Advertisment

Tamil Nadu Weather News: மயிலாடுதுறையில் வெள்ளம்: உப்பனாறு கரை உடைந்து கிராமத்தினுள் புகுந்த வெள்ளநீர்

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான கனமழை பெய்யக்கூடும்.

author-image
WebDesk
New Update
Tamil Nadu Weather News: மயிலாடுதுறையில் வெள்ளம்: உப்பனாறு கரை உடைந்து கிராமத்தினுள் புகுந்த வெள்ளநீர்

TN Rains

Tamil Nadu weather report today: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டதால், நவம்பர் 12ஆம் தேதி (இன்று) வரை வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment

இதனால், தமிழகத்தில் இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்ட நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இன்று வங்கக்கடலில் நிலவும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை, நாளை அரபிக்கடலை நோக்கி நகரும் என்று கூறப்படுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்கிற தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 18:36 (IST) 12 Nov 2022
    நாளை மீனவர்களுக்கு எச்சரிக்கை

    குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


  • 16:50 (IST) 12 Nov 2022
    செம்பரம்பாக்கம் ஏரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

    தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, நீர் வரத்து 1510 கன அடியாக இருப்பதால், மாலை 3 மணிக்கு மேல் ஆயிரம் கன அடி நீரை வெளியேற்ற காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


  • 15:36 (IST) 12 Nov 2022
    உப்பனாறு கரை உடைந்து கிராமத்தினுள் புகுந்த வெள்ளநீர்

    மயிலாடுதுறையில் பெய்த கனமழையின் காரணமாக, உப்பனாறு கரை உடைந்து கரையோரத்தில் உள்ள பகுதிகளை மூழ்கடித்தது.

    சூரக்காடு கிராமத்தில் உள்ள வீடுகள் அனைத்தும் வெள்ளநீரில் மூழ்கியதால், குழந்தைகளை மட்டுமே காப்பாற்ற முடிந்தது என்று மக்கள் தங்களது வேதனையை தெரிவித்துள்ளனர்.


  • 14:41 (IST) 12 Nov 2022
    122 ஆண்டுகளில் இல்லாத கனமழை

    கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சீர்காழியில் 44 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


  • 13:12 (IST) 12 Nov 2022
    4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்

    தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


  • 12:45 (IST) 12 Nov 2022
    மழை பெய்தாலும் மின்வெட்டு இல்லை- செந்தில் பாலாஜி

    "சென்னையில் அனைத்து மின் நுகர்வோர்களுக்கும், இணைப்பை பெற்றவர்களுக்கும் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகின்றன.

    தமிழகம் முழுவதும் கடுமையான மழை பெய்தாலும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவெண்காடு பகுதியில் 110 கே.வி. பழுதடைந்த காரணத்தினால், 2 மணி நேரம் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

    சென்னையில் சிறப்பு மின்விநியோக பணியில் 1,440 நபர்கள் பகலிலும், 600 நபர்கள் இரவிலும் வேலை செய்துவருகின்றனர்", என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகிறார்.


  • 11:55 (IST) 12 Nov 2022
    இன்று இரவு 11 மணிக்கு சென்னைக்கு பலத்த மழை

    இன்று நள்ளிரவு 11 மணிக்கு மேல் தமிழகத்தில் உள்ள வட மாவட்டங்களிலும் கொங்கு மண்டலத்திலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


  • 11:54 (IST) 12 Nov 2022
    2,50,000 கொசு வலைகள் தயாராக உள்ளது

    சென்னை முழுவதும் மிதமான மற்றும் கனமழையும் பெய்து வருகிறது. இன்று திரு.வி.க. நகர் மண்டலத்தில் மற்றும் 15,000 குடும்பங்களுக்கு கொசு வலை வழங்கப்பட உள்ளது.

    2,50,000 கொசு வலைகள் தயாராக உள்ளது. சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை ஒவ்வொரு பகுதியாக இந்த திட்டத்தை அளித்து வருவதாகவும், முதல் கட்டமாக சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு, நீர் நிலைகள் அருகில் வசிக்கும் மக்களுக்கு மற்றும் தாழ்வான பகுதியில் இருக்கும் மக்களுக்கு இந்த கொசு வலைகள் வழங்கப்பட உள்ளது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.


  • 11:02 (IST) 12 Nov 2022
    இன்று இரவு 11 மணிக்கு சென்னைக்கு பலத்த மழை

    இன்று நள்ளிரவு 11 மணிக்கு மேல் தமிழகத்தில் உள்ள வட மாவட்டங்களிலும் கொங்கு மண்டலத்திலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


  • 10:56 (IST) 12 Nov 2022
    சீர்காழி அருகே கரையை கடக்கும் காற்று சுழற்சி

    வங்கக்கடலில் உருவான இந்த காற்று சுழற்சி சீர்காழி அருகே கரையை கடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழகத்தில் உள்ள நாகப்பட்டினம், காரைக்குடி, மதுரை, நெல்லை, நாகர்கோவில், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களை தவிர அனைத்து இடங்களிலும் மழை பெய்து வருகிறது.


  • 17:21 (IST) 11 Nov 2022
    நாளை 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

    தமிழகத்தில் நாளை (நவம்பர் 12) அன்று நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், கோயம்பத்தூர், திருப்பூர், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், அரியலூர், திருவள்ளூர், சென்னை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு ஆரஞ்சு அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.


  • 16:21 (IST) 11 Nov 2022
    போர்க்கால அடிப்படையில் மழைநீர்த் தேக்கம் அகற்றும் பணிகள்

    போர்க்கால அடிப்படையில் மழைநீர்த் தேக்கம் அகற்றும் பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பெருநகர சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.

    திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட மாதவரம் நெடுஞ்சாலையில் மழைநீர் வடிகால் இணையும் இடத்தில் மழைநீர் வெளியேறுவதை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


  • 15:11 (IST) 11 Nov 2022
    மழைநீரில் வேளச்சேரி ரயில்வே சுரங்கப்பாதை மூழ்கியது

    தொடர்ந்து பெய்யும் பருவமழையின் காரணத்தால், சென்னை வேளச்சேரி ரயில்வே சுரங்கப்பாதை மழைநீரில் மூழ்கி போக்குவரத்தை பாதித்துள்ளது.

    பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சுரங்கபாதையின் முகப்பில் தடுப்புகளை ரயில்வே நிர்வாகம் அமைத்துள்ளது.


  • 14:50 (IST) 11 Nov 2022
    நவம்பர் 15 வரை மீனவர்களுக்கு எச்சரிக்கை

    நவம்பர் 15 அன்று வரை தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


  • 14:13 (IST) 11 Nov 2022
    தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, தி.மலையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூரில் கனமழைக்கும், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரத்திலும் கன முதல் மிககனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


  • 14:08 (IST) 11 Nov 2022
    நவ்.,16 அன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்

    நவம்பர் 16ஆம் தேதி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


  • 13:03 (IST) 11 Nov 2022
    சென்னை மாநகராட்சியின் உதவி எண்கள்

    மழையால் பாதிக்கப்படும் மக்களுக்காக சென்னை மாநகராட்சி அவசர உதவி எண்களை தெரிவித்துள்ளது.

    044 - 2561 9206, 044 - 2561 9207, 044 - 2561 9208

    வாட்ஸ் ஆப் எண்: 94454 77205

    மேலும், சென்னை மாநகராட்சியின் 'நம்ம சென்னை செயலி' மூலம் அல்லது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் மூலமாக பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.


  • 12:37 (IST) 11 Nov 2022
    சென்னை மக்களுக்கு உதவ அனைத்து வசதிகளும் தயார்

    "மழைநீர் தேங்கினால் அரை மணி நேரத்திற்குள் அகற்றப்படும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது.

    907 மோட்டார்கள் தயார் நிலையில் இருக்கிறது. ஆனால், தற்போது மழைநீர் தேங்கி நிற்கும் இடங்களில் 114 மோட்டார்கள் தான் செயல்பாட்டில் உள்ளது.

    தேவைப்படும் இடங்களுக்கு மோட்டார்கள், உணவு, நீர் போன்ற அனைத்து வசதிகளும் செய்துதர தயார்படுத்தி வைத்துள்ளோம்" என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.


  • 12:10 (IST) 11 Nov 2022
    சென்னையில் கொட்டும் மழையில் அமைச்சர் வேலு நேரில் ஆய்வு

    சென்னையில் தொடரும் மழையின் தீவிரத்தினால், மழைநீர் வடிகால் பணிகள் குறித்து நகர் மற்றும் அதனின் சுற்றுவட்டார பகுதிகளை பார்வையிட அமைச்சர் எ.வ.வேலு சென்றுள்ளார்.


  • 12:06 (IST) 11 Nov 2022
    சென்னையில் கொட்டும் மழையில் அமைச்சர் வேலு நேரில் ஆய்வு

    சென்னையில் தொடரும் மழையின் தீவிரத்தினால், மழைநீர் வடிகால் பணிகள் குறித்து நகர் மற்றும் அதனின் சுற்றுவட்டார பகுதிகளை பார்வையிட அமைச்சர் எ.வ.வேலு சென்றுள்ளார்.


  • 11:26 (IST) 11 Nov 2022
    சென்னையில் தேவைக்கேற்ப மோட்டார்கள் அனுப்பப்படும்

    சென்னையில் இன்று காலை வரை சராசரியாக 64.5 மில்லிமீட்டர் மழை பெய்துள்ள நிலையில், பாதிக்கப்படும் இடங்களுக்கு மோட்டார்கள் அனுப்பப்படும் என்று பேரிடர் கால அவசர கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையத்தில் ஆய்வு மேற்கொண்டு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.


  • 11:00 (IST) 11 Nov 2022
    சென்னையில் 20 மழைநீர் வெளியேற்றும் மோட்டார்கள் அதிகரிப்பு

    சென்னையில் மழைநீர் வெளியேற்றும் மோட்டர்களின் எண்ணிக்கை 910 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 115 மோட்டார்கள் மழைநீர் வெளியேற்ற செயல்படும் நிலையில், மீதமுள்ள மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.


  • 10:50 (IST) 11 Nov 2022
    37 மாவட்டங்களில் மழை நீடிக்கும்

    தமிழகத்தில் 37 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.


Tamil Nadu Chennai Tamilnadu Weather Weather Forecast Report
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment