/tamil-ie/media/media_files/uploads/2020/06/template-2020-06-01T220339.183.jpg)
corona virus, lockdown, Tamil nadu, police, thirupathurm SP, Tn Police, Suresh raina, twitter, wishes
திருப்பத்தூர் எஸ்.பி விஜயகுமாருக்கு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மத்தியிலும் திருப்பத்தூரில் காவல் நிலையங்களில் அளிக்கப்படும் புகார்கள் முறையாக விசாரிக்கப்படுவதை உறுதி செய்ய FEEDBACK CALL தொடங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட எஸ்.பி விஜயகுமார் கூறுகையில், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட 72 மணி நேரத்தில் அவர்களை தொடர்பு கொண்டு முறையாக புகார் ஏற்கப்பட்டதா? அது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டதா? என்று அவர்களிடம் கருத்து கேட்கப்படும்.
புகார் அளித்தவர்களின் கருத்துகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இதன் மூலம் குடிமக்கள் மீதான போலீசாரின் பொறுப்பும், அக்கறையும் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
சுரேஷ் ரெய்னா வாழ்த்து
Wonderful initiative by @sp_tirupathur. This will surely enable the police to work on refining the processes further & be more reaponsive towards the citizens. https://t.co/tssW7536Iy
— Suresh Raina???????? (@ImRaina) June 1, 2020
திருப்பத்தூர் எஸ்.பி விஜயகுமாரின் இந்த முயற்சிக்கு கிரிக்கெட் வீரர் ரெய்னா பாராட்டுகள் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில், “திருப்பத்தூர் எஸ்.பி அற்புதமான முயற்சியை தொடங்கி உள்ளார். இதன் மூலம் போலீசார் செயல்முறைகள் மேம்பட உதவுவதோடு குடிமக்களுக்கும் அதிக ஊக்கமளிக்கும்“ என குறிப்பிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வாழ்த்து
மக்கள் அளிக்கும் புகார் குறித்து புகார்தாரர்களிடம் கருத்துக்களை கேட்க FEEDBACK CALL தொடங்கியதற்காக எஸ்.பி.க்கு ரெய்னா டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். @TNGOVDIPRpic.twitter.com/fb3UMjgVmz— PIB in Tamil Nadu ???????? #StayHome #StaySafe (@pibchennai) June 1, 2020
ரெய்னாவின் வாழ்த்துச்செய்தியை PIB in Tamil தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.