ரேஷன் கார்டு குடும்பத் தலைவி படம்… அலைமோதும் மக்கள்… அரசு தெளிவுபடுத்துமா?

Ration Card For Government incentives : தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஊக்கதொகை குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tamilnadu Ration Card Incentive Update : ரேஷன் அட்டைகளில் குடும்ப தலைவியின் படம் இருந்தால் மட்டுமே, மாதாந்திர உதவித்தொகை கிகைடகும் என்று பரவி வரும் தகவலால் ரேஷன் அட்டையில் குடும்ப தலைவியின் புகைப்படத்தை மாற்ற நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் மனுக்கள் குவிந்து வருகின்றனர்.  

தமிழகத்தில் புதிதாக பதவியேற்ற திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் பெண்களை குறி வைத்து பல்வேறு திட்டங்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டது. அதில் முக்கியமாக நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற திட்டத்தை அமல்படுத்தியதை தொடர்ந்து, அடுத்து குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் அரசின் இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த திட்டத்தில் பயன்பெற வேண்டுமானால், ரேஷன் அட்டையில் குடும்ப தலைவியின் புகைப்படம் இருக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் தகவல் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த பலரும் தங்களது குடும்ப அட்டையில், குடும்ப தலையின் புகைப்படத்தை மாற்ற கோரி ஆன்லைன் மற்றும் நேரடியாகவும் மனுக்கள் அளித்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த திட்டம் குறித்து முழுமையான விபரங்களை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து அரசு முறையான அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் சுமார் 2 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் அரிசி அட்டை, சர்க்கரை அட்டை, அடையாளத்துக்கு மட்டும் பயன்படுத்தும் அட்டை என 5 வகை அட்டைகள் உள்ளன. இதில் பி.ஹெச்.ஹெச்., பி.ஹெச்.ஹெச்.ஒய் ஆகிய அட்டைகள் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பம் என்பதை குறிப்பதாகும். இந்நிலையில், குடும்ப தலைவிகளுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ரேஷன் அட்டையில் குடும்ப தலைவி படம் இருந்தால் மட்டும்தான் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும் என்று தகவல் வெளியானது.

இதனால் ரேஷன் அட்டையில் குடும்ப தலைவர் புகைப்படம் இருப்பவர்கள், அதில் குடும்ப தலைவியின் புகைப்படம் மாற்றுவதற்காக தமிழகம் முழுவதும் ஏராளமான மக்கள் தங்களது குடும்ப அட்டையில் குடும்ப தலைவியின் புகைப்படத்தை மாற்றுவதற்கான ஆன்லைன் முறையிலும், நேரடியாக வட்டாச்சியர் அலுவலகத்திலும் குவிந்து வருகின்றனர். இதனால் அரசின் குடும்ப அட்டை தொடர்பாக தகவல்களை கொடுக்கும் இணையதளம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் தற்போது கொரோனா தொற்று பாதிப்பையும் பொருட்படுத்தாமல் மக்கள் வட்டாச்சியர் அலுவலகத்தில் குவிந்து வருவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டம் குறித்து அரசு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், அதிகாரிகளும், அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் இந்த திட்டம் செயல்படும் என்றே கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அரசு இந்த திட்டம் குறித்து தெளிவான அறிவிப்பை வெளியிடால் மட்டுமே மக்கள் மத்தியில் உள்ள குழப்பங்கள் நீங்கும், கொரோனவையும் பொருட்படுத்தாமல் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் மக்களின் எண்ணிக்கையும் குறையும், அதிகாரிகளுக்கும் பணிச்சுமை குறையும் என்று பல்வேறு தரப்பினரும் கூறி கூறி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu people make correction on ration card for government incentives

Next Story
பாரதியார் பல்கலைக்கழகம்: துணை வேந்தர் அறையில் பாஜகவில் இணைந்த பதிவாளர்; சர்ச்சை!Bharathiyar University, coimbatore, Bharathiyar University Registrar joined in BJP, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை, துணை வேந்தர் அறையில் பாஜகவில் இணைந்த பதிவாளர், Bharathiyar university registrar joined in BJP controversy, Bharathiyar University Vice Chancellor
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com