Relatives forced to take patient on open truck to hospital for 30 km News Tamil : வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காததால், இளைஞரின் உறவினர்கள் அவரை 30 கி.மீ தூரம் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு டிராக்டரில் அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்த பரிதாபம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையை சேர்ந்த பரணிமுத்து என்பவர் திருப்பூரில் பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பி உள்ளார். கடந்த 22-ம் தேதி கடுமையான வயிறு மற்றும் உடல் வலியால் பாதிக்கப்பட்ட நிலையில், முதுவர்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. இதனையடுத்து, ஆரம்ப சுகாதார மைய மருத்துவர்கள் ஒரு வாரம் வீட்டு தனிமையில் இருக்கும் படி, அறிவுறுத்தி அனுப்பியுள்ளனர்.
கடந்த திங்கள் கிழமை அன்று பரணி முத்துவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட, அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்திருந்த நிலையில், ஆம்புல்ன்ஸ் கிடைக்கவில்லை. நோயாளி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், மினி டிரக்கில் மதுரையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. டிராக்டரில் பரணிமுத்துவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளனர். இந்த சம்பவம் முதுவர்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், கிராமப்புறங்களில் உள்ள மருத்துவ உள்கட்டமைப்பு குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பரணிமுத்துவுக்கு முதுவர்பட்டியில் சிகிச்சை அளித்த ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர், நோயாளி சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளுக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால், நோயாளி அந்த தகவல்களை ஒரு போதும் எங்களிடம் சொல்லவில்லை.
அவர் மருத்துவமனைக்கு வந்தபோது, வயிறு வீங்கியிருந்தது, நான் 108 ஆம்புலன்ஸ்களை அழைத்து மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தேன். அவர்களுக்காக முன்பதிவு செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் மற்றொரு அவசர நோயாளிக்குச் சென்று கொண்டிருந்தது. எனவே, சிறிது நேரம் காத்திருக்கச் சொன்னேன். இருப்பினும், அவரது உறவினர்கள் நோயாளியை ஒரு டிரக் மூலம் அரசு மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று கையெழுத்திட்ட ஒப்புதல் கடிதத்தை கொடுத்துவிட்டு, அவர்கள் தங்கள் சொந்த ஆபத்தில் அழைத்துச் சென்றுள்ளதாகவும், நோயாளி தனது மருத்துவ வரலாற்றை தனது குடும்பத்தினரிடமிருந்தும் மறைத்துவிட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பரணிமுத்து கொரோனா தொற்றுக்கு எதிர்மறையாகி இருந்தாலும், இணை நோயுற்ற நிலைமைகளால் இறந்துவிட்டார் என்று கூறி, பிரச்சினையைத் திசைதிருப்ப மருத்துவமனை முயற்சிப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ஒரு நோயாளியை தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் இல்லை என்பதுதான் முக்கிய பிரச்சினை. அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், அவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவமனை நிர்வாகம் எதுவும் செய்யவில்லை. இதுதான் இங்குள்ள நிலைமை மற்றும் கோவிட் இறப்புகள் குறித்து அதிகாரிகள் குறைவான அறிக்கை அளிக்க முயற்சிப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
Baranimuthu (31), who was carried in a mini truck for more than 20 kilometers from a PHC in Muduvarpatti to Madurai GH died Yesterday. Hospital management says he tested negative for #Covid19 and had a previous medical history. pic.twitter.com/8N2sdpvGUF
— Janardhan Koushik (@koushiktweets) May 25, 2021
கடந்த திங்களன்று, அரசாங்க பதிவுகளின்படி மதுரையில் 1,139 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியும், 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், சராசரியாக குறைந்தது 50 இறப்புகள் தினமும் பதிவாகின்றன. அதிகப்படியான மக்கள் தொற்றுக்கு உள்ளானதன் காரணமாக, கிராமப்புறங்களில் இருந்து வரும் பல நோயாளிகளை அனுமதிக்க மருத்துவமனைகள் மறுக்கின்றன. அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள் மற்றும் பலர் கடுமையான அறிகுறிகளை உருவாக்கி வைரஸ் தொற்றால் உயிரிழந்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.