பத்திரப் பதிவுக்கான டோக்கன் நடைமுறை ரத்து: பதிவுத்துறை இயக்குனர் அறிவிப்பு

Property Registration Token: ஆன்லைன் டோக்கன் மூலம் பட்டா பதிவு செய்யப்படும் நடைமுறை வரும் நாட்களில் அனுமதிக்கப்படாது என்று பதிவுத்துறை இயக்குனர் தெரிவித்தார்.   

By: July 7, 2020, 2:45:15 PM

Tamil Nadu Property Online Registration: ஆன்லைன் டோக்கன் மூலம் பத்திரப் பதிவு செய்யும் நடைமுறையை வரும் நாட்களில் அனுமதிக்கப்படாது என்று பதிவுத்துறை இயக்குனர் தெரிவித்தார்.

முன்னதாக, பட்டா பதிவு மற்றும் பெயர்மாற்றம் செய்யும் விண்ணப்பங்களை ஆன்லைனில் அனுப்பி வைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்தது. பின்னர், ஸ்டார் 2.௦ என்ற பென்பொருள் மூலம் இந்த சேவையை தமிழக அரசு விரிவுபடுத்தியது. அதன்படி, ஆன்லைனில் பத்திரப் பதிவு சேவைக்கு டோக்கன் நடைமுறையை  அறிமுகப்படுத்தப்பட்டது. வங்கியில் வரிசை எண் ஒதுக்குவது போல், ஆவணப்பதிவு செய்யும் மக்களுக்கு வரிசை எண் ஒதுக்கப்பட்டது. வரிசை எண் அடிப்படையில் தான் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு நடைபெற வேண்டும்.

இதற்கிடையே, ஆவணப்பதிவுக்காக கோவிட்-19 தொடர்பாக பிரிக்கப்பட்ட ஒரு மண்டலத்திலிருந்து மற்றொரு மண்டலத்திற்கு பொதுமக்கள் பயணம் மேற்கொள்ள பதிவுத்துறையால் வழங்கப்பட்ட டோக்கன் மற்றும் எழுதிக்கொடுக்கப்பட்ட ஆவணம் ஆகியவை சரிபார்க்கப்பட்டு பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும் என்றும் மீண்டும் தங்கள் புறப்பட்ட இடத்திற்கு பயணம் செய்ய பதிவுத்துறையால வழங்கப்பட்ட ஆவண ரசீது சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது.

சென்னை, காஞ்சிபுரம்  மாவட்டங்களில் மக்கள் வேண்டுமென்றே, விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து, பதிவுத்துறையால் வழங்கப்பட்ட டோக்கன் மூலமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணப்பட்டனர்.  இ- பாஸ் கூட சமயத்தில் ரத்து செய்யப்பட்டாலும், பதிவுத்துறை இணையதளத்தில் விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்ப தாரர்களுக்கும் டோக்கன் வழங்கப்படுகிறது.

இதனால், இ- பாசுக்காக மட்டும் மக்கள் டோக்கன் பெற்று வருவது தெரியவந்தாதால், டோக்கன் வழங்கப்படும் நடைமுறை தற்காலிமாக ரத்து செய்யப்படுவதாக பதிவுத்துறை இயக்குனரகம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Tamil nadu online property registration token misused as e pass tnreginet gov in

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X