வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளதால், தமிழகத்தில் மேலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக டிசம்பர் மாதங்களில் தமிழ்நாட்டில் கனமழை பெய்து, சென்னை கடுமையாக வெள்ள பாதிப்பை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் சென்னை மக்கள், ஒரு பயத்துடனே இருந்து வரும் நிலையில், நடப்பு ஆண்டில், அக்டோபர் மாதமே மழை தொடங்கி, சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக சென்னையில் பல இடங்களில் வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்புக்காக முன்னேச்சரிக்கை நடவடிக்ககைளில் தமிழக அரசு தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், வெள்ள பாதிப்பு குறித்த புகார் அளிக்க, தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்க கடலில் ஏற்பட்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நிலைகொண்டிருந்திருந்தால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில், கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனிடையே தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்பு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளதாகவும், நாளை மறுநாள் சென்னை அருகே நெல்லூர் – புதுச்சேரி இடையெ கரையை கடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கே தென் கிழகில், சுமார் 490 கி.மீ தொலைவில் நிலைகொண்டிருப்பதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது. கரையை கடக்கும்போது சுமார் 35 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“