2025-ம் ஆண்டில் 24 நாட்கள் பொது விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. விடுமுறை நாட்கள் 1881 ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2025 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே இந்த அரசாணை பொருந்தும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் மட்டும் எந்த ஒரு பொது விடுமுறையும் இல்லை.
2025 ஆம் ஆண்டுக்கான அரசு பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், எந்தக் கிழமைகளில் எத்தனை விடுமுறை என்பது குறித்தும், எந்த மாதத்தில் எத்தனை நாள் விடுமுறை என்பது குறித்தும் இங்குப் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டு அதிக பொது விடுமுறை கொண்ட மாதமாக ஜனவரி இருக்கிறது. அதே நேரத்தில், பொது விடுமுறை இல்லாத மாதமாக நவம்பர் மாதம் இருக்கிறது.
ஜனவரி மாதத்தில் புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள், குடியரசு தினம் ஆகியவை விடுமுறை நாட்களாக உள்ளன. பொங்கல் தொடர் விடுமுறையை ஒட்டி, வார இறுதிநாட்கள் இருப்பதால் கூடுதல் விடுமுறையும் கிடைக்க வாய்ப்புள்ளது.
2025-ல் எந்தக் கிழமைகளில் எத்தனை விடுமுறை?
ஞாயிறு - 3
திங்கள் - 3
செவ்வாய் - 3
புதன் - 4
வியாழன் - 6
வெள்ளி - 3
சனி - 2.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“