Advertisment

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், விருதுநகர், நாமக்கல், ஈரோடு, சேலம் உள்பட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Chennai Rain

Tamil News updates

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (ஆகஸ்ட் 3) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை செய்யக்கூடும்.

Advertisment

தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, கோயம்புத்தூர், விருதுநகர், நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, மதுரை, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 4 வானிலை நிலவரம்

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை செய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும். தென்காசி, ஈரோடு, விருதுநகர்
மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலி, வேலூர் மற்றும் ராணிப்பேட்டையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஆகஸ்ட் 5 வானிலை நிலவரம்

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை செய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் மழை பொழிவு (செ.மீ)

திருத்தணி (திருவள்ளூர்) 11, சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) 9, பாலக்கோடு (தர்மபுரி), மாரண்டஹள்ளி ( (தர்மபுரி) தலா 7, தளி (கிருஷ்ணகிரி), வாணியம்பாடி(திருப்பத்தூர்), தேக்கடி(தேனி), ஏற்காடு (சேலம்) ஆகிய பகுதிகளில் தலா 1

மீனவர்களுக்கான எச்சரிக்கை

ஆகஸ்ட் 3,4

குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

லட்சத்தீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகள் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Rain In Tamilnadu Chennai Rains
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment