரஸ் புதிய அமைச்சரவையில் சேருமா? வெளியில் இருந்து ஆதரிக்குமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

13:40 (IST)11 Nov 2019

உள்ளாட்சித் தேர்தல்- நவம்பர் 14 முதல் திமுக விருப்ப மனு

திமுக பொதுக்குழுவைத் தொடர்ந்து, இன்று சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. பின்னர் நிருபர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுக ஆவலுடன் இருப்பதாக கூறினார்.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை விருப்ப மனு பெறலாம் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

13:36 (IST)11 Nov 2019

மகாராஷ்டிரா விவகாரம்

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி. தேசியவாத காங். தலைவர் சரத் பவாரை இன்னும் சற்று நேரத்தில் சந்திக்கிறார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே. 

12:51 (IST)11 Nov 2019

மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

12:34 (IST)11 Nov 2019

ரயில் விபத்து

தெலங்கானா : ஹைதராபாத் கச்சிகுடா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த விரைவு ரயில் மீது மின்சார ரயில் மோதி விபத்து. விபத்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் . ரயில் பெட்டிகளில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது

12:16 (IST)11 Nov 2019

மாதிரி வாக்குப்பதிவு

உள்ளாட்சி தேர்தலுக்காக பெங்களூருவிலிருந்து கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு, வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது

11:53 (IST)11 Nov 2019

காற்று மாசு அச்சம் வேண்டாம்

காற்று மாசு காரணமாக சென்னையில் யாருக்கும் சுவாச கோளாறு ஏற்பட்டதாக தகவல் இல்லை. காற்று மாசை கண்டு சென்னையில் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்

11:44 (IST)11 Nov 2019

ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை

சென்னையில் காற்று மாசை கட்டுப்படுத்துவது தொடர்பாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ககன்தீப்சிங்பேடி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

11:35 (IST)11 Nov 2019

டி.என்.சேஷன் உடலுக்கு அஞ்சலி

மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் சேஷன் உடலுக்கு அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 

11:26 (IST)11 Nov 2019

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

இன்று பட்டமளிப்பு விழா நடைபெற உள்ள நிலையில், கல்வி கட்டண உயர்வு, ஆடை கட்டுப்பாட்டைக் கண்டித்து டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

11:17 (IST)11 Nov 2019

திமுக மா.செ கூட்டம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. 

11:06 (IST)11 Nov 2019

எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்

முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷனின் மறைவுக்கு, ”சிறந்த நிர்வாகி, கடின உழைப்பாளியான டி.என்.சேஷன் அனைவரிடமும் அன்பாக பழகும் தன்மை கொண்டவர்” என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது இரங்கலை தெரிவித்துள்ளார். 

10:55 (IST)11 Nov 2019

கனிமொழி பேச்சு

கட்சியின் வளர்ச்சிக்காகவே சர்வாதிகாரியாக முடிவெடுப்பேன் என்று ஸ்டாலின் பேசினார். இதை அரசியல் கண்ணோட்டமாக பார்ப்பது தவறு என திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார். 

10:45 (IST)11 Nov 2019

மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

மறைந்த டி.என்.சேஷனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ’சேஷனின் குடும்பத்துக்கும், அவருடன் பணியாற்றியவர்களுக்கும் தனது இரங்கலை தெரிவிப்பதாகவும், சேஷன் காட்டிய வழியில் பயணிப்பது தான், நாம் அவருக்கு செலுத்தும் உண்மையான மரியாதை என்றும்’ செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் தெரிவித்தார். 

10:36 (IST)11 Nov 2019

சத்யபிரத சாஹூ, வாசன் அஞ்சலி

மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் சேஷன் உடலுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ, தமாகா தலைவர் வாசன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 

10:21 (IST)11 Nov 2019

மு.க.ஸ்டாலின் இரங்கல்

முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சுதந்திரமான, நேர்மையான தேர்தலை நடத்தி ஜனநாயகத்தின் உறுதிமிக்க பாதுகாவலராக திகழ்ந்தவர் சேஷன் என சேஷனை புகழ்ந்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்

10:00 (IST)11 Nov 2019

டி.என்.சேஷன் மறைவு

முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைவுக்கு பிரதமர் மோடி, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, திமுக தலைவர் ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் இரங்கல்

09:45 (IST)11 Nov 2019

காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

மஹாராஷ்டிரா நிலவரம் குறித்து ஆலோசிக்க அவசரமாக கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு கூட்டம் . சோனியா காந்தி இல்லத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல். 

09:44 (IST)11 Nov 2019

ஏ.பி.சாஹி பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவியேற்றுள்ளார். நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழக முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள், உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்

09:39 (IST)11 Nov 2019

கமல் அஞ்சலி

”டி.என்.சேஷன் தைரியம் மற்றும் நம்பிக்கையின் உருவகமாக நினைவுகூரப்படுவார்.  “தேர்தல் ஆணையத்தின்” சக்திவாய்ந்த பாத்திரத்தை பொது மனிதனின் விவாதத்திற்கு கொண்டு வந்தார் அவர் தான்” என டி.என்.சேஷனின் மறைவுக்கு அஞ்சலி தெரிவித்துள்ளார் நடிகர் கமல் ஹாசன்.

09:02 (IST)11 Nov 2019

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,784 கனஅடியில் இருந்து 24,021 கனஅடியாக அதிகரிப்பு அணையின் நீர்மட்டம் 119.61 அடியாகவும், நீர்இருப்பு 92.85 டிஎம்சியாக உள்ளது. 

08:51 (IST)11 Nov 2019

கிரண்பேடி இரங்கல்

முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைவுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

08:36 (IST)11 Nov 2019

தேசியவாத காங்கிரஸின் நிபந்தனையை ஏற்றது சிவசேனா

மகாராஷ்டிராவில் பாஜகவுடனான கூட்டணியை முறிக்க வேண்டும் என்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிபந்தனையை ஏற்றது சிவசேனா.  சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்த முடிவை இன்று காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் அறிவிக்க வாய்ப்பு. 

08:28 (IST)11 Nov 2019

அரவிந்த் சாவந்த் அறிவிப்பு

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் அறிவித்துள்ளார். பாஜக உடனான கூட்டணியில் இருந்து விலக சிவசேனா முடிவு செய்துள்ளது. மஹாராஷ்டிராவில் பாஜக அல்லாத ஆட்சி அமைக்கும் பணியில் சிவசேனாவின் அடுத்த அதிரடியை நிகழ்த்தியிருக்கிறது. மத்திய கனரக மற்றும் நிறுவனங்களின் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார் அரவிந்த் சாவந்த். மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறினால், ஆதரவு குறித்து முடிவு எடுக்கப்படும் என தேசியவாத காங்கிரஸின் நிபந்தனையாக இது பார்க்கப்படுகிறது.

Tamil Nadu news today updates : பட்டா இல்லாத இயக்கமாக அமமுக உள்ளது என அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக, சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமமுக இயக்கம் இல்ல அது ஒரு மன்னாரன் கம்பெனி எனவும், தினகரனை ஆதரித்ததற்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அமமுகவிற்காக உழைத்தவர்களின் உழைப்பு வீண் போனதாக கடுமையாக விமர்சித்துள்ளார். தினகரன் அணியில் இருந்த போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்ததாகவும், ஆனால், அவரை சந்திக்க சென்ற போது இன்முகத்தோடு அவர் தம்மை வரவேற்றதாகவும் புகழேந்தி கூறியுள்ளார்.

அமமுக கட்சியை அங்கீகரிக்ககூடாது என கடந்த மாதம் 23 ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளதாக கூறிய அவர், வாழ்க்கையில் விசுவாசமே இல்லாத மனிதர் டி.டி.வி தினகரன் என்றும் கூறினார். சசிகலாவை வெளிகொண்டுவர தினகரன் எந்த ஒரு முயற்சியும் செய்யவில்லை என்றும் புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

Web Title: Tamil nadu news today updates weather politics sports tn seshan

Next Story
”டி.என்.சேஷனின் தேர்தல் சீர்திருத்தங்கள் ஜனநாயகத்தை வலுவாக்கின” – பிரதமர் மோடி இரங்கல்TN Seshan Passes away
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com