Advertisment

அரசு ரகசியங்களை திருடிய கொடுங் குற்றம்: முட்டை ஊழல் குறித்து மு.க.ஸ்டாலின் ஆவேசம்

MK Stalin: ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள அதிமுக அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் .

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu Egg Scam, Erode Christi Egg Contractor, IT Raid In Egg Scam, MK Stalin Condemns, முட்டை ஊழல், மு.க.ஸ்டாலின் அறிக்கை

Tamil Nadu Egg Scam, Erode Christi Egg Contractor, IT Raid In Egg Scam, MK Stalin Condemns, முட்டை ஊழல், மு.க.ஸ்டாலின் அறிக்கை

முட்டை ஊழல் விவகாரத்தில் அரசு ரகசியங்கள் திருடப்பட்ட கொடுங்குற்றம் நடந்திருப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

Advertisment

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘பள்ளிக்குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் திட்டத்திற்கான முட்டை, பருப்பு உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ததில் 2400 கோடி ரூபாய்வரை ஊழல் நடந்திருப்பதாக வருமான வரித்துறை சோதனைகளின் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கும் “மெகா ஊழல்” அதிர்ச்சியளிக்கிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு “கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன்” என்று மட்டுமே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது என்பது துறை வாரியாக வெளிவந்து கொண்டிருக்கும் இந்த ஊழல்கள் மூலம் கண்கூடாக நாட்டு மக்களுக்குத் தெரிகிறது.

முட்டை வழங்கும் தனியார் நிறுவனத்தில் நடைபெற்ற ரெய்டில் அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்த கணக்குகள் ஆவண ஆதாரங்களாக வருமான வரித்துறையின் கையில் சிக்கியிருக்கின்றன. அதைவிட அபாயகரமானது என்னவென்றால் அரசாங்கத்தின் ரகசிய கோப்புகளும், அரசு ரகசியங்கள் அடங்கிய குறிப்புகளும் அந்த தனியார் முட்டை நிறுவனத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இலஞ்ச ஊழலுக்காக வஞ்சக எண்ணத்தோடு அரசு ரகசியத்தையே விற்பனை செய்த கேவலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் நடைபெற்று தமிழகமே வெட்கித் தலை குனிந்து நிற்கிறது.

மக்கள் விரோத அதிமுக ஆட்சியில் முட்டை நிறுவனத்தில் நடைபெற்றது மட்டுமே முதல் வருமான வரித்துறை ரெய்டு அல்ல. இதற்கு முன்பு கரூர் அன்புநாதன், மணல் மாபியா சேகர் ரெட்டி, முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதலமைச்சரின் துறையான நெடுஞ்சாலைத்துறை கான்டிராக்டர் செய்யாதுரை நாகராஜன், அமைச்சர் காமராஜின் உறவினர்கள் என்று பல்வேறு வருமான வரித்துறை ரெய்டுகள் நடைபெற்றுள்ளன.

ஆனால், எதிலும் இதுவரை பொதுமக்களின் கவனத்தில் வெளிச்சம் பாய்ச்சிடத் தக்க உருப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதிமுக அமைச்சர்களை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு போர்த்திப் பாதுகாத்து வருகிறது என்பதுதான் இதுவரை உள்ள மிகுந்த அவலமான நிலைமை.

ஆகவே, 2400 கோடி ரூபாய் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் எனவும், இந்த ஊழலுக்கு துணை போன அதிகாரிகள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

அப்பாவிகள் மீது எதற்கு எடுத்தாலும் தேசத்துரோக வழக்குப் போடும் அதிமுக அரசு, தனியார் முட்டை நிறுவனத்திற்கு அரசாங்க ரகசியத்தை விற்று கொடுங்குற்றம் புரிந்திருக்கும் அதிகாரிகள் மற்றும் உடந்தையாக இருந்த அமைச்சர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.’

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

 

Mk Stalin Tamil Nadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment