/indian-express-tamil/media/media_files/iEQvxZ87WmxoLmKc5dgJ.jpeg)
சீமான் அவர்களின் பொதுவாழ்வு சிறந்து நீடூழி வாழ உளமாற வாழ்த்துகிறேன்; எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, சீமானுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், திரைபிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், அன்பு சகோதரர், சீமான் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். சீமான் அவர்களின் பொதுவாழ்வு சிறந்து நீடூழி வாழ உளமாற வாழ்த்துகிறேன்,” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், “தன்னடையாளம் பேணுவதோடு பிறரடையாளம் போற்றவும் செய்து தனக்கென்றொரு அரசியல் முழங்கிவரும் அன்புச் சகோதரர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள், என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் சீமான் அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணிகளை தொடர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்,” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்புத் தம்பி சீமான் அவர்களுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டு வாழவும், அவருடைய நற்பணி சிறக்கவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.