டெட் தேர்வு குறித்து ஆசிரியர்கள் கவலைப்பட வேண்டாம்; பகுதிநேர ஆசிரியர்களுக்கு விரைவில் தீர்வு - அன்பில் மகேஷ்

ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கில் வெற்றி பெறுவோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நம்பிக்கை; பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தர விவகாரத்தில் விரைவில் தீர்வு கிடைக்கும் என்றும் பேட்டி

ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கில் வெற்றி பெறுவோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நம்பிக்கை; பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தர விவகாரத்தில் விரைவில் தீர்வு கிடைக்கும் என்றும் பேட்டி

author-image
WebDesk
New Update
anbil mahesh tet kovai

கோவையில் மாணவர்களுக்கான வேங்கார்ட் அகடாமி திறப்பு விழாவில் கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். 

Advertisment

அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்ததாவது; டெட் தேர்வின் ரிவ்யூ பெட்டிஷனில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த வழக்கு வருகிற 19 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இது போன்ற சட்டங்கள் வருவதற்கு முன்பாகவே, தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டு இருக்கின்ற ஆசிரியர்கள் இது பொருந்தும் என்று கூறுவது எந்த விதத்தில் சரியாக இருக்கும் என்பது தெரியவில்லை. இது குறித்து யாரும் கவலைபட வேண்டாம். தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களாகிய உங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். யாரும் பயப்பட வேண்டாம். எங்களுடைய ஆசிரியர்கள் நீங்கள், தமிழக ஆசிரியர்களை நாங்கள் பாதுகாக்காமல் வேறு யாரு? நிச்சயம் பாதுகாப்போம்.

பகுதி நேர ஆசிரியர்கள் குறித்து தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. பகுதி நேர ஆசிரியர்கள் முழுமையாக தங்களது பணியை செய்தவர்கள். அவர்கள் சில ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். அதன்படி அவர்களை உள்ளே வேகமாக எடுக்க கூடிய முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். இது பகுதி நேர ஆசிரியர்களின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக இருக்கும்.

Advertisment
Advertisements

ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் அன்பு கரங்கள் திட்டம் மூலம் 6500 பேர் பயன்டைந்து வருகின்றனர். இந்தத் திட்டம் மூலம் பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கு 18 வயது வரை மாதம் தோறும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. படிப்புக்கு நிதி ஒரு தடையாக இருந்துவிட கூடாது என்பதற்காக அந்த அந்த மாவட்ட ஆட்சியர் மூலம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்படுகிறது. அதே போல அந்த குழந்தைகள் கல்லூரிக்குச் செல்லும்போது அல்லது திறன் மேம்பாடு தேவைப்படும்போது அவற்றை அரசாங்கம் பார்த்து கொள்ளும். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

பி.ரஹ்மான், கோவை 

kovai Anbil Mahesh

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: