/indian-express-tamil/media/media_files/R1sU102CEjRo7aTHpoUt.jpg)
Minister SS Sivasankar
பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் 2030 ஆண்டுக்குள் 30 சதவீத பேருந்துகள் மின்சாரமயம் ஆக்கபட்டிருக்கும், என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.
டெல்லியில் வியாழக்கிழமை (ஆக.8) நடந்த நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ’இந்தியாவின் ஆற்றல் மாற்றத்தில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறது. மேலும், போக்குவரத்துத் துறையில் டிகார்பனைசேஷன் செய்வதற்கான விரிவான முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்தியாவின் முன்னணி மின்சார வாகன உற்பத்தி மையமாக திகழும் தமிழ்நாடு, மேலும், ரூ.24,000 கோடி அளவில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலமாக 48,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும்.
புதுதில்லியில் நேற்று (08-08-2024) நடைபெற்ற "Climate & Sustainability Initiatives"-ஆல் நடத்தப்பட்ட "India's Road to Freedom: Charting India's EV-Evolution" இல் கலந்து கொண்ட போது. இந்நிகழ்வின்போது, "Climate & Sustainability Initiatives" நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர். pic.twitter.com/9AuAxKhleV
— Sivasankar SS (@sivasankar1ss) August 8, 2024
இந்த இலக்கை ஆதரிக்கும் வகையில், அரசு இயக்கும் பேருந்துகளை மின்மயமாக்குவதை தமிழ்நாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக, 2024-25 பட்ஜெட்டில், 3500 புதிய பேருந்துகளில், 500 மின்சார பேருந்துகள் வாங்குவது என முடிவு செய்யப்பட்டது.
மேலும் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் 2030 ஆண்டுக்குள் 30 சதவீத பேருந்துகள் மின்சாரமயம் ஆக்கபட்டிருக்கும்.
சமூக நீதியில் மட்டுமல்ல, பருவநிலை நீதியிலும் தமிழ்நாடு, நமது நாட்டிற்கு வழிகாட்டியாக திகழ்கிறது, என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.