தீபாவளி பண்டிகை வருவதற்கு சில நாட்களே உள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்வது, பொருட்கள் வாங்குவது என்று ஆரவாரத்துடன் இருக்கின்றனர்.
இந்த நிலையில், தீபாவளி அன்று பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்கவும் வெடிக்கவும் அனுமதி என்று சென்னை காவல் துறை அறிவித்துள்ளது.

வருகின்ற அக்டோபர் 24 ஆம் தேதி, பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க காலை 6-7 மணி மற்றும் இரவு 7-8 மணி என இரண்டு நேரங்களை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கொடுத்துள்ளது.
மெழுகுவர்த்தி மற்றும் எண்ணெய் விளக்குகளுக்கு அருகில் பட்டாசுகளை வைப்பதையும், சமையலறைகளில் அடுப்பிற்கு அருகில் ஈரமான பட்டாசுகளை உலர்த்துவதையும் பொதுமக்கள் தவிர்க்குமாறு அறிவுறுத்துகின்றனர்.
125 டெசிபலுக்கு மேல் ஒலி எழுப்பும் பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குடிசைகள் அல்லது பல மாடி குடியிருப்புகளுக்கு அருகில் ராக்கெட் பட்டாசுகளை வெடிக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
"பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள மாணவர்களுக்கு தீ விபத்துகள் மற்றும் பட்டாசு காயங்களின் தீவிரத்தை கற்பித்து, பாதுகாப்பாக வெடிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்" என்று காவல்துறை ஆலோசனை கூறுகிறது.
தீ விபத்துகள் ஏற்பட்டால், பொதுமக்கள் காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையை அழைக்க 112 உதவி எண்ணிலும், 108 மருத்துவ அவசர உதவி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
தமிழகத்தில் பட்டாசு உற்பத்தி தொழில் பாதிப்படையும் என்பதால் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டாம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை எழுதிய கடிதத்தில், "கடந்த ஆண்டு விடுத்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்த வேண்டும். விதிமுறைகளுக்கு உட்பட்டு பட்டாசு விற்பனையை அனுமதிக்குமாறு நான் உங்களை மனப்பூர்வமாக கேட்டுக்கொள்கிறேன். வேறு எந்த மாநிலத்திலும் பட்டாசுக்கு முழுத் தடை விதிக்காத நிலையில், சிவகாசியைச் சுற்றியுள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்பதால் பட்டாசுகளை தடை விதிக்கவேண்டும்", என்று எழுதினார்.
பசுமை பட்டாசுகள் அறிவியல் பூர்வமாக உருவாக்கப்பட்டு உரிமம் பெற்ற வணிகர்கள் மூலம் விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால் அவற்றிற்கு அனுமதி என்று காவல்துறை அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil