கனமழை பெய்து வருவதால் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.25) விடப்பட்டுள்ளது. வழக்கமான அட்டவணைப்படி காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் கிண்டி, அடையாறு, நுங்கம்பாக்கம், டி நகர், சேத்துப்பட்டு, வில்லிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கும், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களிலும் லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கனமழை பெய்து வருவதால் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.25) விடப்பட்டுள்ளது.
வழக்கமான அட்டவணைப்படி காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் வரும் 26-ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த நாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் நிலவக்கூடும் என்று, வானிலை ஆய்வு மைய தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“