குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் வசதிபடி ரேசன் கடைக்கு வந்து கைரேகை பதிவு செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளின் வாயிலாக பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ரேஷன் கடைகளில் நடைபெறும் குளறுபடிகளை தவிர்க்கும் பொருட்டு ரேஷன் கார்டுகளில் இருக்கும் உறுப்பினர் ரேஷன் கடைகளுக்கு நேரில் வந்தால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் எனவும், கைரேகை பதிவு கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இதனையடுத்து குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் வசதிபடி ரேசன் கடைக்கு வந்து கைரேகை பதிவு செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
ரேஷன் கடைகளில், அத்தியாவசிய பொருட்கள் பெறும் பயனாளிகளின் குடும்ப உறுப்பினர் விரல் ரேகை வைக்கப்படும் போது, ஆவணங்கள் எதுவும் கேட்கக்கூடாது.
ரேஷன் கார்டுதாரர்களின் வசதியின்படி ரேஷன் கடைக்கு வந்து, விரல் ரேகை பதிவு செய்து கொள்ளலாம். மாறாக, கட்டாயப்படுத்தி கடைக்கு அழைத்து சிரமம் ஏற்படுத்த கூடாது. விரல் ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ளப்படவில்லை எனில், பொருட்கள் வழங்கப்படாது என்ற தவறான தகவலை கூறக்கூடாது என ஊழியர்களை அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“