தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட மாணவி சோபியா நேற்று காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
விமானத்தில் தமிழிசை சௌந்தரராஜன் உடன் கனடாவில் படித்துக் கொண்டிருக்கும் சோபியா என்ற மாணவி பயணித்துக் கொண்டிருந்தார். கைது நடவடிக்கை பற்றிய முழுமையான செய்தியைப் படிக்க
தமிழிசை சௌந்தரராஜனைப் பார்த்து கோஷமிட்ட சோபியா
தமிழிசை சௌந்தரராஜனைப் பார்த்தவுடன் “பாஜக ஆட்சி ஒழிக, பாசிச ஆட்சி ஒழிக” என்று கோஷமிட்டு முழங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து விமான நிலையத்தில் தமிழிசைக்கும் சோபியாவிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நிகழ்ந்தது. பின்னர் தமிழிசை அளித்த புகாரின் பேரில் சோபியாவை சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிகழ்விற்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுடைய கடுமையான கண்டனத்தை பதிவிட்டுள்ளனர்.
திமுக கட்சித் தலைவர் முக ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பாஜகவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து ஒன்றினை பதிவிட்டிருக்கிறார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழிசையின் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அக்கழகத்தின் சார்பில் கண்டன அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று ட்வீட் செய்துள்ளார்.
தமிழ் திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் தன்னுடைய கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார்.
இயக்குநர் மற்றும் எழுத்தாளார் ராஜூமுருகன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்திக் வீடியோ ஒன்றினை பதிவு செய்து தன்னுடைய கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.