மனிதர்கள் இடையே ஒருபோதும் சனாதன தர்மம் தீண்டாமையை வலியுறுத்தவில்லை என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணி ராகவேந்திரா மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றுள்ளார், அதில் அவர்:
"தமிழ்நாடு புனிதமான நிலம், பல ஆண்டுகளாக புனிதர்களும் மகான்களும் வாழ்ந்த நாடு. சனாதன தர்மம் உருவாக காரணமாக இருந்த நிலம் தமிழ்நாடு. சனாதன தர்மம் தொடங்க தமிழ்நாடு முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்தியாவுக்கு அறிமுகம் தேவைப்படுகிறது, ஆனால் பாரதம் என்பதற்கு அறிமுகம் தேவையில்லை.
பாரத்தையும் சனாதனத்தையும் பிரிக்க முடியாது. இரண்டையும் ஒன்றாக தான் பாக்க முடியும். சனாதன தர்மம் மக்களை பிரிக்கிறது என்றால் அது தவறு. சனாதன தர்மம் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று கூறுகிறது. சனாதத்தில் பிரிவுகள் உள்ளது. வேறுபாடுகள் இல்லை. இரண்டிற்கு வித்யாசம் உள்ளது. சமஸ்கிருதத்தில் இருந்து தான் கலாச்சாரம் வருகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் சனாதனத்தை உலகம் ஏற்கும்", என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil