/tamil-ie/media/media_files/uploads/2022/08/student-fall-2.webp)
அரசு பேருந்தில், கூட்ட நெரிசலால் படியில் நின்று பயணித்த பள்ளி மாணவர் கிழே விழும் வீடியோ சமூகவலைதளங்களில் வைராகி வருகிறது.
மேல்மருவத்தூர் அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் அச்சரபாக்கத்தில் செல்லும் பேருந்தில், அதிக கூட்ட நெரிசல் காணப்பட்டது. இந்த பாதையில் குறைந்த பேருந்து போக்குவரத்தே இருப்பதாக இப்பகுதியினர் கூறுகின்றனர். இந்நிலையில் இதுபோன்ற கூட்ட நெரிசல் உள்ள பேருந்தில் சென்றுகொண்டிருக்கும்போது, படியில் நின்று பயணித்த பள்ளி மாணவர் கிழே விழுந்துள்ளார். இதை பேருந்துக்கு பின்னால் வந்த இரு சக்கர வாகன ஓட்டுநர் இந்த நிகழ்வை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
School student falls from a moving public bus in Tamil Nadu’s Chengalpattu district on Tuesday pic.twitter.com/0jWhOkz1ru
— Express Chennai (@ie_chennai) August 30, 2022
இந்நிலையில் ஏன் இப்படி ஆபத்தான பயணங்களை மக்கள் மேற்கொள்கிறார்கள் என்று பலர் கேள்வி எழுப்பினர். ஆனால் இந்த பகுதியில் பேருந்து சேவை குறைவு என்பதாலும், காத்திருந்தாலும் பேருந்துகள் கூட்ட நெரிசலில் வருவதால் வேறு வழியின்றி படியில் தொங்கிக்கொண்டு பணித்து வருகின்றனர் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.