சென்னை மெரினா கடற்கரை சாலையில் கார் மோதி விபத்துக்குள்ளான காவல் உதவி ஆய்வாளர் சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டுசெல்லும் வழியல் இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக காவல்துறையில் தொழில்நுட்ப காவல் உதவி ஆய்வாளராக வண்டலூரில் பணியாற்றி வருபவர் பிரசன்னா. விழுப்புரம் மாவட்டம் கோலியனூரை சேர்ந்தவர் இவர் நேற்றிரவு சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, அசுர வேகத்தில் வந்த எஸ்.யூ.வி. ரக கார் ஒன்று, காவல் உதவி ஆய்வாளர் பிரச்சன்னா மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரச்சன்னாவை மீட்ட காவலர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை சிகச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே மரணமடைந்தார். தமிழக காவல்துறையில் இந்த மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவலர் மீது மோதிய கார் உரிமையாளர் ராஜ்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையில், கார் உரிமையாளர் வடபழனியில் உள்ள தனது இல்லத்திலிருந்து அடையாறு நோக்கி சென்றுகொண்டிருநதபோது இந்த விபத்து நேர்ந்த்தாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த விபத்து தற்செயலாக நடந்த விபத்தா அல்லது வேறு காரணம் ஏதேனும் உள்ளதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் உதவி ஆய்வாளர் பிரச்சன்னாவின் பிரேத பரிசோதனை முடிந்தபின் அவரது உடல் அவரது சொந்த ஊரான கோலியனுருக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil