ஆவடி, சிறப்பு காவலபடைப் பிரிவில் காவலராகப் பணியாற்றிவரும் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த சிவராஜ் என்பவர் தனது தளராத முயற்சியின் காரணமாக நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளி மாணவர்களுக்காக ஒதுக்கீட்டில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
நீட் பயிற்சி மையம் எதிலும் சேர்ந்து படிக்காமல் தனது உழைப்பின் மூலமாக நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ள காவலர் சிவராஜை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று (03-08-2023) சென்னையில் உள்ள தனது இல்லத்திற்கு அழைத்துப் பாராட்டி கௌரவித்தார்.
அப்போது, அவருக்கு ஸ்டெதஸ்கோப் மற்றும் ரத்த அழுத்தமாணியையும் பரிசாக அளித்தார். நீட் தேர்வின் மூலம் ஏழை-எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களும் பயிற்சி மையங்களின் உதவி இல்லாமல் மருத்துவராக முடியும் என்பதற்கு உதாரணமாக சிவராஜ் உருவாகி இருக்கிறார்.
மேலும், மருத்துவம் படிக்க விரும்பும் எண்ணற்ற அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாகவும் சிவராஜ் அவர்களின் முயற்சி அமைந்திருக்கிறது.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“