India’s first corona death: 72-year-old Karnataka man died
Tamil Nadu novel coronavirus COVID 19 latest updates : தமிழ்நாட்டில் தீவிரமடையும் கொரோனா வைரஸ் எச்சரிக்கை. இதுவரை 1086 பேருக்கு குவாரன்டைன் செய்யப்பட்டு, மருத்துவ பரிசோதனை மற்றும் கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேனியில் மாவட்டத்தில் இதற்காக தனியாக ஆராய்ச்சிக்கூடம் ஒன்றும் துவங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இதுவரையில் 39 நபர்களுக்கு பரவியுள்ளது. முதலில் 54 என்று இருந்த எண்ணிக்கை, கேரளத்தில் 5 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதும் 39 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க அதிதீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் தீவிர கண்காணிப்புக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.
Advertisment
Advertisements
தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை
ஓமன் நாட்டில் இருந்து தமிழகம் வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த என்ஜினியர் ஒருவருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அமெரிக்காவில் இருந்து தன்னுடைய உறவினர் ஒருவர் வீட்டு விசேசத்திற்கு கலந்து கொள்ள ஒருவர் தன் மகனுடன் வந்துள்ளார். அமெரிக்காவில் இருந்து கத்தார் தலைநகர் தோகா வழியாக இந்தியா வந்த அவர்களுக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேட்டி
தமிழக சுகாதாரத்துறையின் அதிகாரப்பூர்வ தகவல்களை தவிர மற்ற எந்த தகவல்களையும் நம்ப வேண்டாம் என்றும், குறிப்பாக சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருது இந்தியா திரும்பிய காஞ்சிபுரம் எஞ்சினியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில், 4ம் தேதி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு சோதனை நடத்தியதில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார் என்றும் அமைச்சர் அறிவித்தார். இதுவரையில் 68 நபர்களுக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு 55 பேருக்கு கொரோனா வைரஸ் இல்லை என்று சோதனை முடிவுகள் வெளியானதையும் அவர் மேற்கோள் காட்டினார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு அதிக சிரத்தையுடன் செயல்பட்டு வருகிறது. எனவே மக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் என்றும் அவர் கூறினார். மேலும் மாஸ்க் போன்றவைகளை மருத்துவமனை பணியாளர்கள் மட்டும் அணிந்தால் போதுமானது என்றும் அவர் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"