தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு, அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி நடைபெற நீதிபதி உத்தரவளித்திருந்தார். அதனை, தற்போது மறு ஆய்வு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கலை தமிழக காவல் துறை தொடுத்துள்ளனர்.
கடந்த 22ஆம் தேதி, ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
ஆனால் இன்று ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்ததால் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக தகவல் பரிமாறப்படுகிறது.
இதை தொடர்ந்து, ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தரப்பில் சீராய்வு மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், "மாநிலத்தில் மத உணர்வுகளைத் தூண்டும் பல்வேறு நிகழ்வுகள் சமீபத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ள அன்று சமய நல்லிணக்க பேரணி என்று சில அமைப்புகள் ஊர்வலம் மனித சங்கிலி போன்றவற்றை நடத்த அனுமதி கோரியுள்ளது.
எனவே, ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும்" என்று மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil