மாநிலங்களவைத் தேர்தல் : ஸ்டாலினிடம் மாற்று வேட்பாளரை நான் தான் ஏற்பாடு செய்யக் கூறினேன் – வைகோ

என்னுடைய மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டால் இளங்கோ தன்னுடைய மனுவை வாபஸ் வாங்கிவிடுவார்

Tamil Nadu News Today Live Updates
Tamil Nadu News Today Live Updates

Tamil Nadu Rajya Sabha elections Vaiko Interview : வருகின்ற 18ம் தேதி தமிழகத்தில் ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக சார்பில் ஏற்கனவே தொ.மு.ச பேரவை பொதுச்செயலாளர் சண்முகமும், வக்கீல் வில்சனும் போட்டியிடுகிறார்கள். இந்நிலையில், கூட்டணி ஒப்பந்தத்தின் அடிப்படையில் வைகோ மதிமுக சார்பில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் நிலை உருவானது. ஆனால் அவர் மீதான தேசத் துரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக சார்பில் மக்களவைக்கு போட்டியிட என்.ஆர். இளங்கோ மனு கொடுத்துள்ளதால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசினார் வைகோ. அப்போது நான் ராஜ்யசபா உறுப்பினர் ஆக வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள். ஸ்டாலினின் எண்ணமும் அதுவே. அப்படி போட்டியிட்டால் மட்டுமே ஒரு இடம் வழங்க முடியும் என்று கருதி தான் கூட்டணி ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் தேச துரோக வழக்கின் காரணமாக தண்டனை கிடைத்துள்ளது. அதனால் நானே தான் மாற்று வேட்பாளரை ஏற்பாடு செய்யுமாறு கூறினேன்.

2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றால் மட்டுமே தேர்தலில் போட்டியிட இயலாது. எனவே என்னுடைய மனுவை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகின்றேன். என்னுடைய மனு நிராகரிக்கப்பட்டால் என்.ஆர். இளங்கோ எம்.பி. ஆவார். என்னுடைய மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டால் இளங்கோ தன்னுடைய மனுவை வாபஸ் வாங்கிவிடுவார் என்று வைகோ கூறியுள்ளார்.

மேலும் படிக்க : வைகோ, எம்.பி. ஆக முடியுமா? சிறைத் தண்டனை வழங்கிய வழக்குப் பின்னணி

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu rajya sabha elections vaiko interview i told mk stalin to find an alternative says mdmk chief vaiko

Next Story
ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை.. சரவணபவன் ராஜகோபால் அவகாசம் கோருகிறார்Tamil Nadu news today
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com