தீபாவளி வாழ்த்து செய்திகள் : இந்த வருடம் தீபாவளி நாளை நாடு முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு, தலைவர்கள் நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.தமிழக முதல்வர், துணை முதல்வர், ஆளுநர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மற்றும் துணை முதல்வரின் தீபாவளி வாழ்த்து செய்திகள்
"மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் மிகவும் சிறப்பு மிக்க பண்டிகையான தீபாவளி திருநாளை கொண்டாடும் அன்பிற்கினிய மக்கள் அனைவருக்கும் எங்களின் உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள் “ என்று வாழ்த்து அறிக்கை ஒன்றினை அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளார்களுமான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியும் மக்களுக்காக வெளியிட்டுள்ளனர்.
விஜயகாந்தின் தீபாவளி வாழ்த்துகள்
அநீதி அழிந்து நீதி தழைத்திட அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் என்று, தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
ஆளுநரின் வாழ்த்து செய்தி
தீபாவளிப் பண்டிகை, அனைத்து குடும்பங்களுக்கும் ஒளியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும் என்று கூறி வாழ்த்து செய்திகளை பதிவு செய்திருக்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். ஒளியையும் ஏற்படுத்தட்டும்; இத்திருநாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அவரின் வாழ்த்து செய்தியில் கூறியிருக்கிறார்.
டிடிவி தினகரனின் வாழ்த்து செய்திகள்
தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையை உவகையுடன் கொண்டாடும் அனைவருக்கும் இதயம் கணிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன்.
அன்புமணி ராமதாஸ் வாழ்த்து செய்திகள்
வெளிச்சத்தின் திருவிழாவான தீப ஒளித் திருநாளை கொண்டாடும் உலக மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்
தீபாவளி வாழ்த்து செய்திகள்
மேலும் பல்வேறு கட்சியின் தலைவர்கள் தங்களின் வாழ்த்து செய்திகளை மக்களுக்குத் தெரிவித்துள்ளனர்.