Tamil Nadu Weather Update Live: பருவமழை பாதிப்பு - கிருஷ்ணகிரியில் உதவி எண்கள் அறிவிப்பு

TN Rain forecast Live Updates Today: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் வானிலை எச்சரிக்கைகள், மழையின் தீவிரம், பள்ளி-கல்லூரி விடுமுறைகள் குறித்த அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பதிவுடன் இணைந்திருங்கள்.

TN Rain forecast Live Updates Today: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் வானிலை எச்சரிக்கைகள், மழையின் தீவிரம், பள்ளி-கல்லூரி விடுமுறைகள் குறித்த அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பதிவுடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rain

TN Weather Live Updates Today: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளது. மேலும் வங்ககடலில் உருவான காற்றழுத்த பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றதால் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இன்றும் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Advertisment

சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். அதே போல சேலம், புதுக்கோட்டை, பெரம்பலூர், நாமக்கல், கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், திருச்சி, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, சிவகங்கை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Oct 22, 2025 21:22 IST

    கொள்ளிடம் ஆற்றில் நீர் திறப்பு

    காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை பெய்வதால் கொள்ளிடம் ஆற்றில் நீர் திறப்பு 30,000 கன அடி வரை அதிகரிக்கக் கூடும் என்பதால், ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க கடலூர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 



  • Oct 22, 2025 21:21 IST

    வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழக்கும் - வானிலை மையம் தகவல்

    வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  



  • Advertisment
    Advertisements
  • Oct 22, 2025 20:51 IST

    தென்பெண்ணை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

    திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 15,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 15,000 கன அடி நீர் திறக்கப்பட்டதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க நீர்வளத் துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



  • Oct 22, 2025 20:21 IST

    தருமபுரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

    தருமபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு நாளை 23.10.2025 (வியாழக்கிழமை) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.



  • Oct 22, 2025 19:52 IST

    சாத்தனூர் அணையில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு 15,000 கன அடியாக அதிகரிப்பு!

    சாத்தனூர் அணையில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு 9000 கன அடியில் இருந்து 15,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க நீர்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



  • Oct 22, 2025 19:50 IST

    கனமழை எதிரொலி - ஏற்காடு செல்ல தடை

    கனமழையால் ஏற்காடு செல்ல கனரக சுற்றுலா வாகனங்களுக்குத் தடை விதித்து சேலம் ஆட்சியர் அறிவித்துள்ளார். இன்று இரவு 7 மணி முதல் வரும் 24 ஆம் தேதி வரை இத்தடை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Oct 22, 2025 19:29 IST

    வீடு இடிந்து 4 பேர் காயம்

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கனமழை காரணமாக ரெட்டிக்குப்பம் பகுதியில் பழமையான தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் 12 வயது சிறுமி உள்பட நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கிய நால்வரையும் தீயணைப்புத்துறையினர் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



  • Oct 22, 2025 19:27 IST

    ஏ.என்.குப்பம் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு

    தொடர் மழையால் திருவள்ளூர் ஏ.என்.குப்பம் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் அதில் ஆபத்தை உணராமல் மக்கள் குளித்து வருகின்றனர்.



  • Oct 22, 2025 19:26 IST

    இயல்பை விட 82% கூடுதலாக பெய்த பருவமழை - வானிலை ஆய்வு மையம்

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்றுவரை இயல்பைவிட 82% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை விடுத்துள்ளது. சென்னையில் இயல்பைவிட 69% கூடுதலாக பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Oct 22, 2025 19:09 IST

    தருமபுரியில் கனமழையால் - வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதி 

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மாநிலம் முழுதும் பவரலாக மழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. முக்கிய அணைகளின் நீர்மட்டமும் தொடந்து அதிகரித்து வருகிறது. இதனிடையே, தருமபுரியில் பெய்து வரும் கனமழையால் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதியுற்று வருகிறார்கள். 



  • Oct 22, 2025 18:55 IST

    கனமழையில் இடிந்து விழுந்த வீடு - 12 வயது சிறுமி உள்பட 4 பேர் பலத்த காயம்

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கனமழை காரணமாக ரெட்டிக்குப்பம் பகுதியில் பழமையான தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் 12 வயது சிறுமி உள்பட நான்கு பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய நால்வரையும் தீயணைப்புத்துறையினர் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்



  • Oct 22, 2025 18:40 IST

    தருமபுரியில் பருவமழை பாதிப்பு - உதவி எண்கள் அறிவிப்பு

    வடகிழக்கு பருவமழையையொட்டி பேரிடர் பாதிப்பு கட்டுப்பாட்டு அறைக்கு புகாரளிக்க உதவி எண்களை தருமபுரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.  தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் - 1077, 04342-231077, 231500 மற்றும் 04342-230067 என்ற எண்ணிலும் புகார் அளிக்கலாம். அவசரத் தேவைகள், உதவிகள் தொடர்பாகவும் இந்த புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 



  • Oct 22, 2025 18:12 IST

    சாத்தனூர் அணையில் 9,000 கன அடி வரை நீர் திறப்பு 

    சாத்தனூர் அணையில் இருந்து மாலை 6 மணியளவில் 9,000 கன அடி வரை நீர் திறக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரூர், ஊத்தங்கரை, கல்லாறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்படுகிறது. அணையில் இருந்து தற்போது 5,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் 9,000 கன அடியாக அதிகரிக்கப்படுகிறது.

     



  • Oct 22, 2025 17:53 IST

    தாளவாடி சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த கனமழை - தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்

    சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையால் சிக்கள்ளி தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்தது.



  • Oct 22, 2025 17:12 IST

    ஜவ்வாது மலை அடிவாரத்தில் கனமழை - நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

    திருவண்ணாமலை ஜவ்வாது மலை அடிவாரத்தில் கனமழை பெய்து வருவதால் நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.



  • Oct 22, 2025 16:34 IST

    புழல் ஏரியில் இருந்து நீர் திறப்பு - 750 கன அடியாக அதிகரிப்பு

    புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 750 கன அடியாக அதிகரித்துள்ளது. புழல் ஏரிக்கு வினாடிக்கு 1465 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.



  • Oct 22, 2025 15:41 IST

    வீடூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பால், புதுச்சேரி சங்கராபரணி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

    விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பால், புதுச்சேரி சங்கராபரணி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது, மீறினால் வழக்குப்பதிவு செய்யப்படும் என கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Oct 22, 2025 15:08 IST

    கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் பணிகளை அரசு தொடரலாம்: ஐகோர்ட் உத்தரவு

    சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழைநீர் சேமிப்பு குளங்கள் உள்ளிட்ட திட்டங்களை அரசு தொடர்ந்து மேற்கொள்ளலாம்; தனி நீதிபதியின் இடைக்கால உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பசுமைப் பூங்கா உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிராக தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்தது.



  • Oct 22, 2025 14:19 IST

    காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம்

    தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு இல்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.



  • Oct 22, 2025 14:19 IST

    மழை பாதிப்புகளை ஆய்வுசெய்த பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு

    தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தில் மழை பாதிப்புகளை ஆய்வுசெய்த பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்தித்தார். விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை முழுமையாக கொள்முதல் செய்யவில்லை. நெல் கொள்முதல் செய்யப்படாததால் சாலைகளில் நெல்லை விவசாயிகள் கொட்டி வைத்துள்ளனர். சாலையில் கொட்டி வைத்துள்ள நெல்மணிகள் முளைத்ததால் விவசாயிகள் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர்.



  • Oct 22, 2025 13:33 IST

    பள்ளி வளாகங்களில் மழைநீரை அகற்ற  அன்பில் மகேஸ் உத்தரவு

    மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளி வளாகங்களில் தேங்கியுள்ள மழைநீரை உடனே அகற்ற உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளில் மின்கசிவு ஏதேனும் உள்ளதா என ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மழையின்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



  • Oct 22, 2025 13:29 IST

    நெல் கொள்முதல் நிலையங்களுக்கு உரிய நேரத்தில் லாரி அனுப்பவில்லை;  மழையில் முளைத்த நெல் மூட்டைகள் - இ.பி.எஸ் ஆய்வு

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு உரிய லாரிகள் அனுப்பப்படாததால், எடை போட்ட நெல் மூட்டைகள் முளைத்துவிட்டதாகக் குற்றம்சாட்டி ஆய்வு மேற்கொண்டார்.

    அவர் மேலும் கூறுகையில், "தினமும் 2,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்திருந்தால் தேக்கமடைந்து இருக்காது" என்றும் தெரிவித்தார்.



  • Oct 22, 2025 12:34 IST

    ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட், யெல்லோ அலர்ட் - கலர் கலராக எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

    சென்னை வானிலை ஆய்வு மையம், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான (Red Alert - 20.4 செ.மீ.க்கு மேல்) ரெட் அலர்ட் விடுத்துள்ளது 
     
    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் (Orange Alert - 11.5 - 20.4 செ.மீ.) விடுக்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான (Yellow Alert - 6.4 - 11.5 செ.மீ.) யெல்லோ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.



  • Oct 22, 2025 12:21 IST

    திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம்

     

    தமிழ்நாட்டில் திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 20.4 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்யும் என்பதால் சென்னை வானிலை ஆய்வு மையம்  ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.



  • Oct 22, 2025 12:16 IST

    வானகரம் பகுதியில் சாய்ந்த மரத்தை அகற்றி நடவடிக்கை - மதுரவாயல் எம்.எல்.ஏ

    மதுரவாயல் எம்.எல்.ஏ கணபதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, வடகிழக்கு பருவ மழை காரணமாக மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வானகரம் ஊராட்சி, ஓடமா நகர், கணபதி நகர், ஆண்டாள் நகர், வள்ளியம்மாள் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்வாய்கள், சாலைகளை ஆய்வு செய்த பின்னர் ஓடமா நகர் பிள்ளையார் கோயில் தெருவில் மழையினால் சாய்ந்துள்ள மரத்தை உடனடியாக அகற்றுவதற்கும் இன்று 22.10.2025 காலை 7.00 மணியளவில் துறை சார்ந்த அதிகாரிகளை வலியுறுத்தி நடவடிக்கை மேற்கொண்ட போது.  இந்நிகழ்வில் ஒன்றிய கழக நிர்வாகிகள் கு.சதீஷ்குமார், A.M.பர்மன்அலி, N.M.ஜானகிராமன் ஆகியோர்  உடனிருந்தார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.



  • Oct 22, 2025 12:09 IST

    பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: சென்னை தி.மு.க நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

    பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்துத் சென்னை அண்ணா அறிவாலயத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகிகள் பங்கேற்றனர். 



  • Oct 22, 2025 12:06 IST

    கோவையில் கனமழை: காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலையில் விழுந்த மின் கம்பம்; போக்குவரத்து பாதிப்பு. 

    கோவை கனமழை காரணமாக, காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலையில் மின் கம்பம் சாய்ந்து சாலையின் நடுவே விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காவல்துறை உதவியுடன் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, சரி செய்யும் பணியில் மின் வாரியத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.



  • Oct 22, 2025 11:57 IST

    நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்!

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் அறுவடைக்குத் தயாராக நெற்பயிர்கள் பலத்த மழையினால் அடியோடு சாய்ந்தது; நீரில் மூழ்கி வீணான பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



  • Oct 22, 2025 11:45 IST

    தினமும் 2000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டிருந்தால் தேக்கமடைந்திருக்காது- இபிஎஸ்

    தினமும் 2000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டிருந்தால் நெல் மூட்டைகள் தேக்கமடைந்து இருக்காது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு உரிய லாரிகள் அனுப்பாததால், எடை போட்ட நெல் மூட்டைகள் மழையில் முளைத்துவிட்டன. 

    தஞ்சை மாவட்டம் காட்டூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் இபிஎஸ் பேட்டி

     



  • Oct 22, 2025 11:43 IST

    கொட்டும் மழையில் இபிஎஸ் ஆய்வு

    தஞ்சாவூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எடப்பாடி பழனிசாமி நேரடி ஆய்வு செய்தார். தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகளையும், மழையில் முளைத்த நெல் மணிகளையும் பார்வையிட்டு, விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.



  • Oct 22, 2025 11:42 IST

    சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்த இடங்கள்!

    சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பதிவாகி உள்ளது. 

    12 செ.மீ. மழை - எண்ணூர்.

    11 செ.மீ. மழை - மதுரவாயல், நெற்குன்றம்.

    10 செ.மீ. மழை - வடசென்னை, வளசரவாக்கம்.

    9 செ.மீ. மழை - மணலி, வடபழனி, அம்பத்தூர், நுங்கம்பாக்கம், அமைந்தகரை, துரைப்பாக்கம், கோரட்டூர், விம்கோ நகர்.

    8 செ.மீ. மழை - MGR நகர்.

    7 செ.மீ. மழை - மத்திய சென்னை, கண்ணகி நகர் மற்றும் சூளைமேடு.



  • Oct 22, 2025 11:40 IST

    கோவை கனமழை: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

    கோவை கனமழை காரணமாக, காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலையில் மின் கம்பம் சாய்ந்து சாலையின் நடுவே விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. காவல்துறை உதவியுடன் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, சரி செய்யும் பணியில் மின் வாரியத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்!



  • Oct 22, 2025 11:32 IST

    கொசஸ்தலை ஆற்றில் நீர் திறப்பு அதிகரிப்பு

    பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்படும் நீர் வினாடிக்கு 4,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 



  • Oct 22, 2025 11:22 IST

    பேராற்றில் கடும் காட்டாற்று வெள்ளம்

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக, பேராற்றில் கடும் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் விளைவாக, ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் வெள்ளத்தில் முழுவதுமாக மூழ்கியது. இதனால், அப்பகுதியில் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.



  • Oct 22, 2025 11:03 IST

    9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

    தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பிற்பகல் 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம்



  • Oct 22, 2025 11:00 IST

    சென்னையில் மீண்டும் மழை

    சென்னையில் இன்று காலை சில பகுதிகளில் வெயில் காட்டத் தொடங்கிய நிலையில், எம்.ஆர்.சி. நகர், அடையாறு, மயிலாப்பூர், ராயப்பேட்டை பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.



  • Oct 22, 2025 10:59 IST

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கனஅடி நீர் வெளியேற்றம்

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 100 கன அடியில் இருந்து 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 



  • Oct 22, 2025 10:58 IST

    குன்னூர் பேரக்ஸ் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

    குன்னூர் - உதகை இடையே தொடர் மழையின் காரணமாக2வது மாற்றுப் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு ராட்சதப் பாறைகள் விழுந்துள்ளன. குன்னூர் பேரக்ஸ் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.



  • Oct 22, 2025 10:37 IST

    முன்கூட்டியே தண்ணீர் திறப்பு

    செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகியவற்றில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது, மிக கன மழை பெய்தாலும் கடலைச் சென்றடையும்;  பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை

     - நீர்வளத்துறை 



  • Oct 22, 2025 10:32 IST

    உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

    சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

    வீடியோ: சன் நியூஸ்



  • Oct 22, 2025 10:25 IST

    இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

    விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், திருச்சிராப்பள்ளி, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி மற்றும்
    புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும்.

    வானிலை ஆய்வு மையம்



  • Oct 22, 2025 09:29 IST

    தமிழகத்தை ஒட்டி நகர்ந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

    வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை ஒட்டி நகர்ந்து அடுத்து 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வட தமிழகம், புதுவை வழியே கரையை கடக்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்பு குறைந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • Oct 22, 2025 09:26 IST

    சொகுசு பேருந்து- அரசுப்பேருந்து நேருக்குநேர் மோதி விபத்து

    சென்னை நோக்கி சென்ற சொகுசு பேருந்தும், சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு சென்ற அரசு பேருந்தும் விழுப்புரம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து நடந்த இடத்தில் கிரேன் உதவியுடன் பேருந்துகள் அப்புறப்படுத்தப்பட்டனர்.



  • Oct 22, 2025 09:12 IST

    கனமழை: கட்டுப்பாட்டு அறையில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

    சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அங்கு மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர், மாநில அரசு கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.



  • Oct 22, 2025 09:07 IST

    கனமழை: குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

    கனமழை எச்சரிக்கையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடலோர கிராமங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடலோர பகுதிகளில் 6,000க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.



  • Oct 22, 2025 09:05 IST

    சென்னை: இன்று தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

    சென்னை, தாம்பரம், ஆவடி திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. பருவமழையின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை, நிவாரணப் பணிகள் குறித்து வழிகாட்டு நெறிமுறை வழங்குவது தொடர்பாக திமுக நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். கூட்டத்தில் எம்எல்ஏக்கள், மேயர்கள், கவுன்சிலர்கள், மாநகர, நகர, பகுதி, வட்ட செயலாளர்கள் பங்கேற்க அறிவுறுத்தப்பட உள்ளது.



  • Oct 22, 2025 09:02 IST

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர்திறப்பு அதிகரிப்பு

    செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஏரியில் இருந்து 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளது. கனமழை எச்சரிக்கையாக நேற்று 100 கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், இன்று காலை 10 மணி அளவில் 500 கன அடியாக அதிகரிக்க உள்ளனர்.



  • Oct 22, 2025 08:43 IST

    கனமழை: 19 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்கள்:

    செங்கல்பட்டு

    திருவள்ளூர்

    கடலூர்

    விழுப்புரம்

    ராணிப்பேட்டை

    கள்ளக்குறிச்சி

    மயிலாடுதுறை

    திருவாரூர்

    தஞ்சாவூர்

    சிவகங்கை

    காஞ்சிபுரம்

    திருச்சி

    பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்கள்:

    சென்னை

    புதுக்கோட்டை

    சேலம்

    பெரம்பலூர்

    நாமக்கல்

    திருப்பூர்

    கரூர்

    அந்தந்த மாவட்டங்களில் நிலவும் வானிலை மற்றும் நீர்நிலைகளின் நிலவரத்தை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர்கள் இந்த விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். கனமழை தொடர வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.



  • Oct 22, 2025 08:39 IST

    திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா கோலாகலத் தொடக்கம்

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருள சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் அக்.27 மாலை கோயில் கடற்கரையில் நடைபெறவுள்ளது.



  • Oct 22, 2025 08:13 IST

    12 மாவட்டங்களுக்கு மழை கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

    வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு மற்றும் மீட்பு பணிகளை விரைவுபடுத்த, 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை, தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. திருவள்ளூர் - கார்த்திகேயன், மேலாண் இயக்குநர், எல்காட்

    காஞ்சிபுரம் - கந்தசாமி, மேலாண் இயக்குநர், தாட்கோ

    செங்கல்பட்டு - கிரந்திகுமார் பாடி, மேலாண் இயக்குநர், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம்

    விழுப்புரம் - ராமன், இயக்குநர், தொழிலாளர் நலத்துறை

    கடலுார் - மோகன், இயக்குநர், சுரங்கம் மற்றும் கனிம வளம்

    மயிலாடுதுறை - கவிதா ராமு, மேலாண் இயக்குநர், கோ - ஆப்டெக்ஸ்

    திருவாரூர் - ஆனந்த், ஆணையர், ஆதிதிராவிடர் நலத்துறை

    நாகப்பட்டினம் - அண்ணாதுரை, மேலாண் இயக்குநர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்

    தஞ்சாவூர் - கிருஷ்ணன் உன்னி, நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம்

    கள்ளக்குறிச்சி - வெங்கடபிரியா, செயலர், மாநில தேர்தல் ஆணையம்

    அரியலுார் - விஜயலட்சுமி, ஆணையர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி

    பெரம்பலுார் - லட்சுமி, ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை



tamilnadu rain Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: