தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் கே.என்.நேரு தகவல்

Tamil News Update : தமிழகத்தில் வருமானம் மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் நகராட்சி, மாநகராட்சி தரம் உயர்த்தப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

Minister KN Nehru Said Panchayat and Municipality Upgrading : தமிழகத்தில் விரைவில் நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என்.நேரு வருவாய் மற்றும் மக்கள் தொகை அடிப்படையில், பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகள் அடுத்த கட்டத்திற்கு மேம்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே உள்ள பூனாம்பாளையம் கிராமத்தில் மியாவாக்கி முறையில் நடவு செய்யப்பட்டு வளர்க்கப்பட்டுள்ள குறுங்காட்டினை பார்வையிட்ட அமைச்சர் கே.என்.நேரு மக்கள் நடைபைதை பயிற்சிக்காக திறந்து வைத்தார்.  இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசு சார்பில் 10 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிட்ட தற்போதுவரை 6 லட்சம்மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக கூறினார்.

தொடர்ந்து நகராட்சி அமைப்புகளுக்காக தேர்தல் குறித்து பேசிய அவர், அதிமுக ஆட்சியின் கட்ந்த 2018-ம் ஆண்டு மாநகராட்சி தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் திமுக ஆட்சியில் புதிதாக 6 மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாகநராட்சி நகராட்சிகளை  வரிவுபடுத்தவும், புதிய நகராட்சிகளை  ஏற்படுத்தவும், மக்கள்தொகை மற்றும் வருவாய் அடிப்படையாக கொண்டு பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை நடத்துவதற்கு முன்பு அதிமுக அரசு மேற்கொண்ட உள்ளாட்சி அமைப்புகளின் வரம்புகளை தமிழக அரசு மறுஆய்வு செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து  ரூ 2,500 கோடி செலவில் சென்னை அழகுபடுத்துவதற்கான திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளஅமைச்சர்,  இந்த திட்டம் அடையார், கூவம் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயை மீட்டெடுப்பதற்கான ஒரு திட்டமாக இருக்கும் என்று கூறியுள்ளார். இந்த திட்டம் ஆரம்ப கட்டத்தில் இருந்தது. நிதி வழங்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஒரு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட வேண்டியிருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu panchayat municipality and corporation upgrading kn nehru said

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com