Advertisment

Tamil Nadu Rain Updates: கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை

Tamil nadu rain Updates-21-05-2024: இன்று மழை தொடர்பான உடனடி செய்திகளை இந்த லிங்கில் தெரிந்துகொள்ளலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rain kovai

Tamilnadu rain weather update live

Tamil nadu Rain Updates: தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. தொடர்ந்து வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.  

இன்று தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 • May 21, 2024 18:57 IST
  கனமழை: வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் மண், பாறைகள் சரிவு

  கனமழையால் கோவை மாவட்டம் வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் 2வது மற்றும் 3வது கொண்டை ஊசி வளைவுக்கு இடையில் சாலையில் மண், பாறைகள் சரிந்து விழுந்துள்ளன • May 21, 2024 18:30 IST
  கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை

  இன்று காலை முதல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வெயில் குறைவாகவும் வானம் மேகமூட்டத்துடனும் காணப்பட்டது. பிற்பகல் முதல் மாநகரம் மற்றும் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்யத் துவங்கியது.

  மாவட்டம் முழுவதும் பரவலாக மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் கனமழையும் தொடர்ச்சியாக பெய்து வருகிறது. குறிப்பாக போத்தனூர்,உக்கடம், ரயில் நிலைய சாலை,கவுண்டம்பாளையம், பீளமேடு, அவினாசி சாலை, நஞ்சுண்டாபுரம், ராமநாதபுரம், காந்திபுரம், சுந்தராபுரம், பட்டணம், விளாங்குறிச்சி, சேரன்மாநகர், சிட்ரா, சிங்காநல்லூர், வெள்ளலூர்
  ஆகிய பகுதிகளிலும் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, சூலூர் ஆகிய பகுதிகளிலும் பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. • May 21, 2024 17:05 IST
  அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

  “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, செங்கல்பட்டு, கடலூர், கரூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது” என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. • May 21, 2024 16:52 IST
  கோவையில் சுரங்கப்பாதையில் நீர் தேங்காமல் இருக்க குப்பைகளை அகற்றும் ஊழியர்கள்

  கோவையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், சுரங்கப்பாதையில் நீர் தேங்காமல் இருக்க நீரில் அடித்து  வரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்! • May 21, 2024 16:49 IST
  கனமழை எதிரொலி : மதுரையில் அரசு பொருட்காட்சி தேதி மாற்றம்

  மதுரை தமுக்கம் மைதானத்தில் நாளை தொடங்க இருந்த அரசு பொருட்காட்சி, கனமழை காரணமாக நாளை மறுதினம் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு • May 21, 2024 15:41 IST
  சென்னையில் பலத்த காற்றுடன் பரவலாக மழை!

  சென்னை சாந்தோம், மயிலாப்பூர், அடையாறு, எம்.சி.ஆர்.நகர், பட்டினப்பாக்கம், கிண்டி, உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. • May 21, 2024 15:39 IST
  தர்மபுரி பகுதிகளில் கனமழை

  தருமபுரி, நல்லம்பள்ளி, தொப்பூர், காரிமங்கலம், பாலக்கோடு, வெள்ளிச்சந்தை, பென்னாகரம், உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை! • May 21, 2024 15:38 IST
  ஏற்காட்டில் தொடரும் கனமழை : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

  ஏற்காட்டில் தொடர் மழை பெய்து வருவதால் அங்கு சில்லென்ற சூழல் நிலவி வருகிறது. ஆங்காங்கே திடீர் அருவிகளும் உருவாகியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி. • May 21, 2024 15:37 IST
  சேலம் பகுதிகளில் கனமழை

  சேலம் மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை  • May 21, 2024 14:45 IST
  தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

  நீலகிரி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை ,திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு • May 21, 2024 13:56 IST
  தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

  தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (மே 21) கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு

  நீலகிரி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் • May 21, 2024 13:37 IST
  நாளை 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

  நாளை (மே.22) தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், மே 23-ல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

  மேலும் 24-இல் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

  சென்னை வானிலை ஆய்வு மையம் • May 21, 2024 13:25 IST
  இயல்பை விட 9% கூடுதல் மழைப்பொழிவு

  தமிழ்நாட்டில் கோடை மழை இன்று காலை வரை இயல்பை விட 9% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் • May 21, 2024 12:36 IST
  கனமழை காரணமாக 11 பேர் உயிரிழப்பு

  தமிழ்நாட்டில் கனமழை காரணமாக கடந்த 5 நாட்களில் 11 பேர் உயிரிழப்பு

  கடந்த 24 மணி நேரத்தில் 12 கால்நடைகள் உயிரிழப்பு, 24 குடிசைகள் மற்றும் வீடுகள் சேதம்

  பேரிடர் மேலாண்மைத்துறை தகவல் • May 21, 2024 12:08 IST
  3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

  தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் • May 21, 2024 11:30 IST
  திற்பரப்பு அருவியில் குளிக்க தடை

  கனமழை காரணமாக திற்பரப்பு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 3வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. • May 21, 2024 11:29 IST
  மதுரையில் காய்ச்சல் பாதிப்பு

  மதுரையில் மழை காரணமாக இதுவரை 53 பேர் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  காய்ச்சல் பாதிப்பால்  நேற்று ஒரே நாளில் 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  மாவட்ட நிர்வாகம் தகவல் • May 21, 2024 10:39 IST
  குமரியில் கடல் சீற்றம்

  கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. கடல் கொந்தளிப்பால் கடற்கரையில் ஆபத்தான முறையில் குளித்த சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றும் காவல்துறை • May 21, 2024 10:38 IST
  தமிழ்நாட்டில் இன்று இடியுடன் கூடிய மழை

  சூறாவளி சுழற்சி மேலும் கிழக்கு நோக்கி நகர்வதால் மழையின் தீவிரம் இன்று சற்று குறைவாக இருக்கலாம். காற்றின் ஒருங்கிணைப்பு மத்திய தமிழ்நாட்டில் சில  இடங்களில் தீவிர இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்யும்.  • May 21, 2024 10:35 IST
  தமிழகத்தில் நாளை முதல் மழை குறையும்

  நாமக்கல், கரூர், திருச்சி சுற்றுவட்டார பகுதிகளில் 10-15 செ.மீ கனமழை பெய்தது.

  மத்திய தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இன்று கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. 

  மேற்கு தொடர்ச்சி மலை, மேற்கு மற்றும் தெற்கு தமிழக பகுதிகளில் இன்று மிதமானது முதல் சில கனமழை பெய்யும். தமிழகத்தில் நாளை முதல் மழை குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  • May 21, 2024 10:24 IST
  ரயிலுக்குள் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் அவதி

  கோவை - மயிலாடுதுறை ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலுக்குள் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் அவதி.  டீக்கப்பை வைத்து மழைநீர் ஒழுகாமல் சமாளித்த பயணிகள்- ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை  • May 21, 2024 10:00 IST
  முழு கொள்ளளவை எட்டிய சோத்துப் பாறை அணை

  கோடை மழையால் முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டிய சோத்துப்பாறை அணை. அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் மக்கள் ஆற்றில் குளிக்கவோ, கடக்கவோ வேண்டாம் என பொதுப் பணித்துறையினர் எச்சரிக்கை • May 21, 2024 08:42 IST
  தமிழகத்திற்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்

  தமிழகத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு. நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

  கேரளாவில் இன்றும், நாளையும் அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  • May 21, 2024 08:34 IST
  இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழை

  தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு 

  நாளை வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில் நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் எனவும் தகவல்.  • May 21, 2024 08:19 IST
  காற்றழுத்த தாழ்வு பகுதி: மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

  தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

  23, 24ம் தேதிகளில் வங்கக்கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால், மீனவர்கள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தல் • May 21, 2024 07:46 IST
  3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை

  சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு. 


  கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சியில் 13 செ.மீ கனமழை பதிவு. ராமநாதபுரம் தொண்டியில் 9.6 செ.மீ மழையும் சேலத்தில் 7.7 செ.மீ மழையும் பெய்துள்ளது.  • May 20, 2024 20:50 IST
  டெல்டா மாவட்டங்களில் கனமழை - தனியார் வானிலை ஆய்வாளர்

  திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், அரியலூர், கள்ளக்குறிச்சி, கரூர், தர்மபுரி, திருவண்ணாமலை, நீலகிரி, வால்பாறை, டெல்டா பகுதிகளிலும் மீண்டும் பெரும் புயல் வீசுகிறது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார் • May 20, 2024 20:41 IST
  திருச்சி, சேலத்தில் கனமழை; தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்

  திருச்சியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சேலத்திலும் கனமழை பெய்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மே மாதத்தில் திருச்சியில் பெய்யும் கனமழை இதுவாக இருக்க வேண்டும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார் • May 20, 2024 18:05 IST
  சேலத்தில் இடியுடன் கூடிய கன மழை

  சேலம் மாவட்டம் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம், சிங்கிபுரம், புத்திர கவுண்டன் பாளையம், குறிச்சி, காட்டு வேப்பிலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது • May 20, 2024 17:38 IST
  தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

  தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது • May 20, 2024 17:34 IST
  மீனவர்கள் வரும் 23ம் தேதிக்குள் கரைக்கு திரும்ப வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்

  ஆழ்க்கடலுக்குச் சென்றுள்ள மீனவர்கள் வரும் 23ம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது • May 20, 2024 17:15 IST
  ஊட்டியில் மழை; சுற்றுலா பயணிகள் அவதி

  நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்துள்ளனர் • May 20, 2024 15:28 IST
  புதுக்கோட்டையில் கனமழை 

  புதுக்கோட்டை நகரப் பகுதி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. 

    • May 20, 2024 15:00 IST
  கொடைக்கானல், மூங்கில்காடு ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு: மக்கள் கடும் அவதி 

  கொடைக்கானல் பகுதிகளில் 3 நாட்களாக பகல், இரவு நேரங்களில் பெய்து வரும் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், பள்ளங்கி கோம்பை மூங்கில்காடு அருகே உள்ள ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பணிகளுக்கு கூட வெளியே வர முடியாமல்  மலைக்கிராம மக்கள் தவித்து வருகிறார்கள். 

    • May 20, 2024 14:56 IST
  மதுரை, சோழவந்தானில் கனமழை

  மதுரை, சோழவந்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது.  • May 20, 2024 14:43 IST
  நாமக்கலில் கனமழை 

  நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சுற்றியுள்ள பட்டணம், வடுகம், புதுப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.  • May 20, 2024 14:42 IST
  மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

  ஆழ்க்கடலுக்குச் சென்றுள்ள மீனவர்கள் வரும் 23ம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.  • May 20, 2024 14:19 IST
  மதுரையில் கனமழை 

  மதுரை கோரிப்பாளையம், அண்ணாநகர், புதூர், மாட்டுத்தாவணி, நெல்பேட்டை, சிம்மக்கல், தல்லாகுளம் ஆகிய பகுதிகளில் கனமழை  பெய்து வருகிறது

    • May 20, 2024 14:17 IST
  7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

  திருப்பூர், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  • May 20, 2024 13:40 IST
  வங்கக்கடலில் புதிக காற்றழுத்த தாழ்வுப்பகுதி : தமிழ்நாட்டுக்கு கனமழை எச்சரிக்கை

  தென்மேற்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த தாழ்வு பகுதி வடகிழக்கு நோக்கி நகர்ந்து தாழ்வு மண்டலமாக வலு பெறும் என்றும், தமிழ்நாட்டில் 23-ந் தேதி வரை கனமழை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  • May 20, 2024 13:02 IST
  கனமழை எச்சரிக்கை : "2.66 கோடி செல்போன்களுக்கு பறந்த குறுஞ்செய்தி

  மார்ச் 1 முதல் நேற்று வரை இயல்பை விட 17 விழுக்காடு குறைவாக மழை பெய்துள்ளது. வரும் 23ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

   "குமரி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், தேனி மாவட்ட மக்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், குமரி, நெல்லை, கோவை, நீலகிரி மாவட்டங்களில், 10 பேரிடர் மீட்பு குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன" என  பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது. • May 20, 2024 12:55 IST
  கொடைக்கானலில் கனமழை : வெள்ளத்தில் சிக்கி கிராம மக்கள் தவிப்பு

  கொடைக்கானல் மலைப் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கோம்பைக்காடு அருகே மூங்கில் காடு என்ற கிராமத்தில் உள்ள ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிராம மக்கள் ஆற்றைக் கடந்து வந்துதான் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியும் என்பதால், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சிக்கித் தவித்து வருகின்றனர். • May 20, 2024 12:27 IST
  கனமழை எதிரொலி : மக்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மீட்புக்குழு எச்சரிக்கை

  மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர் வீழ்ச்சிகள் மற்றும் அதனை ஒட்டிய இடங்களுக்கு செல்ல வேண்டாம் என பேரிடர் மீட்பு குழுவினர் சார்பில் பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. • May 20, 2024 11:45 IST
  மதுரையில் கொட்டித் தீர்த்த கனமழை : குடியிருப்பு பகுதியில் வெள்ளம்

  மதுரையில் பெய்து வரும் கனமழை காரணமாக மானகிரி கபிலர் தெருவில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பாலம் கட்டுமான பணி நடைபெறும் நிலையில், கண்மாய் வழித்தடம் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கண்மாயில் கலக்க வேண்டிய மழை நீர் குடியிருப்புகளில் புகுந்ததால் மக்கள் பாதிப்பு தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், மழை நீரை விரைந்து வெளியேற்றினர் • May 20, 2024 11:28 IST
  திற்பரப்பு அருவியில் நீர் வரத்து அதிகரிப்பு : பொதுமக்களுக்கு தடை

  கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அருவியில் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. • May 20, 2024 10:26 IST
  குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிப்பு

  குற்றால அருவிகளில் 4வது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் குற்றாலம் பேரருவி,  ஐந்தருவி,  பழைய குற்றால அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் குறைந்து சீராக கொட்டுகிறது.  இருப்பினும், தென்காசி மாவட்டத்திற்கு நேற்றும் இன்றும் அதி தீவிர கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்பதால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. • May 20, 2024 09:50 IST
  மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து போன்ற பகுதிகளில் பரவலாக மழை

  நெல்லை: மேற்கு தொடர்ச்சி மலை மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து போன்ற பகுதிகளில் மழை பெய்து வருகிறது; மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. • May 20, 2024 09:20 IST
  தமிழகம், கேரளாவுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

  தமிழகம், கேரளாவுக்கு இன்று முதல் வருகிற 22ஆம் தேதி வரை அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை • May 20, 2024 09:16 IST
  4 மாவட்டங்களில் இன்று முதல் 3நாட்கள் அதி கனமழைக்கு வாய்ப்பு

  தமிழ்நாட்டில் தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று முதல் 3நாட்கள் அதி கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் • May 20, 2024 08:42 IST
  4 மாவட்டங்களுக்கு இரண்டு நாட்கள் வரை ரெட் அலர்ட் எச்சரிக்கை

  கன்னியாகுமரி, தேனி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை நீடிக்கும். சென்னை வானிலை மையம் (RMC) அடுத்த இரண்டு நாட்களுக்கு நான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment