Advertisment

தமிழக போலீஸ் ஆன்லைன் ஓவியப் போட்டி: மாவட்டம் தோறும் 20 பேருக்கு பரிசு

Drawing Competition By TN Police: தமிழக காவல்துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு சார்பில், ஊரடங்கு காலத்தில் குழந்தைகளுக்கு ஆன்லைனில் கொரோனா விழிப்புணர்வு ஓவியப் போட்டியை அறிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tn police drawing competition, Tamil nadu police drawing competition, tamil nadu police drawing competition for students, drawing competition for students, drawing competition by tn police, tn police online drawing competition, தமிழ்நாடு போலீஸ் ஓவியப் போட்டி, தமிழக போலீஸ் ஆன்லைன் ஓவியப் போட்டி, மாணவர்களுக்கு தமிழ்நாடு போலீஸ் ஓவியப்போட்டி, கொரோனா வைரஸ் ஓவியப்போட்டி, coronavirus lockdown drawing competition, corona virus lockdown drawing competition tn police

tn police drawing competition, Tamil nadu police drawing competition, tamil nadu police drawing competition for students, drawing competition for students, drawing competition by tn police, tn police online drawing competition, தமிழ்நாடு போலீஸ் ஓவியப் போட்டி, தமிழக போலீஸ் ஆன்லைன் ஓவியப் போட்டி, மாணவர்களுக்கு தமிழ்நாடு போலீஸ் ஓவியப்போட்டி, கொரோனா வைரஸ் ஓவியப்போட்டி, coronavirus lockdown drawing competition, corona virus lockdown drawing competition tn police

TN Police Drawing Competition For Students: தமிழக காவல்துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு சார்பில், ஊரடங்கு காலத்தில் குழந்தைகளுக்கு ஆன்லைனில் கொரோனா விழிப்புணர்வு ஓவியப் போட்டியை அறிவித்துள்ளது.

Advertisment

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், குழந்தைகள், பெண்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். அவர்களுக்கு தமிழக காவல்துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு சார்பில், ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஓவியம் மற்றும் கோலப்போட்டி ஆன்லைனில் நடத்துவதை அறிவித்துள்ளது. இந்தப் போட்டிகளில் 4 வயது முதல் 16 வயது வரை உள்ள குழந்தைகள் கலந்து கொள்ளலாம்.

தமிழக காவல் துறை அறிவித்துள்ள குழந்தைகளுக்கான போட்டியில் 4 முதல் 10 வயது வரை, 11 முதல் 16 வயது வரை என இரண்டு பிரிவுகள் உள்ளன. ஓவியப்போட்டியில் கொள்ள விரும்பும் குழந்தைகள், ஏ-4 சைஸ் அட்டையில் ஓவியம் வரைந்து அதைப் புகைப்படம் எடுத்து காவல்துறை அறிவித்துள்ளமின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். இந்த போட்டியில் கலந்துகொள்பவர்களை, ஒரு மாவட்டத்தில் ஒவ்வொரு பிரிவுக்கும் 20 பேர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் பெண்களுக்கான ஓவியப்போட்டிக்கு படைப்புகளை படம் எடுத்து அனுப்ப வேண்டிய கடைசித் தேதி மே.3 , 2020. போட்டிக்கான படங்களை TNPolice.rangolicontest@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு பெயர், வயது, தொடர்பு எண், முகவரி, மாவட்டம் உள்ளிட்ட விவரங்களை இணைத்து அனுப்ப வேண்டும். தனிப்பட்ட போட்டியாளர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். இந்தப் போட்டிக்கு ஒரே கட்டமாகத்தான் தேர்வு நடக்கும். போட்டி குறித்த சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள: 97909 68326, 95000 98733 என்ற எண்களுக்குத் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

குழந்தைகள் பங்கேற்கும் ஓவியப் போட்டியில் பெற்றோர் பெயர், பங்கேற்கும் குழந்தையின் பெயரை இணைத்து அனுப்ப வேண்டும். வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்குப் பரிசுப் பொருள் வீட்டுக்கே அனுப்பப்படும்.

குழந்தைகளுக்கான ஓவியப்போட்டிக்கான நிபந்தனைகள்:

GO CORONA GO' எனும் கருப்பொருளில் நடக்கும் இந்தப் போட்டிக்கு அனுப்பும் படங்கள், ரங்கோலி மற்றும் கோலப்படங்கள் அனைத்தும்,

*கருப்பொருளின் ஆழம் மற்றும் அடிப்படையுடன் படம் இருக்க வேண்டும்.

* விரிவாகவும் & முழுமையாகவும் இருக்க வேண்டும்

* வண்ணக்கலவை மற்றும் கோரும் விஷயம் சரியாக இருக்க வேண்டும்.

* படைப்பாற்றல் மற்றும் புதுமையுடன் இருக்க வேண்டும்.

இந்த போட்டிகள் குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி ரவி கூறியதாவது: “தமிழக காவல்துறையினர் ஊரடங்கு நேரத்தில் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்குப் பொதுமக்களும் தங்களுடைய ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் தமிழக காவல்துறை சார்பாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஓவியப் போட்டி வைத்துள்ளோம். இந்தப் போட்டியில் 4 வயது முதல் 16 வயது வரை உள்ள குழந்தைகள் கலந்துகொள்ளலாம். அதில் 4 முதல் 10 வயது வரை, 11 முதல் 16 வயது வரை என இரு பிரிவுகள் உள்ளன. இரண்டு பிரிவுகளுக்கும் ஓவியப்போட்டி நடைபெறும். இதில் ஒரு மாவட்டத்தில் ஒவ்வொரு பிரிவுக்கும் 20 பரிசுகள் வழங்கப்படும்.” என்று கூறினார்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment