பாதி வழியில் பேருந்து நிறுத்தம் : தட்டிக்கேட்ட பெண்னை அடிக்கும் நடத்துனர் – வீடியோ

Tamil News Update : பேருந்து பாதி வழியில் நின்றது குறித்து கேட்ட பெண்னை நடத்துனர் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Tamil News Update : தென்காசி மாட்டம் கடையம் அருகே அரசு பேருந்தில் பயணி ஒருவரை நடத்துனர் செருப்பால் அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரைலாகி வருகிறது.

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் இருந்து ஆலங்குளம் நோக்கி சென்ற அரசுப்பேருந்து ஒன்றில் 20-க்கு மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். அப்போது பேருந்தை பாதி வழியில் நிறுத்திய ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும், ஒரு பெண்னை பாதி வழியில் இறக்கி விட்டுள்ளனர். மேலும் பேருந்து இதற்மேல் போகாது என்றும், பயணிகள் அனைவரும் நடந்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியான பயணிகள் பேருந்தில் இருந்து இறங்காமல் அமர்ந்திருக்கின்றனர். அப்போது இது பற்றி நடத்துனரிடம் கேட்கும் ஒரு பெண்னை அவர் அடிக்க முயற்சிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக வெளியான வீடியோ பதிவில் பேசும் ஒரு பெண், சடங்கான பெண்னை நடுகாட்டில் இறக்கி விட்டு நடந்து செல்லுமாறு கூறியதாகவும், இது குறித்து நடத்துனரிடம் கேட்கும்போது நான் அப்படித்தான் செய்வேன் வேண்டுமென்றால் நீ நடந்து செல் என்று கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் இதே போன் மற்றொரு நாள் ஒரு பெண்னை பாதி வழியில் இறக்கி விட்டதாகவும் அந்த பெண் கூறுகிறார். அந்த பெண் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரேன நடத்துனர் தனது செருப்பை கழற்றி அந்த பெண்னை அடிக்க போவதுபோல் முயற்சிக்கிறார்.

தொடர்ந்து அந்த பெண்ணின் கையை பிடித்து அடிக்கும் நடத்துனர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்.  இதனால் பேருந்தில் பதற்றம் அதிகரித்த நிலையில், நடத்துனர் ஓட்டுநரின் இருக்கையில் அமர்கிறார். இது தொடர்பான வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu news update bus conductor slaps passenger

Next Story
லோகோ பைலட்டாக ஆள்மாறாட்டம்; மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 2 பேர் ஈரோட்டில் கைதுtwo youths from west bengal arrested, two youths from west bengal held in erode for impersonating as loco pilots, இரண்டு இளைஞர்கள் கைது, லோகோ பைலட்டாக ஆள்மாறாட்டம், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 2 பேர் கைது, erode, tamil nadu news, railway news, rpf
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com