‘தமிழகத்தில் 10ம் தேதி முதல் டமால் டுமீல், ரெட் தக்காளி!’ – தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்

ஆகஸ்ட் 10ம் தேதிக்கு பிறகு அனைத்தும் சிறப்பான நாளாக அமையப் போகிறது. ஆகஸ்ட் மாதத்தில் 10ம் தேதியிலிருந்து 20ம் தேதி வரை நீங்கள் நிறைய டமால் டுமீல்கள் மற்றும் ரெட் தக்காளி ஸ்பெல்களை பார்க்கலாம்

Chennai weather latest updates

தமிழகத்தில் மழை எப்போது பெய்யத் தொடங்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் பிரதீப் ஜான் இன்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், “காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள், கேரளா மற்றும் தமிழக மலைத் தொடர் பகுதிகளில் (வால்பாறை, நீலகிரி, பெரியார் நீர்ப்பிடிப்பு, நெல்லை மலைத் தொடர், கன்னியாகுமரி) வரும் திங்கட்கிழமை முதல் மழை அளவு அதிகரிக்கும்.


சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளை உள்ளடக்கிய KTC மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் வெப்ப சலனத்தால் மழை உருவாகும். அங்கும் இங்குமாக மழை பெய்யத் தொடங்கும். ஆனால், ஆகஸ்ட் 10ம் தேதிக்கு பிறகு அனைத்தும் சிறப்பான நாளாக அமையப் போகிறது. ஆகஸ்ட் மாதத்தில் 10ம் தேதியிலிருந்து 20ம் தேதி வரை நீங்கள் நிறைய டமால் டுமீல்கள் மற்றும் ரெட் தக்காளி ஸ்பெல்களை பார்க்கலாம். யார் யாரெல்லாம் மழை நீர் சேமிப்புக்கு தயாராகவில்லையோ, அவர்களுக்கு அடுத்தக் கட்ட மழையில் சேமித்துக் கொள்ள ஒருவார காலம் நேரமிருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu rains chennai rains rain in tamil nadu rain in chennai tamil nadu weatherman

Next Story
நீட் தேர்வு: தமிழக அரசின் நிலைப்பாடு குழப்பத்தை நோக்கி நகர்கிறதா?NEET, NEET exam, Tamilnadu Government stand, President Withheld, நீட் தேர்வு, தமிழக அரசு நிலைப்பாடு, resolution of Tamilnadu government
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express