scorecardresearch

மோசடி ஆவணங்களுக்கு முடிவுரை: மத்திய சட்டத்தில் திருத்தம் செய்து சாதித்த தமிழக பதிவுத் துறை

Tamil Nadu News: தமிழக பதிவுத்துறையில் ஒரு புதிய முயற்சியாக அமையவிருக்கும் ‘மோசடி ஆவணப்பதிவு ரத்து செய்யும்  அதிகாரம்” நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.

மோசடி ஆவணங்களுக்கு முடிவுரை: மத்திய சட்டத்தில் திருத்தம் செய்து சாதித்த தமிழக பதிவுத் துறை

Tamil Nadu News: தமிழக பதிவுத்துறையில் ஒரு புதிய முயற்சியாக அமையவிருக்கும் ‘மோசடி ஆவணப்பதிவு ரத்து செய்யும்  அதிகாரம்” நடைமுறைப் படுத்தப்படவுள்ளது. இதனை வரும் செப்டம்பர் 28ஆம் தேதியன்று, தமிழக முதலமைச்சர் துவக்கி வைக்கவுள்ளார்.  

இதுவரை நில பதிவுகளின் மோசடியால் பாதிக்கப்பட்டு, தங்களது சொத்துக்களை இழந்த உண்மையான நில உரிமையாளர்களுக்கு உரிய விசாரணையுடன் அவர்களது சொத்துக்கள் மீட்கப்பட்டு  வழங்கப்படும்.

ஒன்றிய சட்டமான பதிவு சட்டம், 1908ஆம் ஆண்டில் உரிய சட்ட திருத்தும் கொண்டுவரவேண்டுமென சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்று மேதகு குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாய் தமிழ்நாட்டின் பதிவுத்துறை இந்த முன்னெடுப்பைச் எடுத்துள்ளது. தமிழக பதிவுத் துறைக்கு வழங்கப்பட உள்ள இந்த அதிகாரம், மோசடி பதிவுகளை முற்றிலும் முடிவுக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோசடி பதிவுகளுக்கு தெரிந்தே துணை போகும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை தொடரும்படி சட்ட திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ்., வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, பதிவுத் துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி ஐ.ஏ.எஸ், பதிவுத் துறை தலைவர் சிவன் அருள் உள்ளிட்டோரின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் இது சாத்தியமானது என பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu registration department amending central act for fraudulent documents