/tamil-ie/media/media_files/uploads/2020/07/1-6.jpg)
Tamil Nadu private hospital asked patient's family members to pay 16 lakhs for covid19 treatment : சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் மனோகரன். மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வருகீறார். இவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னை நியூ ஆவடி சாலையில் அமைந்திருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் படிக்க : சீசனில் மட்டும் பரவும் தொற்று அல்ல கொரோனா, இன்னும் பேரலை இருக்கிறது: WHO
15 நாட்களுக்கு முன்பாக அனுமதிக்கப்பட்டார் அவர். அனுமதிக்கும் முன்பே கொரோனா நோயை குணப்படுத்த ரூ. 5 லட்சம் செலவாகும் என்று மருத்துவமனை நிர்வாகம் கூற அதனை ஏற்றுக் கொண்ட குடும்ப உறுப்பினர்கள் அதற்கு பணம் செலுத்தினார்கள். தீவிர சிகிச்சைக்கு பிறகு அவருக்கு கொரோனா நோய் குணம் அடைந்துள்ளது. இருப்பினும் இருதய கோளாறு அவருக்கு இருக்கிறது. அவரை வேறொரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறியுள்ளது அம்மருத்துவமனை. மேலும் அவரை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் என்றால் மேலும் 11 லட்சத்தை செலுத்த வேண்டும் என்றும் நிர்பந்தம் செய்துள்ளது மருத்துவமனை நிர்வாகம்.
அவரது மனைவி மற்றும் உறவினர்கள் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். 11 லட்சத்தை எப்படி செலுத்துவது என்று அவரது மனைவி கண்ணீர் விட்டு அழும் காட்சி வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 50க்கும் மேற்பட்ட உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் பிறகு மருத்துவமனை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.